Go to full page →

திக்கற்றவர்களை விசாரித்தல் CCh 243

உதவியளிக்கப்பட வேண்டிய பலர் மத்தியிலும் நமது உருக்கமான இரக்கத்திற்கு மிகவும் பாத்திரமானவர்கள் திக்கற்றவர்களும் விதவைகளுமே. நமது கர்த்தருடைய விசேஷித்த கவனத்திற்கு இலக்காகி இருப்பவர்கள் இவர்களே. இவர்களுடைய க்ஷேம நிர்வாகம் கிறிஸ்தவர்களிடம் நம்பிக்கையாக ஒப்படைக்கப் பெற்றுள்ளது. “திக்கற்றபிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தில் கறை படாதபடிக்குத் தன்னைக் காத்துக் கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.”யாக் 1:27. CCh 243.3

தேவனுடைய நித்திய வாக்குத்தத்தங்களின் மேல் தன்னுடைய நம்பிக்கையை வைத்து இப்போது இளைப்பாறிக் கொண்டிருக்கும் பிதாக்கள் அனேகர் தங்களுக்கருமையானவர்களைக் கர்த்தர் காப்பாற்றுவாரென்று முழு நம்பிக்கையுடனே மரணமடைந்திருக்கின்றனர். அவர்களை இழக்கக் கொடுத்த இவர்களுக்கு உதவியளிக்க தேவன் என்ன திட்டம் வைத்திருக்கிறார்? பரலோகத்திலிருந்து மன்னா விழும்படி யாக அவர் ஒரு அற்புதம் செய்கிறதில்லை; காக்கைகள் மூலம் அவர்களுக்கு உணவு அனுப்புகிறதுமில்லை; ஆனால் ஆத்துமாவிலிருந்து சுயநலத்தை நீக்கி, தயாளத்தின் ஊற்றுகளைத்திறப்பதாகிய ஓர் அற்புதத்தை மனித இருதயங்களில் நடப்பிக்கின்றார். வெந்துயரடைந்து, தங்களுடையவர்களை இழக்கப்பெற்ற இவர்களைக் கடவுள், தம்மைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளுகிறவர்களின் உருக்க இரக்கங்களுக்கு ஒப்படைத்து, அவர்களுடைய அன்பைப் பரீட்சிக்கின்றார். CCh 244.1

கடவுளிடத்தில் அன்பு கூருகின்றவர்கள் தங்கள் இருதயங்களையும், வீடுகளையும் திறந்து இப்படிப்பட்ட திக்கற்ற பிள்ளைகளை ஏற்றுக்கொள்வார்களாக. பெரும் ஸ்தாபனங்கள் இவர்களை வைத்து பராமரிப்பது கூடாத காரியம். இவர்களைப் பராமரிக்கக்கூடிய உறவினர் இல்லையென்றால் நமது சபையங்கத்தினர் அவர்களைத் தங்கள் வீடுகளில் அங்கங்களாக ஏற்கவோ அல்லது விசுவாசத்திற்கு பொருந்துகின்ற வேறு வீடுகளில் வைத்துப் பராமரிக்கவோ ஒழுங்கு செய்ய வேண்டும். CCh 244.2

கிறிஸ்துவானவர் நோக்கிப்பார்க்கின்ற இவர்க்ள விசேஷித்தவர்கள். அவர்களிடம் பாராமுகமாக இருப்பது அவர் பார்வையில் தீங்கானது. இயோசுவின் நாமத்தினால் அவர்களுக்குச் செய்யப்பட்ட ஒவ்வொரு அன்பின் கிரியும், தமக்கே செய்யப்பட்டதாக அவர் அங்கீகரிக்கிறார். 6T.281. CCh 245.1