Go to full page →

பெற்றுக்கொள்வதற்கான நிபந்தனைகள் TamChS 330

அயலகத்தாருக்குக் கொடுக்கும்படி ஜீவ அப்பத்தை கெஞ்சிக் கேட்கிற அனைவரிடமும் பரிசுத்த ஆவியானவர் வருவார். 19T; 90 TamChS 330.1

கிறிஸ்துவோடு நம் இருதயங்களை ஐக்கியப்படுத்தும் போது, அவருடைய ஊழியத்திற்கு இசைவாக நம் வாழ்க்கை இருக்கும் போது, பெந்தெகொஸ்தே நாளில் சீடர்கள்மேல் ஊற்றப்பட்ட ஆவியானவர் நம்மேலும் ஊற்றப்படுவார். 28T, 246 TamChS 330.2

தேவனுடைய கிருபையின் ஐசுவரியங்கள் மனிதர்களுக்குக் கிடைக்கும்படி பூமியில் அருளப்படுவதை தேவன் எவ்விதத்திலும் தடுப்பதில்லை. 3COL, 419 TamChS 330.3

நாம் கெஞ்சிக்கேட்டு, ஏற்றுக்கொள்ளும்படிக்கு ஆவியானவர் காத்திருக்கிறார். 4COL, 121 TamChS 330.4

வல்லமையைப் பெற்றுக்கொள்ள இதுதான் வழி என்றால், ஆவியானவருடைய ஈவுக்காக நாம் ஏன் பசி தாகம் கொள்ளுவதில்லை? அதைக்குறித்து நாம் ஏன் பேசுவதில்லை? ஜெபிப்பதில்லை? பிரசங்கிப்பதில்லை? 5AA, 50 TamChS 330.5

நிறைவேறவேண்டிய விதத்தில் வாக்குத்தத்தத்தின் நிறை வேறுதலைப் பார்க்கமுடியவில்லை என்றால், அந்த வாக்குத் தத்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டிய பிரகாரம் நாம் புரிந்துகொள்ளவில்லை என்று அர்த்தம். அனைவருமே வருப்பத்தோடு இருந்திருந்தால், அனைவருமே ஆவியால் நிரப்பப்பட்டிருப்பார்கள். 6 AA, 50 TamChS 330.6

அனுதினமும் ஆவியானவருடைய ஞானஸ்நானத்தைப் பெறுவதற்காக, ஒவ்வோர் ஊழியரும் தேவனிடம் விண்ணப்பம் ஏறெடுக்கவேண்டும். கிறிஸ்தவ ஊழியர்கள் திட்டமிட்டு, புத்திசாலித்தனமாக அதைச் செயல்படுத்தும் வழியை அறியும்படிக்கு பரலோக ஞானத்தையும், விசேஷித்த உதவியையும் கேட்பதற்காக அவர்கள் கூட்டமாகக் கூடவேண்டும். தேவன் தாம் தெரிந்து கொண்ட தூதுவர்களை ஊழியக்களங்களில் தம் ஆவியால் அளவில்லாமல் ஆசீர்வதிக்கும்படி விசேஷமாக அவர்கள் ஜெபிக்க வேண்டும். 7 AA, 50,51 TamChS 330.7

கிறிஸ்தவர்கள்தங்களுக்கு இடையேயுள்ள சகல கருத்துவேறுபாடுகளையும் அகற்றிவிட்டு, தொலைந்துபோனோரின் இரட்சிப்புக்காக தங்களை ஒப்புக்கொடுக்க வேண்டும். வாக்குரைக்கப்பட்ட ஆசீர்வாதத்தை விசுவாசத்தோடு கேட்கும்போது, நாம் அதைப் பெற்றுக்கொள்ளலாம். 18T, 21 TamChS 330.8

