Go to full page →

சாத்தான் தன்னடக்கத்தைக் குலைக்க வகை தேடுகின்றான். CCh 394

சாத்தான் மணவுறவு முறையில் புகுந்தவர்களின்ப் தூய்மையுள்ள நிலைமையைத் தாழ்த்தவும், அவர்கள் தன்னடக்கத்தைக் குலைக்கவும் வகை தேடுகின்றான். இழிவான இச்சைகள் எவ்வளவிற்கு உயர்ந்து செல்லுகின்றதோ அவ்வளவிற்கு உயர் ஒழுக்க வலிமை தாழ்ந்து போகின்றது என்பதை அறிவான். அப்பால் அவன் அவர்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சியைக் குறித்துக் கவலைப்பட வேண்டுவதில்லை. தான் வேறு எவ் வகையிலும் அவர்கள் சந்ததியின் மேல் தன் பகைமையின் சாயலை அவ்வளவு நன்றாக பதித்துவிட முடியாதென்றும், தான் இவ்வாறு பெற்றோர் குணத்தினும் மிகவும் இழிவாக பிள்ளைகள் குணத்தை உருவாக்கக் கூடுமென்றும் அவனுக்குத் தெரியும். CCh 394.1

ஆடவரே, மகளீரே, நீங்கள் ஒரு காலத்தில் இச்சை எத்தன்மையுடையதென்றும், அதனை திருப்தி செய்வதினால் விளையும் பலன் எப்படிப்பட்டதென்றும் அறிவீர்கள். காம இச்சை மணவுறவு முறைக்குள் இருப்பது போலவே அதன் வெளிப்புறத்திலும் இழிவான தன்மையுடையதாய் இருக்ககி காணலாம். CCh 394.2

இழிவான இச்சைகளின் கடிவாளத்தைத் தளர்த்தி விடுவதின் பலன் யாது? தேவதூதர்கள் வீற்றிருக்க வேண்டிய படுக்கையறை அசுத்தமான பழக்கங்களினால் பரிசுத்தக் குறைச்சல் அடைகின்றது. இலட்சையான மிருக குணம் ஆட்சி புரிவதினால், உடம்பின் நலன்கள் கெட்டுப் போகின்றன. அருவருப்புள்ள பழக்கங்கள் அருவருப்புள்ள நோய்களைக் கொண்டு வருகின்றன. கடவுள் மக்களுக்கு ஆசீர்வாதமாக அளித்த பொருள் அவர்களுக்கு சாபமாகி விடுகின்றது. CCh 395.1

வரம்பு கடந்த சிற்றின்பச் செயல் பக்தி வழிபாடுகளுக்குரிய வாஞ்சையை மிகவும் கெடுத்து, சரீரத்தைப் போஷ்ப்பதற்குத் தேவையான சத்துப்பொருளை மூளையை விட்டு நீக்கி, வீரியத்தை முற்றிலும் வெறுமையாக்கி விடும். இவ்வகையாய்த் தன்னை நாசமாக்கும் செய்கையில் எந்த மனைவியும் தன் கணவனுக்கு உதவியாக இருத்தல் கூடாது. அவள் சிறந்த அறிவும், அவன் மேல் மெய் அன்பும் உடையவளாயிருந்தால், அவ்வாறு செய்ய மாட்டான். CCh 395.2

மிருக இச்சைக்கு எவ்வளவு இளக்காரம் கொடுக்கின்றோமோ, அவ்வளவாய் அது முன்னிலும் வலுவடைந்து சுகபோகத்தினால் முன்னிலும் வலிய நாட்டமும் தேட்டமும் கொள்ளுகின்றது. கடவுளுக்குப் பயந்து நடக்கிற ஆடவரும் மகளீரும் தங்கள் கடமையில் விழிப்படைய வேண்டும். இந்தக் காரியத்தில் இச்சை யடக்கம் இல்லாமையால், கிறிஸ்தவர்கள் என்று அறிக்கையிருகின்றவர்கள் பல நரம்பும் மூளையும் திமிர்வாதங்கொண்டு வருந்துகின்றார்கள். CCh 395.3