Go to full page →

பயிற்சி கொடுக்கவேண்டிய அவசியம் TamChS 85

தீமோத்தேயு, பவுல், பர்னபா போன்ற திறமையும் வாய்ப்பும் மிக்க மனிதர்கள் மனந்திரும்பும்போது, திராட்சத் தோட்டத்தில் அவர்கள் வேலை செய்ய வேண்டியதின் அவசியத்தை அவர்களுக்குக் காட்ட தீவிரமாக முயலுங்கள். அப்போஸ்தலர்கள் வேறு இடங்களுக்குச் சென்றபோதும் கூட, இவர்கள் விசுவாசத்தில் குறையவில்லை; பெருகினார்கள். கர்த்தருடைய வழிகளை அவர்களுக்கு உண்மையோடு போதித்திருந்தார்கள்; சுயநலமில்லாமலும், ஊக்கத்தோடும், விடாமுயற்சியோடும் சகமனிதர்களின் இரட்சிப்புக்காக எவ்வாறு பாடுபட வேண்டுமென்றும் போதிக்கப்பட்டிருந்தார்கள். புதிதாக மனம்மாறிய இவர்களுக்கு வழங்கப்பட்ட கவனமிக்க இந்தப் பயிற்சிதான், அஞ்ஞான தேசங்களுக்குச் சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கித்த பவுலும் பர்னபாவும் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றதற்கு முக்கியக் காரணமாக இருந்தது. 1AA, 186, 187 TamChS 85.2

சபைகளை நிறுவும்போது, மற்றவர்களுக்கு சத்தியத்தை அறிவிக்கவும், புதிய சபைகளை உருவாக்கவும் அவர்கள் மத்தியிலிருந்துதான் ஊழியர்கள் எழும்பவேண்டுமென அவர்களிடம் அறிவிக்கவேண்டும். அதற்கு அவர்கள் அனைவரும் தேவன் தங்களுக்குக் கொடுத்துள்ள தாலந்துகளை முடிந்த அளவுக்குப் பண் படுத்தி, உழைக்கவேண்டும்; தங்கள் எஜமானின் சேவையில் ஈடுபட, தங்கள் சிந்தைகளைப் பயிற்றுவிக்கவேண்டும். 23T, 205 TamChS 86.1

சரியான மனநிலையுள்ள ஊழியர்கள், அதாவது நம் விசுவாசத்தை உள்ளபடி எடுத்துக்காட்டுகிற அர்ப்பணிப்பும் பக்தியும் உள்ள ஊழியர்கள் தேவைப்படுவதால் நற்செய்தி பணி நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. நற்செய்தியாளர்களாக மாறியிருக்கவேண்டிய பலர் இருக்கிறார்கள். ஆனால் சபையிலிருந்தும் நம் கல்லூரிகளிலிருந்தும் அவர்களோடு இணைகிறவர்கள், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்கிற பாரமில்லாமல் இருக்கிறார்கள். அவர்களுடைய திறன்கள்மேல் தேவன் உரிமைகோருவதை அவர்களுக்கு எடுத்துக்கூறாமலும், அவர்களுக்காகவும் அவர்களோடும் ஜெபிக்காமலும் இருக்கிறார்கள். அதனால், அவர்கள் நற்செய்திக்களத்தில் பிரவேசிக்காமலேயே இருக்கிறார்கள். 3CT, 500, 501 TamChS 86.2

சபையின் ஆவிக்குரிய கண்காணிப்பாளர்களாக இருக்கிறவர்கள், சபையின் ஒவ்வோர் அங்கத்தினரும் தேவபணியில் ஏதாவது பங்காற்றும்படி அவர்களுக்கு ஒரு வாய்ப்பை உருவாக்குவதற்கான வழிவகைகளைக் காணவேண்டும். முற்காலத்தில் இவ்வாறு அதிகம் செய்யப்படவில்லை. அனைவருடைய தாலந்துகளையும் பயன்படுத்தி, அவர்களை உற்சாகத்துடன் பணியாற்ற வைப்பதற்கான கவனமான திட்டங்கள் போடப்படவும் இல்லை; செயல்படுத்தவும் இல்லை. இதனால் எவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்கிறதென்பதை உணர்கிறவர்கள் ஒரு சிலர் தாம். 49T, 116 TamChS 86.3

ஒவ்வொரு சபை அங்கத்தினரும் கிறிஸ்துவுக்காக ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துவதற்காக தங்களுடைய நேரத்தை அர்ப்பணிக்கும்படி அவர்களைப் பயிற்றுவிக்கவேண்டும். திருச்சபை யின் அங்கத்தினர்கள் வெளிச்சம் கொடுக்காதிருந்தால், அவர்களைப்பற்றி, ‘நீங்கள் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறீர்கள்’ என்று எவ்வாறு சொல்லமுடியும்? கிறிஸ்துவின் மந்தையின் கண்காணிகளாக இருப்பவர்கள் தங்கள் கடமைகளை உணரவேண்டும்; பல ஆத்துமாக்களை ஊழியத்தில் ஈடுபடுத்தவேண்டும். 16T, 436 TamChS 86.4