Go to full page →

களங்கப் பதிவுகள் TamChS 64

அநேகர் தேவபக்தியின் வேஷம் தரித்திருக்கிறார்கள். அவர்களுடைய பெயர்கள் சபைப்பதிவுகளில் இருக்கும். ஆனால், பரலோகத்திலோ களங்கமுள்ளவர்கள் எனும் பதிவு இருக்கும். பதிவு செய்கிற தூதர்கள் அவர்களுடைய கிரியைகளை உண்மையோடு எழுதியிருப்பார்கள். அவர்களுடைய ஒவ்வொரு சுயநலச்செய்கை யையும், ஒவ்வொரு தவறான வார்த்தையையும், அவர்கள் நிறைவேற்றாத ஒவ்வொரு கடமையையும், யாருக்கும் தெரியாமல் தந்திரமாகச் செய்த ஒவ்வொரு இரகசிய பாவத்தையும் பதிவு செய்கிற தூதர்கள் உண்மையோடு பதிவுப்புத்தகங்களில் வரிசையாக எழுதியிருப்பார்கள். 22T, p 442 TamChS 64.1