Go to full page →

அத்தியாயம்-21 CCh 289

சத்திய வேதம் CCh 289

வேத எழுத்துக்களில் உள்ள ஆயிரக்கணக்கான சத்திய முத்துக்கள் மேல்பரப்பில் தேடுகிறவனுக்கு மறைந்து கிடக்கின்றன. சத்திய சுரங்கத்தின் கனி ஒருபோதும் ஒழிந்து போகாது. பணிந்த இருதயங்களோடு நீங்கள் வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்த்தால், உங்கள் உற்சாகம் அதிகப்படும். நீங்கள் பவுலைப்போல, ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது, அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள் என வியந்து கூறும் உணர்ச்சியடைவீர்கள். ரோ. 11:33. CCh 289.1

கிறிஸ்துவுடன், அவர் வார்த்தைகள் பூரண ஒற்றுமை உடையவைகள். அவைகளை ஏற்றுக் கீழ்ப்படிந்து, கிறிஸ்து ஒளியில் இருப்பது போன்று, ஒளியில் நடக்க வாஞ்சையுள்ளவர்களின் பாதங்களுக்கு முன்பாக அவைகள் நிச்சயமான வழியைத் திறந்து வைக்கும். தேவனுடைய மக்கள் அவரது வார்த்தையை மதித்துப் பாராட்டினால், பூலோக சபையில் பரலோகம் இருக்கும். கிறிஸ்தவர்கள் வசனத்தை ஆராய பசி, தாகம் உடையவர்களாக இருக்க வேண்டும். வேத வாக்கியங்களைத் தியானித்து, வாக்கியத்தோடு வாக்கியத்தை ஒத்துப்படிப்பதற்கான சமயத்திற்காக ஆவலுடையவர்களாக இருப்பார்கள். காலையில் வாசிப்பதற்கு தினச்செய்தித்தாள், பத்திரிக்கை அல்லது நாவல் புத்தகங்களுக்குக் காட்டும் ஆவலைப் பார்க்கிலும், ஒளியின் வார்த்தையின்பேரில் அதிக ஆவலாயிருப்பார்கள். அவர்களது பெரிய வாஞ்சை தேவ குமாரனுடைய மாமிசத்தைப் புசிப்பதும், அவர் இரத்தத்தை பானம் பண்ணுவதுமாய் இருக்கும். அதன் பயனாக அவர்களுடைய ஜீவியம் வசனத்தின் இலட்சியங்களுக்கும், வாக்குத் தத்தங்களுக்கும் ஏற்றதாகக் காணப்படும். அதன் போதனைகள் அவர்களுக்கு ஜீவ விருட்சத்தின் இலைகளைப்போன்று இருக்கும். அது அவர்களில் ஜீவ கிணறும், நித்திய ஜீவனுக்கான ஊற்றாக எழும்பும். இளைப்பாறுதலுக்கான கிருபை மாரி அவர்களின் ஆத்துமாக்களை முசிப்பாற்றி அவர்கள் தங்கள் உழைப்பு, சோர்புகளை மறக்கும்படிச் செய்யும். ஆவியினால் அருளப்பட்ட வார்த்தைகள் அவர்களைப் பலப்படுத்தி, தைரியப்படுத்தும். 5T. 665. CCh 289.2

வேதாகமம் தன்னில் கொண்டுள்ள பல விஷயங்கள், எழுதப்பட்டிருக்கும் விதம் இவைகளால் ஒவ்வொரு மனதிற்கும் உற்சாகத்தையும், இருதயத்துக்குக் கவர்ச்சியையும் கொடுப்பதாக இருக்கின்றது. அதன் பக்கங்களில் பூர்வீக சரித்திரமும், ஜீவியத்தின் உண்மையான விருத்தாந்தங்களும்; நாட்டை பரிபாலனம் செய்வதற்கான அரசியல் சட்டங்களும் குடும்பம் சீருடன் விளங்குவதற்கு மனித ஞானம் ஒருபோதும் எட்டியிராத இலட்சியங்களும் உண்டு. மிகவும் விசேஷித்த தத்துவஞானமும், பொருள் நிறைந்து, மனம் உருகுவதற்கான அனுதாப மூட்டும் கவிதைகளும் உண்டு. வேத எழுத்துக்கள், மானிடன் எவனும் ஒருபோதும் எழுதியிராத வண்ணம் மா உயர்ந்த மதிப்புக்குரியன: மேலும், அவற்றுள் நடு மையமாய் விளங்கும் முக்கியக் கருத்துடன் இணைத்து நோக்குமளவில், அவை அளவிடப்படா விரிவுடையனவும், மிகப் பெரிய மதிப்பு உடையனவுமாய் இருக்கக் காணலாம். ஒவ்வொரு விஷயமும் புதிய கருத்துக்களைக் கொண்டுள்ளன என்றும் காணலாம். மிகவும் சாதாரணமாகச் சொல்லப்பட்ட சத்தியங்களில் வானபரியந்தம் உயர்ந்ததும், நித்தியத்தை எட்டுவதுமான இலட்சியங்கள் அடங்கியுள்ளன். E.D. 125. CCh 290.1

அனுதினமும் வேத வாக்கியங்களிலிருந்து நீங்கள் ஒரு புதிய காரியத்தைப் படிக்க வேண்டும். புதையுண்ட பொக்கிஷத்தைத் தேடுவது போன்று அதைத் தேடுங்கள். ஏனெ னில், நித்திய ஜுவ வார்த்தைகள் அதில் அடங்கி இருக்கின்றன. இப் பரிசுத்த எழுத்துக்களைக் கிரகிக்கத்தக்க ஞானத்திற்காகவும் விளக்கத்திற்காகவும் மன்றாடுங்கள். இதை நீங்கள் செய்தால் தேவ வார்த்தையில் நீங்கள் புதிய மகிமையைக் காண்பீர்கள்; சத்தியத்திற்கான விஷயங்களின் சம்பந்தமாக நீங்கள் புதிய விசேஷித்த வெளிச்சத்தைப் பெற்றுக்கொள்வீர்கள்; உங்களுடைய அபிப்பிராயத்தில் வேதாகமம் புதியதொரு மதிப்பை சதா பெற்றுக்கொண்டேயிருக்கும். பிராயத்தில் வேதாகமத்தின் சத்தியங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அவை மனதை கீழான உலகக்காரியங்களிலிருந்து உயர்த்தும். தேவ வசனத்தை மேன்மையாக எண்ணத்தக்க விதத்தில் எண்ணி பாராட்டினால், வாலிபரும், வயோதிபரும் உள்ளான நேர்மையும் சோதனையை எதிர்ப்பதற்கு அவசியமான வலிமையும் அடைவார்கள். 8T, 319. CCh 290.2