Go to full page →

பரீட்சிக்கிற செயல் முறை TamChS 251

வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகள்மூலம் தேவன் நம்மைச் சோதித்தறிகிறார். இருதயத்தில் இருப்பவற்றை சிறு சிறு விஷயங்கள்தாம் வெளிப்படுத்துகின்றன. சிறுசிறு கவனிப்புகளும், எண்ணற்ற சிறுசிறு நிகழ்வுகளும், வாழ்க்கையின் சாதாரண விஷயங்களில் மனிதாபத்துடன் நடந்துகொள்வதும்தான் வாழ்க்கையின் ஒட்டு மொத்த சந்தோஷத்திற்கும் காரணமாகின்றன. அன்பும் ஊக்கமும் பாசமுமான வார்த்தைகளைப் பேச மறுப்பதும், சாதாரண விஷயங்களில் மனிதாபத்துடன் நடந்துகொள்ளாததும்தான் வாழ்க்கையின் ஒட்டுமொத்த நிர்ப்பந்த நிலைக்கும் காரணமாகின்றன. நம்மைச் சுற்றியுள்ளவர்களின் நன்மைக்காகவும் சந்தோஷத்திற்காகவும் சுயத்தை மறுத்து வாழ்ந்த வாழ்க்கைபற்றிதான் பரலோகப் பதிவில் அதிகளவில் இடம்பெற்றிருக்கும். 32T, 133. TamChS 251.3

விதவைகளும் திக்கற்றோரும் கண்தெரியாதோரும் காது கேளாதோரும் நடக்கமுடியாதோரும் பல்வேறு வழிகளில் உபத்திரவத்திற்கு ஆளானோரும் தேவனுடைய வழிநடத்துதலின் படியே அவருடைய திருச்சபையுடன் கிறிஸ்தவ உறவில் நெருக்கமாக வைக்கப்பட்டிருக்கிறார்களெனக் கண்டேன்; அது தேவ மக்களை சோதித்தறிந்து, அவர்களுடைய மெய்யான குணத்தை வளர்ப்பதற்குத்தான். நாம் பரிவோடும் அன்போடும் பாரபட்சமின்றி தயவோடும் இந்த நபர்களை எவ்வாறு நடத்துகிறோமென தேவதூதர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நம் குணத்தைச் சோதிப்பதற்கு தேவன் கடைபிடிக்கிற வழி இது. வேதாகமம் சொல்கிற மெய்மார்க்கம் நம்மில் காணப்பட்டால், நம் சகோதரருக்காக கிறிஸ்துவின் அன்பையும் இரக்கத்தையும் அக்கறையையும் காட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம் என்பதை உணரலாம்; நாம் பாவிகளாகவும் அவருடைய கிருபைக்குத் தகுதியற்றவர்களாகவும் இருந்தபோது அவர் நம்மேல் ஈடு இணையற்ற அன்பைக் காட்டிய தால், அதற்கு நன்றிக்கடனாக நம் சகோதரர்மேல் ஆழமான அக்கறையையும் சுயநலமற்ற அன்பையும் காட்டுவதற்குக் குறைவாக வேறு எதுவும் செய்யமுடியாது. 13T. 511 TamChS 252.1