Go to full page →

ஜாதிப்பிரிவுடன் கிறிஸ்துவின் சம்பந்தம் CCh 250

எவ்வித ஜாதிப்பிரிவு, அந்தஸ்து, கோட்பாடுகளின் வித்தியாசத்தையும் கிறிஸ்து அங்கீகரிக்கவில்லை. உலகத்தின் மற்றப் பாகங்களின் உள்ள தேவ குடும்பத்தினரை விலக்கித்தள்ளும்படி, பரிசேயரும், வேதபாரகரும், பரலோக ஈவுகள் தங்கள் சொந்த ஜாதிஜனங்களுக்கே உரியனவாய் பிரதிபலிக்க வேண்டுமென விரும்பி முனைந்தனர். ஆனால் இயேசுவோ எல்லா தடுப்புச் சுவர்களையும் உடைக்கவே வந்தார். ஆகாயம், சூரிய வெளிச்சம், பூமியை வளப்படுத்தும் மழை இவை அனைவருக்கும் உரியது போன்று, அவரது அன்பும், இரக்கமும் தெய்வ ஈவாக அனைவருக்கும் உரியது எனக் காட்டவே அவர் வந்தார். CCh 250.1

கிறிஸ்து ஸ்தாபித்த மார்க்கத்தில் ஜாதிப் பிரிவுக்கு இடமில்லை. கிறிஸ்து மார்க்கத்தில் யூதர், புறஜாதியார். அடிமைகள் சுயாதீனர் யாவரும் பாகுபாடின்றி ஒரு சகொதர இணைப்புக் கொண்டு தேவனுக்கு முன்பாக சம அந்தஸ்து பெற்றுக் கொள்ளுகிறார்கள். அவரது நடையை எவ்வித சட்ட முறையும் ஆட்கொள்ளவில்லை. சத்துருவுக்கும், மித்துருவுக்கும், அயலகத்தாருக்கும், அன்னியருக்கும் இடையில் அவர் வித்தியாசம் காட்டவில்லை. ஜீவ தண்ணீரில் தாகம் தீர்க்க வாஞ்சித்த ஆத்துமாவின் பேரிலேயே அவர் இருதயம் அதிக தாபம் கொண்டது. CCh 250.2

ஒரு ஆத்துமாவை அற்புதமானது என்று புறக்கணித்துக் கடந்து செல்லாமல், ஒவ்வொரு ஆத்துமாவின் மேலும் குணமாக்கும் தைலத்தை தடவ வழி பார்த்தார். அவர் எந்தக் கூட்டத்தில் காணப்பட்டப்போதிலும், நேரத்திற்கும், சந்தர்ப்பத்திற்கும் பொருத்தமான பாடக் கருத்துக்களை அளித்தார். மனிதர் தங்கள் உடன் மனிதரைப் புறக்கணித்து, அவமதிக்கும் போது, அப்படிப்பட்டவர்களுக்கு அவரது தெய்வீக அனுதாபம் தேவை என்று அவர் மனச்சாட்சி வலியுறுத்தியது. மிகவும் பயனற்று, கறடு முரடான ஜீவியம் செய்கிறவர்களுக்குள் நம்பிக்கையெழுப்பி, அவர்கள் குற்ற மற்றவர்களும், தீயகற்றவர்களும், தேவனுடைய பிள்ளைகளாவதற்கேற்ற குணங்களுள்ளவர்களும் ஆகக் கூடும் என்ற நிச்சயத்தையும், அவர்கள் முன் வைக்க வகைப் பார்த்தார். 9T. 190,191. CCh 250.3

தேவனுடைய பிள்ளைகள் கிறிஸ்துவில் ஒன்றாயிருக்க, மனிதருக்குள் நிறம், குலம், நிலை, பணம், பிறப்பு, பேறு முதலியவைகளால் ஆளுக்கு ஆள் பேதம், சமுதாயப்பிரிவு, ஜாதி வேற்றுமை உண்டாகியிருப்பதை இயேசு எவ்விதம் காண்கிறார்! R.H. Dec.22,1891. CCh 251.1

ஐக்கியத்தின் இரகசியம் கிறிஸ்தவ விசுவாசிகளின் சமத்துவத்தில் காணப்படுகின்றது. CCh 251.2