Go to full page →

அத்தியாயம்-17 CCh 246

உலகிலுள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவில் ஐக்கியப்பட்டிருத்தல் CCh 246

இந்த அத்தியாத்தில் கூறப்படும் அறிவுரையில் பெரும் பாகம், உலகின் பல பாகத்திலிருந்து பல பாஷை, பழக்க வழக்கம் உடைய ஊழியர்கள் கூட்டங் கூடின போது, அவர்களுக்கு உவைட் அம்மையாரால் எடுத்துரைக்கப்பட்டது. கூடி வந்த ஊழியர்களில் பலர் கர்த்தர் தமது ஜனத்திற்கு உவைட் அம்மையார் மூலம் கொடுத்துள்ள அறிவுரைகள் அம்மையாரின் சொந்த நாட்டினருக்குமட்டும் கொடுக்கப்பட்டது என்று தவறாக வாதாடினர்.-----உவைட் அம்மை பிரசுரப்பொறுபாளர். CCh 246.1

ஒரு குழந்தை தன் பூலோக பெற்றோரிடம் இயல்பாக வருவது போன்று, நாம் கிறிஸ்துவிடம் வந்து, அவர் வாக்களித்திருக்கிறவைகளைப் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் கேட்போமானால், அவகளைப் பெற்றுக் கொள்வோம். நாம் நமது விசுவாசத்தைத் தகுந்தவண்ணம் அப்பியாசப்படுத்தியிருந்தால், நம் கூட்டங்களில் இது வரை பெற்றிருப்பதற்கும் அதிகமாக தேவனுடைய ஆவியின் பிரசன்னத்தினால் ஆசீர்வதிக்கப் பட்டிருப்போம். கூட்டம் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்பதில் சந்தோஷமடைகிறேன். இப்பொழுது கேட்கப்படும் கேள்வி: நாம் ஊற்றண்டை வந்து, தாகம் தீர்த்துக் கொள்ளுவோமா? என்பதே. சத்தியத்தைப் போதிக்கிறவர்கள் சரியான முன் மாதிரியை காட்டுவார்களா? நாம் விசுவாசத்தினால் தேவனை, அவரது வார்த்தைக் கேற்ப நம்புவோமானால் நமக்காக அவர் பெரிய காரியங்களைச் செய்யக்கூடும். ஆ! நாம் தேவனுக்கு முன்பாக நம் இருதயங்களைத் தாழ்த்துவோமானா எத்தனை நன்மையாக இருக்கும்! CCh 246.2

இக்கூட்டங்கள் ஆரம்பமானதிலிருந்து நான் விசுவாசம், அன்பு என்பவைகளின் பேரில் உறையாட வேண்டும் என உணர்த்தப்பட்டேன். ஏனெனில் இந்தச் சாட்சி உங்களுக்கு அவசியம் தேவை. மிஷனரி நாடுகளின் சேவைக்கென சென்ற சிலர் என்னிடம், நீ பிரஞ்சுக் காரர்களை அறிந்து கொள்ளவில்லை. ஜெர்மானியரைப் பற்றி உனக்கு யாதொன்றும் தெரியாது. அவர்களை இந்த விதமாகத் தான் சந்திப்பது சாத்தியம் என்று கூறினார்கள். ஆனால் நான் கேட்பது, தேவன் அவர்களை அறிந்திருக்கிறாரல்லவா? ஜனங்களுக்கான தூதை தமது ஊழியக்காரர்களுக்கு கொடுப்பவர் அவரே அல்லவா? அவர்கள் தேவைகள் இன்னதென்று அவர் அறிவார்; தூது அவரிடமிருந்து நேரடியாக அவரின் ஊழியக்காரருக்கு வருமானால், அது, தான் அனுப்பப்பட்ட காரியம் வாய்க்கும்படிச் செய்யும்; அது எல்லாரையும் கிறிஸ்துவின் ஒரே ஐக்கியத்திற்குட் படுத்தும். பிரெஞ்சுக்காரரோ, ஜெர்மானியரோ, அமெரிக்கர்களோ அவர்களெல்லோரும் ஐக்கியப்படும் போது கிறிஸ்துவைப் போலிருப்பார்கள். CCh 247.1

மலையில் செதுக்கப்பட்ட கற்களினால் யூதரின் ஆலயம் கட்டப்பட்டது; ஒவ்வொரும் கல்லும் ஆலயத்தில் அதனதன் இடத்தில் பொருந்தத்தக்கதாக அது எருசலேமுக்குக் கொண்டு வரப்படும் முன்னமே வெட்டப்பட்டு, மெருகிடப்பட்டு, சோதிக்கப்பட்டிருத்தது. கற்கள் யாவும் கொண்டு வரப்பட்ட போது, உளி சுத்தியலின் சத்தமின்றி அவை கட்டடத்தில் இணைத்துக் கட்டப்பட்டன. இந்தக் கட்டடம் தேவனுடைய ஆவிக்குரிய ஆலயத்தைக் குறிக்கின்றது. அந்தக் கட்டடம் கட்டுவதற்கான பொருட்கள் சர்வ தேச ஜாதி, பாஷை, ஜனக் கூட்டத்தை சேர்ந்த ஐசுவரியவான்கள், தரித்திரர், உயர்ந்த, தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள் என்பவர்களால் ஆனவை. இவர்கள் உளியினாலும், சுத்திய லினாலும் செப்பனிடப் படுவதற்கு உயிரற்ற வஸ்துக்களல்ல. அவர்கள் சத்தியத்தினாலே உலகமாகிய கற்குழியிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட ஜீவனுள்ள கற்கள்; ஆலயத்தின் கர்த்தாவான பெரிய சிற்பாசாரி, இப்பொழுது ஆவிக்குரிய ஆலயத்தில் அவரவர்களுக்கான இடத்தில் சரிவர பொருந்தக் தக்கதாக அவர்களை செதுக்கி, மெருகிட்டுக் கொண்டிருக்கிறார். இவ்வாலயம் கட்டிமுடிக்கப்பட்டது, அது தன். எல்லா அம்சங்களிலும் பூரணப்பட்டு, மனிதர், மற்றும் தூதர்களின் வியப்புக்குரியதாக விளங்கும்; ஏனெனில் தேவன் தாமே அதைக் கட்டி உண்டுபண்ணினவர். ஒருவராவது தங்கள் பேரில் எவ்விதமான அடியும் விழ அவசியமில்லை என நினைக்கக் கூடாது. CCh 247.2

