Go to full page →

மதிப்பீட்டின் அடிப்படை TamChS 347

தேவனுக்கான சேவையின் மதிப்பானது, எவ்வளவு நேரம் வேலையில் செலவிட்டோம் என்பதை வைத்து அல்ல; என்ன மனநிலையோடு செய்தோம் என்பதை வைத்துதான் அளக்கப்படுகிறது. 19T, 74 TamChS 347.4

தெய்வீக வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண்பது அவர்களுக்கு வழங்கப்பட்ட தாலந்துகளை மேம்படுத்துவதைச் சார்ந்து தான் உள்ளது. எந்த அளவுக்கு எஜமானை ஊக்கத்தோடும் நேர்மையோடும் சேவித்தார்களோ அந்த அளவுக்குத்தான் பிரதிபலனைப் பெறுவார்கள். 2RH, Mar: 1, 1887 TamChS 348.1

கர்த்தர் மாபெரும் பணியை நிறைவேற்ற வேண்டியுள்ளது. இம்மையில் அதிக விசுவாசத்தோடும் விருப்பத்தோடும் ஊழியஞ் செய்பவர்களுக்கு மறுமையில் அவர் ஏராளமானஆசீர்வாதங்களை வழங்கக் காத்திருக்கிறார். 3COL, 330 TamChS 348.2

பதினோராம்மணி வேளையில் திராட்சத்தோட்டத்திற்கு வந்தவர்கள் வேலைசெய்ய வாய்ப்பு கிடைத்தததற்காக நன்றியுள்ளவர்களாக இருந்தார்கள். அவர்கள் இருதயத்தில் தங்களை ஏற்றுக் கொண்டவர்மேல் நன்றி நிரம்பிவழிந்தது; நாளின் இறுதியில் முழு நாள் சம்பளத்தை வீட்டெஜமான் கொடுத்தபோது, பெரிதும் ஆச்சரியமடைந்தார்கள். அவ்வளவு சம்பளத்திற்கு தாங்கள் வேலைசெய்யவில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். வீட்டெஜமானின் முகத்தில் தெரிந்த அன்புணர்வைக் கண்டபோது மகிழ்ச்சியில் நிறைந்தார்கள். எஜமானின் நற்குணத்தையும், தாராளமாக அவர் தந்த ஊதியத்தையும் அவர்கள் ஒருநாளும் மறக்கவில்லை. TamChS 348.3

இதுபோலவே, தான் அபாத்திரனென்று உணர்ந்து, பதினோராம் மணிவேளையில் எஜமானின் திராட்சத்தோட்டத்திற்குச் சென்ற பாவியும் இருக்கிறான். சொற்பகாலமேதான் ஊழியம் செய்ததாகத் தெரிவதால், பிரதிபலனைப்பெற தகுதியற்றவன் என்று உணர்கிறான். ஆனால் தன்னையும் கூட தேவன் ஏற்றுக்கொண்டாரே என்று சந்தோஷத்தால் நிறைகிறான். கிறிஸ்துவின் உடன் ஊழியனாகச் செயல்படக்கிடைத்த சிலாக்கியத்திற்கு நன்றியுள்ளவனாக, தாழ்மையும் நம்பிக்கையும்மிக்க மனநிலையோடு ஊழியஞ்செய்கிறான். இந்த மனநிலையைக் கனப்படுத்துவதில் தேவனும் மகிழ்ச்சியடைகிறார். 4COL, 397,398 TamChS 348.4