Go to full page →

தேவ ஊழியத்தை முதலாக்குவது CCh 438

நாம் தேவ நடத்துதல்களைச் சிந்தித்து, விடுமுறை நாட்களைப் பயன்படுத்துவது நல்லதல்லவா? அவர் அருளிய கடந்த கால ஆசீர்வாதங்களைச் சிந்திப்பது, நாம் அவரை மறக்காதபடி அவர் நமக்கருளிய அழுத்தமான எச்சரிப்புகளை நம் ஆத்துமாக்களில் அமர்ந்து சிந்திப்பதும் நல்லதல்லவா? CCh 438.2

உலகத்திற்கு அனேக விடுமுறை நாட்களுண்டு; விளையாட்டுகளிலும், குதிரை பந்தயங்களிலும், சூதாட்டங்களிலும், புகை பிடிப்பதிலும், மதுபானம் செய்வதிலும் மனிதர் ஆழ்ந்துவிடுகின்றனர். CCh 438.3

தேவன் அருளிய அளவில்லா ஆசீர்வாதங்களுக்காக அவரைத் துதிக்கும்படி தேவனுடைய பிள்ளைகள் அடிக்கடி பரிசுத்த சபை கூடுதல் வைக்க வேண்டாமா? CCh 438.4

வாலிபரான ஆடவர் மகளீரை தேவையிருக்கும் மனுக்குலத்திற்கு பணி செய்யவும், ஆண்கள், பெண்கள், வாலிபர், சிறியோர் யாவருடைய ஆத்தும இரட்சிப்புக்காக உழைக்கும் படி பயிற்றுவிக்கவும் திறமையுள்ள மனிதர் பலர் எழும்ப வேண்டும். யாவரும் தங்கள் முழு நேரத்தையும் ஊழியத்தில் செலவிட முடியாது. ஏனெனில் அவர்கள் தங்கள் சொந்த ஜீவனாம்சத்திற்காக தினமும் வேலை செய்ய வேண்டியிருக்கும். ஆயினும் இவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாட்களில், தங்களால் பொருளுதவி கொடுக்க முடியாவிட்டாலும் நல்ல ஊழியத்தில் செலவிடலாம். CCh 438.5

உங்களுக்கு விடுமுறை நாள் கிடைத்தால், உங்கள் பிள்ளைகளைச் சந்தோஷப்படுத்த அதை உபயோகியுங்கள்; அப்படியே ஏழைகளையும் துன்பப்பட்டோரையும் மகிழ்விக்கப் பயன்படுத்துங்கள். தேவனுக்கு துதி செலுத்தாமலும், ஸ்தோத்திரக் காணிக்கை செலுத்தாமலும் அந் நாள் கடந்துபோக விடாதீர்கள். CCh 439.1