Go to full page →

முன்னுரை TamChS 6

ஊழியப்பணியை ஆர்வத்தோடும் அர்ப்பணிப்போடும் செய்யவேண்டியது அவசியம். இந்தப் பணி முக்கியமானது; இதைச் செய்யவேண்டிய வழி முறைகளையும், அதனால் கிடைக்கிற பிரதிபலன்களையும் அனைத்து ஊழியர்களுடைய கரங்களிலும் கிடைக்கவேண்டுமென்கிற ஆர்வம்தான், இதைக் குறித்த விரிவான ஆய்வுக்கு வழிநடத்தியது: இந்தத் தொகுப்பில் உள்ள மேற்கோள்களை ஒன்று சேர்க்க உதவியது. இந்தத் தொகுப்பானது கிறிஸ்தவ சேவையின் கலைக்களஞ்சியம். TamChS 6.1

கிறிஸ்தவ சேவை என்பது மிகவிசாலமான ஒரு களம். அது குறித்து தீர்க்கதரிசனஆவியில் எழுதப்பட்டுள்ளதை முழுவதுமாகத் தொகுத்து பின்வரும் பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளதெனச் சொல்லவில்லை. ஆனால், ஆத்தும ஆதாயம் என்கிற அறிவியலில், சத்தியம் என்கிற உயிர்நாடிபற்றி கிறிஸ்தவ ஊழியர் ஆழமாக அறிந்துகொள்வதற்கு இது உதவியாக இருக்கும். TamChS 6.2

பல்வேறு புத்தகங்களிலிருந்து தகவல்கள் எடுக்கப்பட்டாலும், ஆசிரியரின் கருத்தை அப்படியே சொல்லவேண்டும் என்பதில் தனிக்கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சபைப்பணியின் ஒவ் வொரு துறையிலும் உள்ள தலைவர்களுக்கும் ஊழியர்களுக்கும் இந்தத் தொகுப்பு பயன்தரும். மகா ஊழியப்பணியாளரும் இஸ்ர வேலர் செய்யவேண்டியது இன்னதென்று அறிந்து காலா காலங்களுக்குத் தகுந்த யோசனை சொல்லத்தக்கவரும் தேவனே. அவருடைய ஆவியால் தொடப்படுகிற ஆண்களும் பெண்களும் அதை உணர்ந்து போற்றுவார்களென்று நம்புகிறோம். TamChS 6.3

ஜெனரல் கான்ஃபரன்ஸின் ஊழியப்பணி இலாகாவில் பணியாற்றுகிற ஜெனரல் கான்ஃபரன்ஸ் பணியாளர்களையும் உள்ளூர் சபை பணியாளர்களையும் இந்த நேரத்தில் நன்றியோடு நினைவு கூருகிறோம். இந்தத் தொகுப்பை உருவாக்க அவர்கள் பல்வேறு புத்தகங்களை வாசித்து, அவற்றைக் குறிப்பிட்டுக் காட்டுவதில் உதவியாக இருந்தார்கள்; அவர்களுடைய ஆலோசனைகளும் அங்கீகாரமும் இந்தப்பணியை முழுமையாகச் செய்து முடிப்பதற்கு உதவியாக இருந்தன. TamChS 6.4

ஜெனரல் கான்ஃபரன்ஸின் தனியாள் ஊழியப்பணி இலாகா