Go to full page →

தீவிரம் TamChS 298

அற்புதங்களைச் செய்து, சத்தியத்தைப் பரப்புவது தேவனுடைய வழக்கமல்ல. தோட்டக்காரன் நிலத்தைப் பண்படுத்தாமல் இருந்தால், அந்த நிலத்தின் விளைச்சலை தேவன் அற்புதம் செய்து தடுப்பதில்லை. நமக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ள மகாநியதிகளின் படி அவர் கிரியை செய்கிறார்; ஞானமான திட்டங்களை உருவாக்குவதும் விளைவுகளை தேவன் கொண்டுவருவதற்கான வழிமுறைகளைச் செயல்படுத்துவதும் நம்பங்காகும். முயற்சியே எடுக்காமல், ஆவியானவர் தங்களைக் கட்டாயப்படுத்துவாரென்று காத்திருப்பவர்கள், இருளில் அழிவார்கள். தேவனுடைய ஊழியத்தில் எதுவுமே செய்யாமல், வெறுமனே உட்கார்ந்திருக்கக்கூடாது. 3SW, Dec. 1, 1903 TamChS 298.2

நற்செய்தி ஊழியப்பணியில் ஈடுபட்டிருக்கிற சிலர் பெலவீனர்களாக, வலிமையற்றவர்களாக, துணிவற்றவர்களாக, எளிதில் அதைரியமடைபவர்களாக இருக்கிறார்கள். ஊக்குவிக்கும் ஆற்றல் அவர்களிடம் இல்லை. ஆற்றலைக் கொடுக்கிற குணத்தின் நேர் மறையான தன்மைகள், அதாவது உற்சாகத்தைத் தரக்கூடிய தீர்மானமும் ஆற்றலும் அவர்களிடம் இல்லை. வெற்றிபெற விரும்புகிறவர்கள் தைரியத்தோடும் நம்பிக்கையோடும் இருக்கவேண்டும். நல்லொழுக்கங்களை அறிவது மட்டுமல்ல, அவற்றைச் செயல் படுத்துவதையும் வாழ்க்கையில் பெரிதாகப் பேணவேண்டும். 4GW, 290 TamChS 298.3

கிறிஸ்துவினுடைய சிலுவையின் வெற்றிகளை எங்கும் அறிவிக்கிற ஊழியர்கள் ஆண்டவருக்குத் தேவை. 5RH, May 6, 1890 TamChS 298.4

வாய்க்குள்ளேயே பேசிக்கொண்டு, ஆர்வமில்லாமல் சத்தியத்தை அறிவிக்கக்கூடாது; மாறாக தெளிவான, உறுதியான, தூண்டுகிற வார்த்தைகளால் அறிவிக்கவேண்டும். 68T, 16 TamChS 298.5

இந்தச் செய்தியைக் கொடுப்பதற்கு பேச்சில் வல்லவர்கள் தேவையில்லை. உள்ளதை உள்ளபடி, சத்தியத்தைப் புரட்டாமல் பேசவேண்டும். செயல்படுகிற மனிதர்கள் தேவை; திருச்சபையைச் சுத்திகரிக்கவும் உலகத்தை எச்சரிக்கவும் ஊக்கத்தோடும் வற்றா ஆற்றலோடும் பாடுபடுகிற மனிதர்கள் தேவை. 19T, 187 TamChS 298.6

தேவன் தமது திட்டத்திற்கு சோம்பேறிகளைப் பயன்படுத்தவே முடியாது. சிந்தனைமிக்க, அன்பான, பாசமான, ஊக்கமான ஊழியர்களை அவர் விரும்புகிறார். 29T, 411 TamChS 299.1