Go to full page →

இயற்கை சுட்டிக்காட்டுகிற கிறிஸ்தவ வாழ்க்கை TamChS 142

வேதவசனத்தை ஏற்றுக்கொள்ளும் இருதயம் நீராவியாகி வற்றும் குளத்தைப்போலவோ, பொக்கிஷம் போன்ற தண்ணீரை இழக்கும் வெடிப்பான கற்பாறை போலவோ இருக்காது. அது வற்றாத நீரூற்றுகளால் ஊட்டம் பெறும் மலை நீரோடையைப் போல் இருக்கும். அதன் குளிர்ச்சியான, பளிங்குபோன்ற தண்ணீர் பாறை பாறையாகக் குதித்தெழுந்துபோய், வருத்தப்பட்டுப்பாரஞ்சுமந்து, களைத்து, தாகத்தோடிருக்கிறவர்களைக் குளிர்ப்பிக்கும். அது எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றைப்போலாகும். அது செல்லும்போது,அதன்ஜீவத்தண்ணீர் பூமியெங்கும் பரந்து விரிந்து ஆழமாகும். தன் வழியெல்லாம் பாடிச்செல்லும் நீரோடையானது நன்மையான பயன்களையும் பசுமையையும் பின்னே விட்டுச் செல்லும். அதன் கரையோரப் புற்கள் பசுமையாகவும், மரங்கள் அடர்ந்து செழித்தும் காணப்படும்; பூக்கள் ஏராளமாகப் பூத்திருக்கும். கோடைக்கால கடும் உஷ்ணத்தால், பூமி காய்ந்து வாடும்போது, அந்த ஆற்றின் படுகையெங்கும் பசுமை தலை காட்டும். TamChS 142.1

உண்மையான தேவபிள்ளையும் அப்படித்தான். கிறிஸ்துவின் மார்க்கமானது எங்கும் பரவி உயிரூட்டுகிற ஒரு நியதியாக, செயல்படவல்ல ஓர் ஆவிக்குரிய சக்தியாக தன்னை வெளிப்படுத்தியுள்ளது. சத்தியம்,அன்பு எனும் பரலோகச் செல்வாக்கிற்கு இருதயம் திறக்கும்போது, பாலைவன நீரோடைபோல இந்நியதிகள் புறப்பட்டு ஓடும்; இப்போது வெறுமையும் பற்றாக்குறையும் உள்ள இடத்தில் மிகுந்த பலன் உண்டாகும். 2PK, 233,234 TamChS 142.2