Go to full page →

சுய வெறுப்பும் இச்சை யடக்கமும் பயில வேண்டும் CCh 392

மக்கள் தங்கள் சிருஷ்டிகருக்கு பரிபூரண சேவை செய்வதற்காக, தங்கள் மனத்தின் அமைப்பையும் உடம்பின் அமைப்பையும் உத்தம முறையில் பாதுகாத்துக்கொள்வது, அவருக்குரிய தங்கள் கடமை என்பதை, நான் யாவருக்கும் நன்கு விளங்கும்படி சொல்லக்கூடும். கிறிஸ்தவ மனைவி தன் கணவனுடைய மிருக இச்சைகளைக் கிளப்பிவிடாதபடி தன் பேச்சு செய்கை இரண்டையும் கட்டுப்படுத்த வேண்டும். இவ்வகையில் வீணாக்குவதற்குர்ய உடல் வலிமை பலருக்கு இல்லை. அவர்கள் தங்கள் இளமைப் பருவம் முதல், தங்கள் மிருக இச்சைகளைத் திருப்தி பண்ணுவதற்காக தங்கள் மூளை வலுவையும், உடல் வலிமையையும் கெடுத்துப் போட்டார்கள். அவர்கள் மண வாழ்க்கையில் சுய வெறுப்பு இச்சையடக்கம் என்பதே அவர்களுக்கு விழிப்பு மொழியாக இருக்க வேண்டும். CCh 392.4

நாம் மனு மக்களுக்கு நன்மையும், கடவுளுக்குப் பரிபூரண சேவையும் செய்யும்படி, நம் ஆவியைத் தூய்மையாகவும் உடம்பை நலமாகவும் வைத்துக்கொள்ளக் கடவுளுக்குப் பயபக்தியாய்க் கடமைப்பட்டிருக்கின்றோம். அப்போஸ்தலன் கூரும் எச்சரிப்பு மொழிகள் இவை:--- நீங்கள் சரீர இச்சைகளின் படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக் கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக. மேலும் அவர், பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சை யடக்கமாய் இருப்பார்கள் என்று கூறி, முன்னேறும்படி நம்மைத் தூண்டுகிறார். கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளுகிறவர்கள் யாவரும், தங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவ பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகின்றார். மற்றவர்களுக்குப் பிரசங்கம் பண்ணுகிற நான் தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன் என இயம்புகின்றார். CCh 393.1

தன் மனைவியைத் தன் இச்சைக்குத் தொண்டு செய்கின்ற கருவியாக்கும்படியாகப் புருஷனைத் தூண்டுகின்ற அன்பு தூய்மையுடையது அல்ல. அது சுகபோகத்திற்காக ஆவேசங் கொள்ளுகின்ற மிருக இச்சை, அப்போஸ்தலன் குறிப்பிட்டுள்ள வகையாய்த் தங்கள் அன்பைக் காண்பிக்கும் புருஷர் எத்தனை பெயர்! அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்பு கூர்ந்து, அதை சுத்திகரித்துப் பரிசுத்தமாக்குகிறதற்கும், அது தூய்மையும், பிழையற்றதுமாகிறதற்கும், தம்மைத் தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார். திருமணவுறவு முறையில் பரிசுத்தமென்று கடவுள் ஒப்புக்கொள்ளுகின்ற அன்பின் தன்மை இதுவே. அன்பு தூய்மையும் பரிசுத்தமுமாக இலட்சியம் இதுவே. அன்பு தூய்மையும் பரிசுத்தமுமான இலட்சியம் ஆகும். காம விகாரமோ அடக்கத்தை ஏற்றுக்கொள்ளாமலும், பகுத்தறிவின் அதிகாரத்திற்கும், கட்டுப்பாட்டிற்கும் இணங்காமலும், இருக்கின்றது. அது பின்னே வருகின்ற பலனை முன்னே உணராத குருட்டுத்தனம்; காரண காரியங்களைப் பகுத்தறிய மாட்டாது. CCh 393.2