Go to full page →

விவேகமும் முன்யோசனையும் TamChS 312

தேவனிடம் நெகேமியா உதவிகேட்டு மன்றாடினபோது, எருசலேமைத் திரும்பக் கட்டவேண்டும் என்கிற தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றும்படிக்கு தனக்கு எந்தக் கவலையும் அல்லது பொறுப்பும் இல்லாததுபோல அவன் தன் கரங்களை மடித்துக் கொண்டு, எதுவும் செய்யாமல் இருக்கவில்லை. அந்த முயற்சியை வெற்றியடையச் செய்யும் உத்திரவாதமாக போற்றத்தக்க விவேகத்தோடும் முன்னறிவோடும் எல்லா ஏற்பாடுகளையும் செய்வதில் ஈடுபட்டான். ஒவ்வோர் அசைவையும் மிகுந்த எச்சரிப்போடு மேற் கொண்டான். 2SW, Mar. 15, 1904 TamChS 312.1

தேவ மக்கள் விசுவாசத்தோடு ஜெபித்தால் மட்டும் போதாது, கருத்தோடும் உண்மையோடும் செயல்பட வேண்டும் என்பதற்கு இந்தப் பரிசுத்தவான் நெகேமியாவுடைய முன்னுதாரணம் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கிறது. எவ்வளவு அதிகமாக இக்கட்டுகளை நாம் சந்திக்கிறோம். நமக்காக தேவன் தம் முன்னறிவின்படி செயல்பட்டபோதெல்லாம் எத்தனைமுறை அதைத் தடுத்திருக்கிறோம்; இதற்குக் காரணம் ஆவிக்குரிய வாழ்வில் விவேகத்திற்கும் முன்யோசனைக்கும் முயற்சிசெய்தலுக்கும் சம்பந்தமில்லை யென நாம் கருதுவதுதான்! இது பயங்கரமான ஒரு தவறு. தேவனுடைய திறமைமிக்க பணியாளர்களாக நம்மை மாற்றுகிற ஒவ்வோர் ஆற்றலையும் செயல்படுத்துவதும் பண்படுத்துவதும் நம் கடமை. நெகேமியாவின் காலத்தைப்போல இன்றும் பரிசுத்தமான முயற்சிகளை வெற்றியடையச் செய்வதற்கு கவனமிக்க சிந்தனையும், முதிர்ச்சியடைந்த திட்டங்களும் அவசியமாயிருக்கின்றன. 1SW, Mar. 15, 1904 TamChS 312.2