Go to full page →

திருமணத்தின் சிலாக்கியங்கள் CCh 391

கிறிஸ்துவர்கள் என்று அறிக்கையிடுகிறவர்கள் திருமணவுறவு முறையின் சிலாக்கியங்கள் அனைத்தையும் கருத்தாய் ஆராய்ந்து பார்க்க வேண்டும். தூய்மையுள்ள கொள்கையே ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக இருக்க வேண்டும். பெற்றோர் பற்பல காரியங்களில் தங்கள் திருமணத்தின் சிலாக்கியங்களைக் கெடுத்து, சுகபோகத்திற்கு இடங்கொடுத்து தங்கள் மிருக இச்சைகளை வலுப்படுத்திவிட்டார்கள். CCh 391.3

(மற்றொரு சமயத்தில் உவைட் அம்மையார் குடும்பவுறவு முறையின் அந்தரங்கமும், சிலாக்கியங்களும் என்பது பற்றி பேசியுள்ளார்.) CCh 392.1

நீதியுள்ள செய்கை வரம்பு கடந்து போக விடுவதினால் அது கொடிய பாவமாகி விடுகின்றது. CCh 392.2

பெற்றோர் பலர் தங்கள் மண வாழ்க்கையில் அடைய வேண்டிய அறிவு அடைகிறதில்லை. அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளாமையால், சாத்தான் அனுகூலம் அடைந்து, அவர்கள் மனத்தையும் வாழ்க்கையும் கட்டுப்படுத்தி ஆளுகின்றான். அவர்கள் தங்கள் மண வாழ்க்கை எவ்வகையிலும் வரம்பு கடந்து போகாதபடி அதை அடக்கி நடத்த வேண்டுமென்று கடவுள் விரும்புகின்றார் என்பதை அறியார்கள். தங்கள் ஆசை இச்சைகளை அடக்கி நடத்துவது தெய்வ பக்திக்குரிய கடமை என்று உணருகின்றவர் ஒரு சிலரே ஆவர். அவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தையே நோக்கமாகக் கொண்ட விவாகத்தினால் இணைக்கப் பெற்றவர்கள். அதனால் விவாகம் தங்கள் இழிவான இச்சைகளுக்குரிய சுகபோக வாழ்க்கையைத் தூய்மைப்படுத்தி விடுகின்றது என்று நியாயம் பேசுகின்றார்கள். தெய்வ பக்தியுள்ளவர்கள் என்று அறிக்கையிடுகின்ற ஆண்களும் பெண்களும் கூட தங்கள் இழிவான இச்சைகளாஇக் கடிவாளத்தினால் அடக்கி நடத்தாமல் விட்டு விடுகின்றார்கள். தங்கள் ஆயுள் குறைந்து தங்கள் உடம்பு முழுவதும் வலுவிழந்து போகும்படியாகத் தங்கள் ஜீவ சக்தியை விரயஞ் செய்கின்ற தங்கள் செய்கைக்குக் கடவுள் கணக்குக் கேட்பார் என்னும் எண்ணம் அவர்களுக்குச் சிறிதும் இல்லை. CCh 392.3