Go to full page →

ஒழுங்காக ஊக்கமுடன் படியுங்கள் CCh 291

பெற்றோரோ, உங்கள் பிள்ளைகள் தேவனை வழிபடவும், உலகில் நன்மை செய்யவும் வேண்டுமானால், அவர்களின் பாடப் புத்தகம் சத்திய வேதாகமமாக இருக்கட்டும். சாத்தானின் தந்திரங்களை வேதம் வெளிப்படுத்தும். அது குலத்தைப் பெரிதும் உயர்வடைச் செய்யும், தீய வழிகளைக் கடிந்துகொண்டு சீர்படுத்தும்; உண்மை, பொய் இவைகளின் வித்தியாசத்தைக் கண்டு பிடிக்க உதவியளிக்கும். வீட்டிலோ, கல்விச்சாலையிலோ எதைக் கற்றாலும், வேதம், கல்வி புகட்டுவதில் முதலிடம் பெற வேண்டும். வேதாகமத்திற்கு முதலிடம் கொடுக்கப்பட்டால் தேவன் கண்ணியப்படுத்தப்படுவார். அவர் உங்கள் பிள்ளைகளின் மனந்திரும்புதலுக்கு ஏதுவாகக் கிரியை செய்வார். அழகும் சத்தியமும் கொண்டுள்ள சுரங்கம் அதில் இருக்கிறது. அதைப் பிள்ளைகளுக்கு அதிக விருப்பமானதாகச் செய்யாவிட்டால் பெற்றோர் தங்களையே குறை சொல்லிக்கொள்ள வேண்டும்.-------5T. 322. CCh 291.1

சோதனைக்காரன் தனது வஞ்சகங்களோடு கிறிஸ்துவிடம் வந்தபோது அவர் உபயோகித்த ஆயுதம் அது எழுதப்பட்டிருக்கிறது என்பதே. வேதத்தின் சத்தியங்களைப் போதிப்பதே பெற்றோர் எடுத்துச்செய்யக்கூடிய பெரிதும், மேன்மையுமான அலுவலாகும். மகிழ்ச்சியும், இன்பமுமான மனதுடன் சத்தியத்தை தேவன் பேசின பிரகாரம், அவர்களுக்கு முன் வையுங்கள். பிதாககளே, தாய்மாரே, உங்கள் பிள்ளைகளை உங்களோடு இணைந்து, நீங்கள் அவர்களுக்குரிய பொருட்பாடமாகி, அனுதின வாழ்க்கையில் பொறுமை, பட்சம், அன்பு இவைகளை அனுபவ வாயிலாகக் காட்டுங்கள். பிள்ளைகளை அவர்கள் போக்குக்கு விட்டுவிடாமல், நீங்கள் தேவனுடைய வார்த்தையைக் கடைப்பிடித்து நடந்து, அவர்களை கர்த்தருக்கேற்ற சிட்சையிலும், போதனையிலும் கொண்டு வருவதே உங்கள் வேலை என்று அவர்களுக்குக் காட்டுங்கள். CCh 292.1

உங்கள் குடும்பத்தில் வேதம் படிக்க திட்டமான ஒழுங்கை அனுசரியுங்கள். லெளதீக வேலைகளைத் தள்ளி... ஜீவ அப்பத்தினால் ஆத்துமா போஷிகப்பட உறுதி பண்ணிக் கொள்ளுங்கள். தேவ வசனத்தை ஆராய அனுதினமும் மன மகிழ்ச்சியுடன் ஒருமித்துச் செலவிடும் ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரத்திற்குக் கிடைகும் மதிப்பு அளவிடப்படாதது. ஒரு பொருள் பற்றி பல சமயங்களில், பல சூழ் நிலைகளில் சொல்லப்பட்ட சகல காரியங்களையும் ஒன்று திரட்டி, வேதம் தன்னையை விளக்கும்படி இடமளிக்கப்பட வேண்டும். குடும்ப வகுப்பு, உங்களைச் சந்திக்க வருகிறவர்கள் நிமித்தம் சிதைந்து போகவிடாதிருங்கள். அவர்களையும் கலந்துகொள்ளச் செய்யுங்கள். உலக இன்பங்களையும் ஆதாயங்களையும் விட கடவுள் வசனத்தியே பெரிதும் நீங்கள் பேணுவதை அவர்கள் காணட்டும். CCh 292.2

நாம் வேதத்தை ஜாக்கிரதையுடனும், ஜெபத்துடனும் அனுதினம் படித்து, ஒவ்வொரு நாளும் யாதாமொரு சிறந்த சத்தியத்தைப் புதிய, தெளிவான, உரமான ஒளியில் காண வேண்டும். G.C.510,511. CCh 292.3

உங்கள் பிள்ளைகளைக் கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் வளர்க்க வேண்டுமானால், வேதத்தை உங்கள் வழி காட்டியாக நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். கிறிஸ்துவின் அன்பும், குணமும் பிள்ளைகள் பின்பற்றும்படியான மாதிரியாகக் காட்டப்பட வேண்டும். அவர்கள் தவறினால், அதைப்போன்ற பாவங்களைப்பற்றி தேவன் சொல்லியுள்ளவைகளை வாசித்துக் காட்டுங்கள். இது விஷயமாக சதா கண்ணும் கருத்துமாக இருத்தல் அவசியம். பெற்றோரால் பொறுத்துக்கொள்ளப்பட்ட ஒரு தவறு, உபாத்திமாரால் திருத்தாம்ல் விடப்பட்ட தப்பிதம், முழுக் குணக் கட்டு மானத்தை ஏற்றத்தாழ்வும், குறைவுபட்டதுமாக்கிவிடும். புதிய இருதயம் அவர்களுக்கு அவசியம் என்று போதியுங்கள். அவர்களில் புதிய விருப்பங்களையும், புதிய நோக்கங்களையும் உதிக்கச் செய்யுங்கள், அவர்களுக்குக் கிறிஸ்துவிடமிருந்து சகாயம் வேண்டும்; திருவசனத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறபடி தேவனுடைய குண லட்சணங்களை அவர்கள் அறிந்திருக்கவேண்டும். C.G.515. CCh 293.1