சீடர்கள் தங்களுக்காக ஆசீர்வாதம் கேட்கவில்லை. ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட வேண்டுமென்கிற பாரத்தால் நிறைந்திருந்தார்கள். பூமியின் கடைசிமட்டும் சுவிசேஷத்தைக் கொண்டுசெல்ல வேண்டியிருந்தது; கிறிஸ்து வாக்குரைத்திருந்த வல்லமை தங்களுக்கு வேண்டுமென்று கேட்டார்கள். அப்போது பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்டார்; ஆயிரக்கணக்கானோர் மனமாற்றம் அடைந்தார்கள். 2SW, Aug. 1, 1905 TamChS 331.1

பரிசுத்த ஆவியானவர் எனும் ஈவை கிறிஸ்து தம் சபைக்கு வாக்குப் பண்ணியிருந்தார். அந்த வாக்குறுதி முதல் சீடர்களுக்குச் சொந்தமாக இருந்தது போலவே நமக்கும் சொந்தமாக இருக்கின்றது. மற்ற அனைத்து வாக்குறுதிகளையும்போல இதுவும் பந்தனைகளின் பேரில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்டவருடைய வாக்குத்தத்தத்தை அநேகர் நம்புகிறார்கள்; அவற்றைச் சொந்தங் கோருவதாகவும் சொல்கிறார்கள். கிறிஸ்துவைப்பற்றியும் பரிசுத்த ஆவியானவரைப்பற்றியும் பேசுகிறார்கள். ஆனாலும், எந்த நன்மையையும் பெறுவதில்லை. தெய்வீக ஏதுகரங்களால் தங்களுடைய ஆத்துமா கட்டுப்படுத்தப்படவும், வழிநடத்தப்படவும் தங்களை அர்ப்பணிப்பதில்லை. பரிசுத்த ஆவியானவரை நாம் பயன்படுத்த முடியாது. ஆவியானவர்தாம் நம்மைப் பயன்படுத்த வேண்டும். தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உருவாக்க தேவன் தம் மக்களில் செயல்படுகிறார். ஆனால், இதற்கு அநேகர் இணங்கமாட்டார்கள். தாங்களே தங்களைக் கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். அதனால்தான் பரலோக ஈவைப் பெறுவதில்லை. தேவனுக்காக தாழ்மையோடு காத்திருந்து, அவருடைய வழி நடத்துதலையும் கிருபையையும் எதிர்பார்க்கிறவர்களுக்கு மட்டுமே ஆவியானவர் கொடுக்கப்படுகிறார். அவர்கள் வேண்டிக்கொள்ளட்டும்’ என்று தேவவல்லமை காத்திருக்கிறது. வாக்குரைக்கப்பட்ட இந்த ஆசீர்வாதத்தை விசுவாசத்தோடு உரிமைகோரும்போது, அது மற்ற எல்லா ஆசீர்வாதங்களையும் கூடவே கொண்டு வருகிறது. கிறிஸ்துவினுடைய கிருபையின் ஐசுவரியங்களுக்கேற்ப இது கொடுக்கப்படுகிறது; ஒவ்வோர் ஆத்துமாவுக்கும் அதன் திறனுக்கேற்ப வழங்குவதற்கு அவர் ஆயத்தமாக இருக்கிறார். 3 DA, 672 TamChS 331.2

பூமி முழுவதையும் தேவ மகிமையின் வெளிச்சத்தால் நிறைக் கிற தேவ ஆவியானவருடைய மாபெரும் ஊற்றுதல் எப்போது நடக்கும்? பிரகாசிக்கப்பட்டவர்கள் நம்மில் உருவாகவேண்டும்; அவர்கள் தேவனோடு உடன் வேலையாட்களாவதின் அர்த்தத்தை அனுபவத்தால் அறிந்திருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் உருவாகும் வரையிலும் ஆவியின் மாபெரும் ஊற்றுதல் நிகழாது; தேவ சேவையில் முற்றிலுமாக முழுமனதோடு நம்மை அர்ப்பணித்திருக்கும்போது, தேவன் தம் ஆவியானவரை அளவில்லாமல் ஊற்றி, அந்த உண்மையை அங்கீகரிப்பார்.ஆனால் பெரும்பாலான திருச்சபைகள் தேவனோடுகூட உடன்வேலையாட்களாக இல்லாதி ருந்தால், இந்த நிலை வராது. 1RH, July 21, 1896 TamChS 331.3