Go to full page →

கணவர் கருத்தாய் இருக்க வேண்டும் CCh 396

கணவர்கள் கருத்தும், கவனமும், உறுதியும், உண்மையும், மனவுருக்கமும், உடையவர்களாய் இருக்க வேண்டும். அவர்கள் அன்பும் அனுதாபமும் காண்பிக்க வேண்டும். அவர்கள் கிறிஸ்துவின் வசனத்தை நிறைவேற்றுகிறவர்களாயிருந்தால் அவர்கள் அன்பு தங்களையும், தங்கள் மனைவியரையும் கெடுத்துப் பலவீனத்திற்கும் நோய்க்கும் வழி நடத்துகின்ற இழிவான உலக சிற்றின்ப இயல்புடையதாயிராது. மேலும் மனைவியர் செவிகளில், அவர்கள் தங்கள் கணவருக்கு எல்லாக் காரியத்திலும் அடங்கி நடக்க வேண்டும் என்ற தொன் ஒலித்துக்கொண்டிருக்கும் பொழுது, புருஷர்கள் தங்கள் இழிவான இச்சைகளைத் திருப்தி பண்ணுகின்ற செய்கையில் மனைவிகளிடம் ஈடுபட்டிருக்க மாட்டார்கள். கணவன் மெய்க கிறிஸ்தவனுக்கு இருக்க வேண்டிய மேன்மையான பண்பும், தூய்மையான உள்ளமும், உயர்ந்த சிந்தையும் உடையவனாய் இருந்தால், அது திருமண வுறவு முறையில் வெளிப்பட வேண்டும். அவனுக்குக் கிறிஸ்துவின் சிந்தை இருந்தால், தன் உடம்பைக் கெடுக்கிறவனாய் இருக்க மாட்டான்; கிறிஸ்துவுக்குள் உன்னத நிலை அடைய வகை தேடி, உருக்கமான அன்பினால் நிறைந்திருப்பான். CCh 396.1

எந்தப் புருஷன் தன் மனைவி பொறுமையாய்த் தனக்கு அடங்கி தன் இழிவான இச்சைகளுக்குத் தொண்டு செய்து கொண்டிருக்கும்படி வைத்துக்கொள்வானாயின், அவன் அவளிடம் மெய்யன்புடையவனாய் இருக்கமாட்டான். அவள் சாந்தமாய் அடங்கி நடப்பதினால், அவன் பார்வையில் ஒரு காலத்தில் தனக்கு இருந்த நன்கு மதிப்பை இழந்து விடுகின்றான். அவள் உயர் நிலை அனைத்தையும் விட்டுத் தாழ்ந்த நிலைக்கு தள்ளுண்டதை அவன் காண்கின்றான். பின்பு அவன் தன்னிடத்தில் தாழ்ந்து அடங்கிச் சாந்தமாய் நடந்துகொள்வது போலவே, மற்றவன் எவனிடத்திலும் நடந்துகொள் வாள் என்று சந்தேகம் அடைகின்றான். அவளுடைய மனவுறுதியிலும் தூய்மையிலும் அவனுக்கு ஐயம் உண்டாகின்றது. அவள் மீது சலிப்படைந்து தன் நரக இச்சைகளை எழுப்பிவிட்டு வளர்க்கக்கூடிய புதிய இடங்களை நாடுகின்றான். கடவுள் கட்டளையை அலட்சியம் பண்ணுகின்றான். இவ்வகையான புருஷர்கள் மிருகங்களைக் காட்டிலும் இழிவான தன்மையுடையவர்கள். இவர்கள் மனிதர் வடிவில் இருக்கும் பிசாசுகள். இவர்கள் மெய்யான உயர்ந்த மேன்மையுள்ள கொள்கைகளையுடைய பரிசுத்த அன்பின் பழக்கம் அறியாதவர்கள். CCh 396.2

இந் நிலையில் மனைவியும் கணவன் மேல் எரிச்சலும் ஐயமும் அடைகின்றான். வாய்ப்புக் கிட்டினால், அவன் தன்னிடம் செய்வது போல் மற்றொருத்தியினிடத்தில் தாமதமின்றித் தன் காதலைச் செலுத்துவான் என்று நினைக்கின்றாள். அவன் மனச் சாட்சிக்காவது தெய்வப் பயத்திற்காவது கட்டுப்பட்டு நில்லான் என்று காண்கின்றாள். பரிசுத்தத்திற்கடுத்த இவ்வகைத் தடைகள் எல்லாம் இழிவான இச்சைகளினால் தகர்ந்து போகின்றன. கணவனிடத்திலுள்ள தெய்வத்தன்மை போன்ற நலமெல்லாம் இழிவான மிருக இச்சைக்கு அடிமையாகி விடுகின்றது. CCh 397.1