Go to full page →

வல்லமையான கூட்டணி TamChS 95

என்ன போதிக்கிறோம் என்பதை வைத்தல்ல, திருச்சபையாராக எவ்வாறு வாழ்கிறோம் என்பதை வைத்துதான் உலகம் நம் நம்பிக்கைகளை நம்பும். ஊழியர் பிரசங்கமேடையில் நின்று சுவிசேஷக் கருத்துகளைக் கூறலாம். ஆனால், வாழ்க்கையில் பக்தி வெளிப்படும் போதுதான் சபையின் ஆற்றல் புலப்படும். 47T16 TamChS 95.3

நம் சபையில் அங்கத்தினர்களாக உள்ள ஆண்களும் பெண்களும் ஊழியம் செய்யப்புறப்பட்டு, ஊழியர்களோடும் திருச்சபை அதிகாரிகளோடும் சேர்ந்து முயற்சிகளை மேற்கொள்கிற வரையிலும் இந்தப் பூமியில் தேவபணி நிறைவேறமுடியாது. 5GW, p. 352 TamChS 95.4

ஆத்தும இரட்சிப்பில் பிரசங்கத்தின்பங்கு மிகக்குறைவுதான். தேவ ஆவியானவர் பாவிகளுக்கு சத்தியம் குறித்து உணர்த்தி, திருச்சபையின் கரங்களில் அவர்களை ஒப்படைக்கிறார். ஊழியர்கள் தங்களுடைய பங்கைச் செய்யலாம்; ஆனால், திருச்சபை செய்யவேண்டிய வேலையை அவர்கள் செய்யவே முடியாது. 64T, 69 TamChS 95.5

தேவ சத்தியத்தை அறிவிக்கிற பணியானது அபிஷேகம் பெற்ற ஒரு சில ஊழியர்களிடம் மட்டும் ஒப்படைக்கப்படவில்லை. கிறிஸ்துவின் சீடர்களெனச்சொல்லும் அனைவருமே சத்தியத்தைப் பரப்பவேண்டும்; தண்ணீர் களின்மேல் விதையை விதைக்க வேண்டும். 1RH, Aug. 22, 1899 TamChS 95.6

ஊழியர்கள் இனிமையான,ஆணித்தரமான பிரசங்கங்களைச் செய்யலாம். திருச்சபையை வளர்க்கவும் பெருக்கவும் அதிக பிரயாசம் எடுக்கலாம். ஆனால் சபையின் அங்கத்தினர்கள் ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் வேலைக்காரர்களாக தங்களுடைய பங்கைச் செய்யாவிட்டால், திருச்சபை எப்போதும் இருளிலும் பெலமில்லாமலும்தான் இருக்கும். உலகம் கடினமான, இருள்மிக்க ஓர் இடமாக இருக்கிறது. எனவே, ஒரு நல்ல முன்மாதிரியாக வாழ்வதின் செல்வாக்கு நன்மைக்கேதுவான ஆற்றலாக விளங்கும். 24T, 285,286 TamChS 96.1