Go to full page →

தனிநபருடன் பேசுதல் TamChS 156

கிறிஸ்து பெரும்பாலும் தனிநபர்களுக்கு ஊழியம் செய்தார். தனிநபர்மேல் அவர் உண்மையான அக்கறை காட்டினார். ஒரு நபர் பெற்றுக்கொண்ட வெளிச்சமானது ஆயிரக்கணக்கானோருக்குச் சென்றது. 36T, 115 TamChS 156.2

அவர் மிகவும் சோர்வாக இருந்தார்; ஆனாலும், வெளிப்படையான பாவத்தில் வாழ்ந்த, இஸ்ரவேலுக்கு புறம்பான, அந்நியப் பெண் ஒருத்தியுடன் பேசும் வாய்ப்பை அவர் புறக்கணிக்கவில்லை. 4DA, p. 194 TamChS 156.3

பலர் கூடிவருவதற்கு இரட்சகர் காத்திருக்கவில்லை. சிலர் கூடி வந்தாலே, அவர் பேசத்துவங்கிவிடுவார். வழிப்போக்கர்கள் ஒவ்வொருவராக நின்று கேட்கத் துவங்குவார்கள். கொஞ்சநேரத்தில் ஒரு பெரிய கூட்டம் அங்கே நின்று, பரலோக ஆசிரியர் மூலம் வரும் வேதவசனங்களைப் பிரமிப்பாகக் கேட்டுக்கொண்டிருப்பார்கள். பெரிய கூட்டத்தில் பேசுகிற அதே உற்சாகத்தோடு சிறிய கூட்டத்தில் பேசமுடியாது என்று கிறிஸ்துவின் ஊழியர் நினைக்கக் கூடாது. கேட்பதற்கு ஒருவர்தான் இருக்கலாம். ஆனால் அதனுடைய தாக்கம் எவ்வளவு பெரிதாக இருக்கும் என்பதை யார் சொல்ல முடியும்? சமாரியாவில் ஒரு பெண்ணோடு இயேசு பேசிய போது, இது சாதாரண செயலாக சீடர்களுக்கும் தெரிந்தது. ராஜாக்களோடும் பிரதான ஆசாரியர்களோடும் பேசுவதைக் காட்டிலும் அதிக அக்கறையோடு அவளோடு இயேசு பேசினார். அந்த ஒரு பெண்ணிடம் அவர் சொன்ன பாடத்தை பூமியின் கடைசி பரியந்தமும் திரும்பத்திரும்பச் சொல்லிவருகிறோம். 5DA, 194 TamChS 156.4