Go to full page →

புத்தகங்களுக்கெல்லாம் புத்தகம் CCh 464

ஒருவன் தன் ஓய்வு நேரத்தில் எவ்வித நூல்களை வாசிக்கத் தெரிந்து கொள்ளுகிறானோ அதைப் பொறுத்தே அவன் குணமுமாகும். மன ஆரோக்கியமும் மார்க்க இலட்சியங்களுமுடையவர்களாயிருக்க வாலிபர்கள் தேவ வசனத்தின் மூலம் தேவனோடு ஐக்கியப்பட்டு, வாழ வேண்டும். கிறிஸ்துவின் மூலம் இரட்சணியத்தைச் சுட்டிக் காட்டி, வேதம் உம்மை உன்னத, உயர்ந்த ஜீவியத்திற்கு வழி நடத்துகிறது. எழுதப்பட்ட உயரிய கருத்துக்களடங்கிய மிக இனிய சரித்திரமும், ஜீவிய சரித்திரங்களும் அதில் அடங்கியுள்ளன. கட்டுக் கதைகளை வாசிப்பதினால் மனத் தோற்றங்கள் கெட்டுப் போகாதவர்கள் வேதத்தை மிக இனிய புத்தகமாகக் கண்டு கொள்வார்கள். CCh 464.1

வேதம் நூல்களுக்கெல்லாம் சிறந்த நூல். நீங்கள் தேவ வசனத்தை நேசித்து, சமயம் வாய்க்கும் போதெல்லாம் அதை ஆராய்ந்து வந்தால், நீங்கள் அதன் சம்பூரண பொக்கிஷத்தை யடைந்து, நற்கிரியையளும் கேற்றவாறு பக்குவப்பட்டு, இயேசு உங்களைத் தம்மண்டை இழுக்கிறாரென்ற நிச்சயம் பெறுவீர்கள். கிறிஸ்து உங்களுக்கு கற்பிக்கும் காரியங்களைச் செய்ய விரும்பாமல், கடமைக்கென வெறுமனே வாசிப்பது போதாது. சத்தியச் சுரங்கத்தில் ஆழ இறங்கினால் மட்டுமே தேவ வசனமாகிய பொக்கிஷத்தைக் கண்டு பிடிக்க முடியும். CCh 464.2

மாம்ச சிந்தை சத்தியத்தைப் புறக்கணிக்கிறது; ஆனால் மனந்திரும்பிய ஆத்துமா ஆச்சரிய மாறுதல் அடைகிறது. பாவிக்கு விரோதமாய் சாட்சி பகரும் சத்தியங்களை வெளிப்படுத்தி முன் விரும்பபடத்தக்கதாயிராத புத்தகம் இப்பொழுது ஆத்துமாவுக்கு ஆகாரமாயும், ஜீவியத்திற்கு மகிழ்ச்சியும் ஆறுதலுமாகிறது. நீதியின் சூரியன் அதன் பரிசுத்தப் பக்கங்களைப் பிரகாசிப்பிக்கிறார், பரிசுத்த ஆவி அவை மூலம் ஆத்துமாவில் பேசுகிறார். உபயோகமற்றவைகளை வாசிக்கப் பழகியவர்கள் இனி உறுதியான தீர்க்கதரிசன வசனத்தின் மேல் கவனம் செலுத்துவார்களாக. உங்கள் வேதாகமங்களை எடுத்து, பழைய புதிய ஏற்பாடுகளிலுள்ள பரிசுத்த எழுத்துக்களைப் புதிய வாஞ்சையோடு வாசிக்க ஆரம்பியுங்கள். எவ்வளவு அடிக்கடி எவ்வளவு ஜாக்கிரதையோடு வேதாகமத்தை படிக்கிறீர்களோ அதற்குத் தக்கபடி அது உங்களுக்கு அலங்காரமாய்த் தோன்றும். உபயோகமற்ற வாசிப்பின் மீதுள்ள விருப்பமும் குறையும். இந்த விலை மதிக்கப்படா புத்தகத்தை உங்கள் இருதயத்தோடு இணைத்துக் கட்டுங்கள். அது உங்களுக்கு ஒரு நண்பனாகவும் வழி காட்டியாகவுமிருக்கும். M.Y.P. 273, 274. CCh 464.3