Go to full page →

பிறந்த நாட்கள் - தேவனுக்குத் துதி செலுத்தும் சமயம் CCh 439

யூத முறைமையில் குழந்தைகள் பிறந்த போது, தேவ திட்டப்படியே காணிக்கை படைக்கப்பட்டது. இப்பொழுது பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் பிறந்த நாளுக்கென விசேஷித்த சிரமத்துடன் நன்கொடைகள் கொடுப்பதை நாம் காண்கிறோம். மனிதனுக்கே கனம் உரியது போல, தங்கள் குழந்தைகளைக் கனப்படுத்துகிறார்கள். சாத்தான் இல் விஷயங்களில் தன் திட்டங்களை நிறைவேற்றுகிறான்; மனசுகளையும் நன்கொடைகளையும் மனுஷ முகமாய்த் திருப்பி விடுகிறான்; இவ்விதம் பிள்ளைகள் தங்களைப் பற்றிப் பெரிதாக எண்ணும்படி வழி நடத்தப்படுகிறார்கள். CCh 439.2

மீண்டும் ஒரு வருஷத்தைக் காணும்படி கடவுள் கடாட்சமும் பாதுகாப்புகிருந்ததற்காக அவர்கள் பிறந்த நாளில் நன்றி செலுத்தும்படி கற்பிக்கப்பட வேண்டும். இவ்விதமாக மிக விலையேறப்பெற்ற பாடங்கள் கற்பிக்கப்படலாம். ஜீவன், சுகம், ஆகாரம், ஆடை மட்டுமின்றி, நித்திய ஜீவனுக்கான நம்பிக்கை ஆகிய யாவுக்காகவும் சகல இரக்கங்களின் பிதாவுக்கு நாம் கடனாளிகளாக இருக்கிறோம்; மாபெரும் உபகாரியாகிய அவருக்கே நாம் நன்றியாக காணிக்கை செலுத்தி, அவருடைய ஈவுக்காக அவரை வடிபட வேண்டும். பிறந்த நாட் காணிக்கைகள் பரலோகத்தால் அங்கீகரிக்கப்படுகின்றன. CCh 439.3

கடந்த வருஷ ஜீவியத்தைத் திருப்பிப் பார்க்கச் செய்து, அவை பரலோக புஸ்தகங்களில் காணப்படுகிறபடியே இருந்தால், அவர்கள் சந்தோஷமாக அவைகளை ஏற்றுக்கொள்ள கூடுமாவென சிந்திக்கக் கற்பியுங்கள். அவர்களுடைய நடத்தை, வார்த்தைகள், கிரியைகள் யாவும் கடவுளுக்கு உகந்தனவாவென்று உய்த்து ஆராயும்படி உதவுங்கள். இயேசுவைப் போல், தங்கள் ஜீவியம் தேவனுக்கு முன்பாக அலங்காரமாகவும் பிரியப்படத்தக்கதாயுமிருந்ததா? கர்த்தரைப் பற்றிய அறிவையும் அவருடைய வழிகளையும் அவருடைய கற்பனைகளையும் அவர்களுக்குப் போதியுங்கள். CCh 440.1

நான் என் குடும்பத்தாரையும் நண்பர்களையும் நோக்கி, எனக்குப் பிறந்த நாள் அல்லது கிறிஸ்மஸ் வெகுகதிகள் தந்தால், அதை தேவ ஊழியத்திற்கென கர்ததருடைய பொக்கிஷத்தில் கொடுக்கும்படியான உத்தரவுடன் தந்தாலன்றி அதை ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை. A. H. 472-476. CCh 440.2