Go to full page →

அத்தியாயம்-26 CCh 331

கர்த்தருடைய இராப்போஜனம் CCh 331

கர்த்தருடைய வீட்டின் அடையாளங்கள் எளியவை; தெளிவாய் அறிந்து கொள்ளத்தக்கவை. அவை எடுத்துக்காட்டும் சத்தியங்கள் நமக்கு மகா ஆழ்ந்த உட் கருத்து உடையவை, E V 273 CCh 331.1

கிறிஸ்து இரண்டு நியமங்களுக்கும், அவற்றின் இரு பெரும் விழாக்களுக்கும் நடுவே, அவர் நிலை மாறும் தலத்தில் நின்றார்.அது குற்றமற்ற தேவ ஆட்டுக்குட்டியாகிய அவர் பாவ நிவாரண பலியாகத் தம்மைப் படைக்கப் போகிற தருணம், அவர் அதனால் நாலாயிரம் ஆண்டுகளாகத் தமது மரணத்தைச் சுட்டிக் காட்டி வந்த அடையாளங்களையும், சடங்கு முறைமைகளையும் முடிவுக்குக் கொண்டு வந்தார். அவர் தம் சீஷர்களுடனே பஸ்காவைப் புசிக்கும் வேளையில் அதன் ஸ்தானத்தில் தமது மகா பலிக்கு நினைவுக் குறியாக இருக்க வேண்டிய ஆராதனையை ஏற்படுத்தினார். யூதர்களுடைய தேசீயத் திருவிழா பஸ்காப் பண்டிகை என்றென்றும் ஒழுந்து போக வேண்டும். கிறிஸ்து நிலைநாட்டிய ஆராதனை அவரைப் பின்பற்றுகின்ற அடியார்களினால், எல்லா நாடுகளிலும் எல்லா யுகங்களினிடையும் நடைபெற வேண்டும். CCh 331.2

பஸ்கா இஸ்ரவேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்ற நினைவுக்குறியாக நியமிக்கப் பெற்றது. ஆணடாண்டு தோறும், பிள்ளைகள் இந்த நியமத்தின் கருத்து என்ன என்று கேட்கும்போது, பெற்றோர் அதன் வரலாற்றை எடுத்துரைக்க வேண்டுமென்று, கடவுள் கட்டளையிட்டிருந்தார். இங்ஙனம் இந்த அதிசய விடுதலையின் நினைவு அனைவர் மனத்திலும் புத்தம் புதிதாகக் காக்கப்பட வேண் டும். கர்த்தருடைய இராப்போஜன நியமம் கிறிஸ்து தமது மரணத்தின் பலனாகச் செய்து முடித்துள மகா பெரிய விடுதலையை நினைவு கூரும்படி ஆசரிக்க நியமிக்க பெற்றுள்ளது. அவர் வல்லமையோடும் மகிமையோடும் இரண்டாம் தடவை வருமளவும் இந்த நியமம் ஆசரிக்கப்பட வேண்டும். இது அவர் நமக்காகச் செய்து முடித்த மகா பெரிய கிரியையை நாம் நம் மனத்தில் என்றும் புத்தகம் புதிதாகக் காத்துக்கொள்ள உதவும் கருவியாகின்றது. CCh 331.3

கர்த்தருடைய இராப்போஜனத்தில் பங்கு பெற விரும்பும் எவரையும் விலக்கலாகாதென கிறிஸ்துவின் மாதிரி காட்டுகிறது. வெளிப்படையான பாவம் குற்றவாளிகளை விலக்கி வைக்கின்றது என்பது மெய்யே, இது பரிசுத்த ஆவியின் தெளிவான போதனை. 1 கொரி. 5:11. இதைக் கடந்து எவரும் தீர்ப்புக் கூறக்கூடாது. இந்த வேளைகளில் கூடி வர வேண்டியவர் இன்னார் என்று சொல்லும் பொறுப்பைக் கடவுள் மனிதரிடம் விட்டு வைக்கவில்லை. இருதயத்தை அறிய வல்லவர் யார்? கோதுமையை விட்டுப் பதரைப் பிரிக்க வல்லவர் யார்? எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம் பண்ணக் கடவன். எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம் பண்ணுகிறனே, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாய் இருப்பான். அப்பாத்திரமாய் போஜன பானம் பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத் தீர்ப்பு வரும்படி போஜன பானம் பண்ணுகிறான். 1 கொரி. 11:28, 27, 29. CCh 332.1

அபாத்திரராய் இருக்கிறவர்கள் சிலர் பந்தியில் வந்திருப்பதினால், எவரும் அதை விட்டு விலகி ஒதுங்கி நிற்கக்கூடாது. சீஷர் ஒவ்வொருவரும் வெளிப்படையாய் வந்து பங்கெடுத்து, தாம் கிறிஸ்துவைத் தம் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்று சாட்சி பகரும்படி அழைக்கப்படுகிறார்கள். CCh 332.2

கிறிஸ்து தம் சீஷருடனே கூட அப்பத்திலும் திராட்சரசத்திலும் பங்கு பெற்றுக்கொண்டதினால், தாம் அவர்களுக்கு மீட்பராய் இருக்கும்படி அவர்களூக்காகப் பிணைப்பட்டார். அவர்களிடம் புது உடனபடிக்கையை ஒப்புவித்தார். அதனால் அவரை ஏற்றுக்கொள்ளுகிறவர்கள் அனைவரும் கடவுளுடைய பிள்ளைகளாகி, கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரர் ஆகின்றார்கள். இந்த உடன்படிக்கையினால் இம்மைக்காகவும் மறுமைக்காகவும் கடவுள் அளிக்கும் ஆசீர்வாதங்கள் அனைத்தும் அவர்களுக்குச் சொந்தமாயின. இந்த உடன்படிக்கைப் பத்திரம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் முத்திரிக்கப்பட்டது. சாக்கிர மெந்தைப் பரிமாறுதல், தவறி விழுந்து கெட்டுப்போன பெரிய மனுக்குலமாகிய முழுத் தொகுதியின் ஒரு சிறு பகுதியாக அவ்விடம் வந்திருக்கின்ற சீஷர் ஒவ்வொருவருக்காகவும் தனிப்பட்ட முறையில் செலுத்தப் பெற்ற அளவிடப்படாத தன்மையுள்ள அந்தப் பலியை, அவர்கள் முன்னே நினைவுப் பொருளாக வைத்தலேயாம். CCh 333.1