பழக்கத்திலும், எண்ணத்திலும் பூரணப்பட்ட ஒரு தனி நபராவது, ஜாதியாவது இல்லை. ஒருவரிடத்திலிருஎது மற்றொருவர் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆகையால் வித்தியாசமான பல தேசத்தினர் ஒன்றாகக் கலந்து, பழகி, நோக்கத்திலும், நியாயத்திலும் ஒன்று பட்டிருக்க தேவன் விரும்புகிறார். அப்பொழுது கிறிஸ்துவில் உள்ள ஐக்கியம் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாக இருக்கும். ஐரோப்பாவிலுள்ள பல் வேறு வகுப்பினர் ஒருவருக்கொருவர் வித்தியாசப்பட்டவர்கள் என்றும், ஒவ்வொரு பிரிவினரையும் ஒரு தனிப்பட்ட முறையில் தான் அடைய முடியும் என்றும் நான் கேள்விப்பட்ட பொழுது, இந்நாட்டிற்கு வர பயப்பட்டேன். ஆனால் தங்கள் தேவைகளை உணர்ந்து கேட்கிறவர்களுக்குத்தான் தேவ ஞானம் வாக்களிக்கப் பட்டிருக்கிறது. சத்தியத்தை ஏற்றுக் கொள்ளத்தக்கதான சூழ் நிலைக்கு மக்களை தேவன் கொண்டு சேர்க்கிறார். குயவன் தன் கையில் இருக்கும் களிமண்ணைவனைவது போல கர்த்தர் நமது மனதை தமது கரங்களில் எடுத்து வனைவாராக. அப்பொழுது இவ்வித்தியாசங்கள்யாவும் காணப்படாமற்போகும். நீங்கள் கிறிஸ்துவை நோக்கிப் பார்த்து அவரது மாதிரியையும், ஆவியையும் பின் பற்றுஙகள். அப்பொழுது பல வகுப்பினரை அடைவதில், சகோதரரே, உங்களுக்கு எவ்வித சிரமமும் இராது. CCh 248.1

நாம் பின்பற்றுவதற்கு ஆறு அல்லது ஐந்து மாதிரிகள் இல்லை. ஒரே ஒரு மாதிரி தான் உண்டு, அது கிறிஸ்து இயேசுவே. இத்தாலிய, பிரெஞ்சு, ஜெர்மானிய சகோதரர்கள் ஒவ்வொருவரும் அவரைப் போலிருக்க விரும்பினால் ஒரே சத்திய அஸ்திபாரத்தின் மேல் அவர்கள் தங்கள் பாதங்களை நிலை நாட்டுவர். ஒருவரில் இருக்கும் ஆவியே அடுத்தவரிலும் குடி கொள்ளும், கிறிஸ்து மகிமையின் நம்பிக்கையாக அவர்களில் விளங்குவார். பல தேசத்தினரிடையில் தடுப்புச் சுவரை கட்ட வேண்டாமென்று, என் சகோதர சகோதரிகளே, உங்களை நான் எச்சரிக்கிறேன். இதற்கு மாறாக, எங்கெல்லாம் அத்தகைய சுவர் காணப்படுகிறதோ, அதை தகர்த்தெறியுங்கள். நம் உடன் மனிதர் இரட்சிக்கப்பட எல்லாவற்றையும் கிறிஸ்துவில் ஒன்று படுத்தும் படி முயற்சி செய்ய வேண்டும். CCh 249.1

ஊழியர்களான என் சகோதரரே, நீங்கள் தேவனின் மேலான வாக்குத்தத்தங்களைப்பற்றிப் பிடித்துக் கொள்வீர்களா? இயேசு உங்களில் உருவாகும்படி சுயத்தை வெளியே தள்ளுவீர்களா? தேவன் உங்கள் வாயிலாக வேலை செய்வதற்கு முன் உங்களில் சுயம் என்பது சாகவேண்டும். இங்கு ஒருவரிலும், அங்கு ஒருவரிலும் சுயம் தலை தூக்குவதைக் கண்டு நான் திகில் அடைகிறேன். தேவ சித்தம் உங்கள் சித்தமாக மாறுவதற்கு உங்கள் சுய சித்தம் சாக வேண்டும் என்று நசரேயன் இயேசுவின் நாமத்தினால் கூறுகிறேன். அசுசியாவுமற நீங்கள் சுத்தமாகும்படி அவர் உங்களை புடமிட விரும்புகிறார். நீங்கள் தேவ வல்லமையினால் நிரப்பப்படுவதற்கு முன் உங்களுக்காக பெரிய வேலையொன்று செய்யப்பட வேண்டிருக்கிறது. இக்கூட்டங்கள் முடிவடையும் முன்பே, அவரது மேலான ஆசீர்வாதங்களை நீங்கள் கண்டுணரும்படி அவரண்டை கிட்டிச் சேருங்கள். 9T. 179-182. CCh 249.2