Go to full page →

வெற்றியின் இரகசியம் TamChS 103

தேவ பணி வெற்றியாக அமைவதற்கு விசுவாசிகள் இணக் கத்துடன் செயல்படுவது தான் இரகசியமாகும். ஒரே சிந்தையுடன் செயல்படவேண்டும். அவனவனுக்கு தேவன் கொடுத்துள்ள திறமையின்படி, கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஒவ்வோர் அங்கத்தினனும் தேவநோக்கத்திற்காக அவனவன் தன் பங்கைச் செய்யவேண்டும். தோளோடு தோள் சேர்த்து, மனதோடு மனம் சேர்த்து பிரச்சனைகளையும் தடைகளையும் தாண்டி, ஒன்றுபட்டு நாம் செல்லவேண்டும். 1RH, Dec. 2, 1890 TamChS 103.4

ஒரே நோக்கத்தை நிறைவேற்றும்படி, கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைந்து, ஒரே வல்லமையின் வழி நடத்துதலின்கீழ், ஒரே சரீரமாக முன்னேறிச் சென்றிருந்தால், உலகத்தையே அசைத்திருப் பார்கள். 29T, 221 TamChS 104.1

தூதர்கள் இணக்கத்துடன் செயல்படுகிறார்கள். அவர்களுடைய அனைத்து செயல்பாடுகளிலும் பூரண ஒழுங்கு காணப்படுகிறது. தூதசேனைபோல எவ்வளவு தூரத்திற்கு நாம் இசைவோடும் ஒழுங்கோடும் செயல்படுகிறோமோ, அவ்வளவு தூரம் நம் சார்பாகச் செயல்படுகிற பரலோகஜீவிகளின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். இணக்கத்துடன் செயல்படுவது அவசியமென்பதை உணராமல், சீரின்றி ஒழுங்கீனத்துடன் தாறுமாறாகச் செயல்பட்டால், முற்றிலும் ஒழுங்கோடும் பூரண இசைவோடும் செயல்படுகிற தூதர்கள் நமக்காக வெற்றிகரமாகப் பணியாற்ற முடியாது. குழப்பத்தையும், கவனக்குறைவையும், ஒழுங்கின்மையையும் அங்கீகரிக்க வழியில்லாமல் வருத்தத்துடன் திரும்பிச் செல்வார்கள். பரலோகத் தூதுவர்களின் ஒத்துழைப்பை விரும்புகிற அனைவரும், அவர்களோடு இணைந்து பணியாற்றவேண்டும். பரலோகத்தின் அபிஷேகத்தைப் பெற்றவர்கள் ஒழுங்கையும் ஒழுக்கத்தையும் ஒன்றுபட்டு செயல்படுவதையும் தங்களுடைய சகல முயற்சிகளிலும் ஊக்குவிப்பார்கள். அப்போது, தேவதூதர்களும் அவர்களோடு ஒத்துழைக்கமுடியும். ஆனால் ஒழுக்கமும், ஒழுங்கும், ஒழுங்கமைப்பும் காணப்படாவிட்டால் அவர்கள் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டார்கள். 39T, 649, 650 TamChS 104.2