Go to full page →

மென்மை TamChS 314

கோபமூட்டப்படும்போது மென்மையாக நடந்துகொள்ள ஆத்துமாவைக் கட்டுப்படுத்தவேண்டும்; காராசாரமாக விவாதம் செய்வதைவிட அதிக வல்லமையுடன் சத்தியத்திற்கு ஆதரவாக அப்போது பேசமுடியும். 4DA, p. 353 TamChS 314.3

வாடிப்போகிற செடிகள்மேல் பெய்கிற பனியையும் மென்மையான சாரலையும்போல, பாவத்திலிருக்கிற மனிதர்களை ஆதாயப்படுத்த முயலும்போது பேசுகிற வார்த்தைகள் கனிவாக இருக்க வேண்டும். தேவனுடைய திட்டம் முதலாவது இதயத்தை அடைவது தான். சத்தியத்தைக் கூறும்போது, வாழ்க்கையைச் சீர்திருத்துவதற்கான வல்லமையை அதற்குக் கொடுப்பார் என்று நம்பி, அன்போடு பேசவேண்டும். அன்பினால் பேசின வார்த்தையை பரிசுத்த ஆவியானவர் ஆத்துமாவில் பதியச்செய்வார். 5 MH, 157 TamChS 314.4

பரிவான மனநிலையும் தயவும் அன்பான நடத்தையும் தவறு செய்கிறவர்களை இரட்சிப்புக்குள் வழி நடத்தும்; ஏராளமான பாவங்களை மூடும். உங்கள்குணத்தில் கிறிஸ்து வெளிப்படுவதால், உங்களோடு பழகும் அனைவரிலும் அது மனமாற்றத்தின் வல்லமையாகச் செயல்படும். அனுதினமும் கிறிஸ்து உங்களில் வெளிப்படட்டும்; தம் வார்த்தையின் சிருஷ்டிப்பு ஆற்றலை உங்கள்மூலம் அவர் வெளிப்படுத்துவார்; பிற ஆத்துமாக்களில் கர்த்தராகிய நம் தேவனின் அழகை மீண்டும் உருவாக்குவதற்கு மிருதுவான, நம்பகமான, ஆனால் மகத்தான செல்வாக்காக அது இருக்கும். 1MB, 129 TamChS 314.5