Go to full page →

நன்மைக் கேதுவாகத் தாயின் சக்தி CCh 412

தாயின் ஸ்தானம் மிகச் சாதாரணமாகத் தோன்றலாம்; ஆனால் தகப்பனேடு சேர்ந்த தாயின் செல்வாக்கு நித்திய மானது. தேவனும்மு அடுத்தபடியாக பூமியில் தாயின் செல்வாக்கே நன்மைக்கேதுவாக மிகப் பலமுள்ளது. CCh 412.3

ஒரு கிறிஸ்தவத் தாய் தன் பிள்ளைகளைச் சுற்றியுள்ள ஆபத்துகளைக் குறித்து வெகு வியப்புள்ளவளாக இருப்பாள். தன் சொந்த ஆத்துமாவை தூய உன்னத நிலையில் காத்துக் கொள்வாள்; தன் சுபாவத்தையும் இலட்சியங்களையும் எளிதாக மேற்கொள்ளவிருக்கும் சின்னஞ் சிறிய சோதனைகளையும் தேவ வசனம் மூலம் அடக்கி ஆட்கொண்டு வருவாள். CCh 413.1

குழந்தைகளுக்குக் கூர்மையான பகுத்தறிவு உண்டு. சாந்தமும் அன்பும் ததும்பும் குரலையும், தங்கள் இருதயங்களிலிருக்கும் ஆழ்ந்த அன்பை உலறச் செய்யும் வெடுவெடுப்பான கோபக் கட்டளைகளையும் உணர்ந்து கொள்வர். உண்மையுள்ள கிறிஸ்தவத் தாய் தன் வெடுவெடுப்பும் அனுதாபமற்ற அன்பினால் தன் பிள்ளைகளை தன் சமுகத்திலிருந்து துரத்த மாட்டாள். CCh 413.2

தாய்மார்களே, உங்கள் செல்வாக்கும் முன் மாதிரியும் உங்கள் பிள்ளைகளின் குணத்தையும் முடிவையும் தீர்மானிக்கிறதென்பதை உணர்ந்து கொள்ளுங்கள்; உங்கள் பொறுப்பை உணர்ந்தவர்களாக உண்மை, நன்மை, அலங்காரமுமுடைய நடுநிலை மனசையும் பரிசுத்த குணத்தையும் விருத்தி செய்யுங்கள். அடிக்கடி ஏச்சு முறுமுறுப்புகளால் நிறைந்த வீட்டில் விரும்பப்படத்தக்க ஒன்றுமில்லாமையினால் புருஷர்களும், பிள்ளைகளும் தடுக்கப்பட்ட காட்சிசாலைகளுக்கும், மதுக்கடைகளுக்கும் போய் ஆறுதலும், பொழுதுபோக்கும் அடைய வழி தேடுவர். தன் சொந்த எரிச்சல்களையும் கஷ்டங்களையும் தன் புருஷன் பிள்ளைகள் சமுகத்தில் வெளி காட்டாவிடினும் குடும்ப சந்தோஷத்துக்காக தான் அவர்களுக்குக் காட்ட வேண்டிய சின்னஞ் சிறு மரியாதைகளை தன் குடும்பக் கவலைகளால் காட்ட மறந்து விடுகிறாள். நன்றாய்ப் புசிக்கவும் உடுத்தவும் அவள் ஆயத்தப்படுத்துவதில் முனைந்திருக்கையில் புருஷனும் குமார்ர்களும் அந்நியர்கள் போல் வீட்டிற்கு வருவதும் போவதுமாயிருக்கிறார்கள். CCh 413.3

தாய்மார்கள் ஒழுங்கீனமாக ஆடை அணிவார்களாயின் அதே தன்மையை பின்பற்றக் கற்பிக்கிறார்கள். ஆடை அழுக்காயிருந்தாலும் ஒழுங்கீனமாயிருந்தாலும் வீட்டுக்குள் அணிவதைப்பற்றி அவர்கள் கவலை எடுப்பதில்லை. அவர்கள் தங்கள் குடும்பத்திலே செல்வாக்கை சீக்கிரம் இழந்துவிடுவார்கள். நன்றாய் உடுத்துகிறவர்களையும் தாயையும் பிள்ளைகள் ஒத்துப் பார்க்கிறார்கள்; அவர்களுடைய சிந்தையில் தாயை பற்றிய மதிப்பு பலவீனப்படுகிறது. CCh 414.1

ஒரு உண்மையுள்ள மனைவியும் தாயுமாயிருப்பவள் தன் ஒழுங்குபடுத்தப்பட்ட குடும்ப காரியங்களில் கைகளால் செய்யும் எக்காரியத்தையும் அற்பமாய் எண்ணாமல், தன் கடமைகளை கண்ணியத்தோடும் மகிழ்ச்சியோடும் செய்வாள். CCh 414.2

A.H. 231-254. CCh 414.3