Go to full page →

தாழ்மை TamChS 321

தேவன் தம் சேவைக்காக ஆண்களையும் பெண்களையும் தேர்ந்தெடுக்கும்போது, ‘அவர்கள் கல்விகற்றவர்களா? பேச்சுத்திறன் மிக்கவர்களா? உலக வசதி படைத்தவர்களா?” என்றெல்லாம் கேட்டுத் தெரிந்தெடுப்பது இல்லை. “மற்றவர்களுக்கு என் வழியைப் போதிக்கக்கூடிய அளவுக்கு தாழ்மையோடு நடக்கிறார்களா? என்னுடைய வார்த்தைகளை அவருடைய வாய்களில் அருளலாமா? அவர்கள் என்னைப் பிரதிபலிப்பார்களா?” என்று தாம் கேட்கிறார். 27T, 144 TamChS 321.2

ஏழைகளுக்கும் புறக்கணிக்கப்பட்டோருக்கும் கைவிடப்பட்டோருக்கும் உதவி செய்ய நீங்கள் முயலும்போது, உங்களுடைய கௌரவம், மேன்மை போன்ற பொய்க்கால்களில் நின்றுகொண்டு அவர்களுக்கு ஊழியம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் நீங்கள் எதையும் சாதிக்கமுடியாது. 16T. 277 TamChS 321.3

சலசலப்பான முயற்சிகளால் நம் திருச்சபைகளை பெலமிக்கதாகவும் வெற்றிகரமானதாகவும் அவர்கள் மாற்றமுடியாது; தாழ்மையாகவும் அமைதியாகவும் செய்கிற வேலையால்தான் மாற்ற முடியும். அணிவகுப்பும் ஆராவாரமும் அல்ல; பொறுமையும் ஜெபமும் விடாமுயற்சியும் கூடிய பிரயாசமே பலன்தரும். 25T, 130 TamChS 322.1

தோல்வியால் உண்டாகும் நிந்தை பெரும்பாலும் நமக்கு ஓர் ஆசீர்வாதமாக அமைகிறது; ஏனென்றால், தேவனுடைய உதவியின்றி அவருடைய சித்தத்தைச் செய்ய நமக்குத் திறனில்லை என்பதைக் காட்டுகிறது. 3 PP, 633 TamChS 322.2

வீடு வீடாகச் சென்று ஊழியம் செய்வதற்கு ஒரு சாதாரண வீட்டுவாசியிடம் காணப்படும் தாலந்துகள் தேவை; மிகச்சிறந்த வரங்களைவிட இந்த ஊழியத்தால் அதிகம் சாதிக்கமுடியும். 49T, 37,38 TamChS 322.3

தேவனுடைய தூதுவர்கள் இந்த உலகத்தில் நசரேயனாகிய இயேசுவின் நாமத்தில் செய்கிற இந்த ஊழியத்தில் ஒட்டுமொத்த பரலோகமும் ஆர்வங் காட்டுகிறது. சகோதர சகோதரிகளே, இது ஒரு மாபெரும் பணி; நாம் அனுதினமும் நம்மை தேவனுக்குமுன் பாகத் தாழ்த்தவேண்டும்; நம்முடைய ஞானமே போதுமென நினைக்கக்கூடாது. ஊழியத்தில் ஊக்கத்தோடு இறங்கவேண்டும். நம்மைத் தாழ்மையாக்கும்படி தேவனிடம் நாம் ஜெபிக்கக்கூடாது; ஏனென்றால், தேவன் நம்மை ஆட்கொள்ளும்போது, அவர் நம்மைத் தாழ்த்துகிறவிதம் நமக்குச் சந்தோஷமாக இருக்காது. மாறாக, தேவனுடைய பலத்த கரத்தின்கீழ் ஒவ்வொரு நாளும் நம்மைத் தாழ்த்தவேண்டும். பயத்தோடும் நடுக்கத்தோடும் நம்முடைய இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படவேண்டும். ஏனெனில், தேவனே, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் நமக்குள் உருவாக்குவதால், அவர் நம்மூலமாகக் கிரியை செய்யும் போது, அவரோடு நாம் ஒத்துழைக்கவேண்டும். 5RH, Jul. 12, 1887 TamChS 322.4

குறுகலான வாசல் வழியாகப் பிரவேசிக்க பாடுபடவேண்டும். ஆனால் இந்த வாசற்கதவு கீல்முனைகளில் எளிதில் அசையாது. சந்தேகத்திற்குரிய குணங்களை இது அனுமதிக்காது. நமக்கு முன்னுள்ள ஒரு பரிசுப்பொருளுக்கு நாம் எவ்வளவு பிரயாசப்படுவோமோ, அந்த அளவுக்குத் தீவிரமாக நித்திய ஜீவனுக்காகப் பிரயாசப்படவேண்டும். பணமோ, நிலங்களோ, பதவியோ அல்ல; கிறிஸ்துவைப் போன்ற குணத்தைப் பெறுவதுதான் பரதீசின் கதவுகளை நமக்குத் திறந்துவிடும். கௌரவமும் அறிவுத்திறன்களும் அழியாத கிரீடத்தை நமக்குப் பெற்றுத்தரமாட்டா. சாந்தமும் மனத் தாழ்மையுமுள்ள கிறிஸ்துவை தங்கள் பெலனாக்கிக் கொண்டவர்கள்தாம் இந்த ஈவைப் பெறுவார்கள். 1 SW, April 16, 1903 TamChS 322.5

நற்செய்தி ஊழியம் செய்து, திரும்பியபிறகு, உங்களையே நீங்கள் புகழ்ந்துகொள்ளாதீர்கள்; மாறாக, கிறிஸ்துவை உயர்த்துங்கள்; கல்வாரிச் சிலுவைவை உயர்த்துங்கள். 25T, 596 TamChS 323.1

மேன்மைக்கு முன்னானது தாழ்மை. யோவான் ஸ்நானனைப் போல தேவனுக்கு முன்பாக தாழ்மையான ஓர் இடத்தைத் தெரிந்தெடுப்பவனை மனிதர்களுக்கு முன் உயரமான ஓர் இடத்தில் வைப்பதற்கு பரலோகம் தெரிந்தெடுக்கிறது. சிறுபிள்ளையைப் போலிருக்கும் சீடன்தான் தேவனுக்கு மிகவல்லமையாக ஊழியம் செய்கிறவனாயிருக்கிறான். சுயத்தை உயர்த்தாமல், ஆத்துமாக்களை இரட்சிக்க முயலுகிறவனோடுதான் பரலோக ஜீவிகள் ஒத் துழைக்க முடியும். 3DA, 436 TamChS 323.2