Go to full page →

பாடல் ஊழியம் TamChS 93

சுவிசேஷப் பாடல்களை இனிமையாகவும் தெளிவாகவும் அருமையாகப்பாடக் கற்றுக்கொண்ட மாணவர்கள், சுவிசேஷ நற்செய்தியாளர்களாக அதிகம் சாதிக்கலாம். தேவன் தங்களுக்குக் கொடுத்துள்ள தாலந்துகளைப் பயன்படுத்த பல வாய்ப்புகளைப் பெறுவார்கள். துக்கத்தாலும் வேதனையாலும் தனிமைப்படுத்தப்பட்ட அந்தகாரமான பல இடங்களுக்கு இசையையும் வெளிச்சத்தையும் கொண்டுசெல்லவும், சபைக்குச் செல்கிற சிலாக்கியம் கிடைக்காதவர்களுக்கு பாடல்பாடவும் அந்த வாய்ப்புகள் உதவும். TamChS 93.1

மாணவர்களே, பிரதான சாலைகளுக்கும் வேலிகளுக்கும் செல்லுங்கள். உயர்ந்த வகுப்பினரையும் தாழ்ந்த வகுப்பினரையும் சந்திக்க கடுமையாக முயற்சியுங்கள். பணக்காரருடைய வீட்டிற்கும், ஏழையின் வீட்டிற்கும் சென்று, வாய்ப்புகிடைத்தால், “சுவிசேஷப் பாடல்கள் சிலவற்றை உங்களுக்காகப்பாடலாமா?” என்று அவரகளிடம் கேளுங்கள். பிறகு இருதயம் மெதுவாகினால், தேவனுடைய ஆசீர்வாதத்திற்காக சற்று நேரம் ஜெபிப்பதற்கு வழிதிறக்கலாம். கேட்கமாட்டோம் என்று எல்லாருமே மறுக்கப்போவதில்லை. இத்தகைய ஊழியம்தான் மெய்யான நற்செய்தி ஊழியமாகும். 1CT, 547, 548 TamChS 93.2