Go to full page →

திருமணம் நியாயமும் பரிசுத்தமும் உள்ளது CCh 390

புசிப்பதிலாவது குடிப்பதிலாவது, அல்லது பெண் கொள்வதிலாவது கொடுப்பதிலாவது, தன்னிலே தானே பாவம் இல்லை. நோவாவின் காலத்தில் மணஞ் செய்வது நியாயமாய் இருந்தது; இக்காலத்தில் மணஞ்செய்வது நியாயமாகவே இருக்கின்றது. நியாயமுள்ளது எதனையும் தகுதியாக அனுசரிக்க வேண்டும்; வரம்பு கடந்து பாவமுள்ள தாகும்படி கொண்டு போகலாகாது. ஆனாலும் நோவாவின் காலத்தில் மக்கள் கடவுளிடம் கலந்து பேசாமலும், அவர் நடத்துதலையும் ஆலோசனையையும் தேடாமலும் மணஞ் செய்தார்கள். CCh 390.3

வாழ்க்கையின் தொடர்புகள் அனைத்தும் மாறிப்போகும் தன்மையுடையவை என்னும் உண்மை, நாம் செய்வது பேசுவது அனைத்தையும் மாற்றித் திருத்தும் செல்வாக்கு அடைய வேண்டும். தகுதியுள்ள முறையாய்க் கையாளும் பொழுது, தன்னிலே தானே நியாயமுள்ளதாகிய அந்த அன்பு நோவாவின் காலத்தில் ஒழுங்கு கெட்டு வரம்பு கடந்து போய் கடவுளுக்கு முன்பாக மண வாழ்க்கையைப் பாவமுள்ளதாக்கி விட்டது, உலகத்தின் இந்த யுகத்தில், மணவாழ்க்கை பற்றிய எண்ணங்களிலும் திருமண உறவு முறையிலேயும் முழுவதும் முழுகிப்போய், தங்கள் ஆத்துமாக்களை இழந்து போகின்றவர்கள் பலர் இருக்கின்றார்கள். CCh 391.1

திருமணவுறவு முறை பரிசுத்தமுள்ளது; ஆயினும் சீர்கெட்டுப்போன இந்த யுகத்தில், அது கொடுமைகள் அனைத்தையும் போர்த்துக்கொண்டிருக்கிறது. அது கெட்டுப்போய், ஜலப்பிரளயத்துக்கு முன்னே நடப்பித்த மணவாழ்க்கை அக்காலத்தில் குற்றமுடையதாகி விட்டது போல் இக்காலத்திலும் குற்றமுடையதாகி கடைசி நாட்களின் அடையாளங்களில் ஒன்றாய் இருக்கிறது. என்றாலும் திருமணத்தின் தூய தன்மையையும் அதன் கடமைகளையும் அறிந்துணரும் பொழுது கடவுள் அதை அங்கீகரிப்பார்! அதன் பலனாய்த் தம்பதிகள் இருவரும் இன்பம் அடைவார்கள், கடவுளும் மகிமைப்படுவார். CCh 391.2