Go to full page →

அத்தியாயம் 41 CCh 466

இன்னிசை CCh 466

[தீர்க்கதரிசிகளின் பள்ளிக்கூடங்களில்] பரிசுத்த இன்னிசைப் பயிற்சி வெகு ஜாக்கிரையாக கற்பிக்கப்பட்டது. அற்பமான நாட்டிய சங்கீதம் அங்கு கேட்டதில்லை. அல்லது மனிதனை உயர்த்திப் பாடி கடவுளிடமிருந்து கவனத்தை இழுக்கும் அவ பக்திக் கீதங்களும் கிடையா; ஆனால் சிருஷ்டிகரைத் துதித்து அவருடைய, நாமத்தை உயர்த்தி, அவருடைய அதிசயக் கிரியைகளை நினைப்பூட்டும் பரிசுத்த பக்தி வினய கீதங்கள் பாடப்பட்டன. இவ்விதமாக பரிசுத்தம், கண்ணியம், உன்னதமுமான சிந்தைகளௌக்கு வழி நடத்தி ஆத்துமாவில் பக்தியும் நன்றியும் எழும்பும் சங்கீதங்கள் பரிசுத்த நோக்கத்தை நிறைவேற்றின. F.E. 97, 98. CCh 466.1

பரலோக பிராகாரங்களில் சங்கீதம் கடவுளை ஆராதிக்கும் ஆராதனையில் ஒரு பகுதியாகிறது. நாமும் நமது துதி கீதங்கள் மூலம் பரலோக பாடகர்களோடு இசைந்து கொள்ள கூடியவாறு முயல வேண்டும். சப்தத்தை பயிற்றுவிப்பது கல்வியில் ஒரு முக்கிய பாகம், இதை இலட்சியம் செய்யக்கூடாது. பாடுவது ஜெபத்தைப் போல மார்க்க ஆராதனைகளில், தொழுகையில் ஒரு பாகமாகும். சரியான அழுத்தத்தோடு பாடுவதற்கு பாட்டின் உள்ளான கருத்து விளங்கி இருதயம் உணர்ச்சியோடு பாட வேண்டும். P. P. 594. CCh 466.2

பரலோக பூரண ஒழுங்கு எனக்கு காட்டப்பட்டது. நான் அந்த சம்பூரண தேவ கானம் கேட்டு, பிரமிப்படைந்தேன். தரிசனம் முடிந்த பின் இங்கு பாடியது வெகு கோரமாகவும், இசைவின்ரியும் கேட்டது. பரிசுத்த சதுரங்கத்தில் தூதகணம் ஒவ்வொருவரும் தங்க வீணையுடன் நிற்பதைக் கண்டேன். விணையின் கடைசியில் அதைமீட்டவோ அல்லது இராகங்களை மாற்றவோ ஒரு கருவி இருந்தது. கவலைத் தாழ்ச்சியோடு அவர்கள் விரல்கள் நரம்புகளை அழுத்தவில்லை. ஆனால் விதவிதமான தந்திகளை அழுத்தும்போது விதவிதமான நாதங்கள் எழுந்தன. முதல் முதல் வீணையை எடுத்து தந்தியை அழுத்துகிற ஒரு தூதன் தலைமை தாங்கி நின்றான். பின்பு சம்பூரண பரலோக சங்கீதத்துடன் யாவரும் சேர்ந்து கொண்டனர். அதை விவரிக்க முடியாது. பரலோக தெய்வீக கானம் எழுந்தது, அதே வேளை அத் தூதரின் முகங்களில் இயேசுவின் சாயல் பிரகாசித்து விவரிக்கவொண்ணாத மகிமை மிளிர்ந்தது. 1T. 146. CCh 466.3

வாலிபர், உயர்ந்த நிலையிலேறி, தேவ வசனத்தை தங்கள் ஆலோசனைக் கர்த்தாவாகவும், வழி காட்டியாகவும் ஆக்கிக்கொள்ள வேண்டுமென எனக்குக் காட்டப்பட்டது. பக்தி வீனயமான பொறுப்புகள் வாலிபர்கள் மேலிருக்கிறது. ஆனால் அவர்கள் அதை அற்பமாக எண்ணுகிறார்கள். தங்கள் வீடுகளுக்குள்ளே பரிசுத்தமும் ஆவிக்குரிய வளர்ச்சியும் எழும்புவதற்குப் பதிலாக, சங்கீதம் சத்தியத்தைவிட்டு அவர்கள் மனதை வேறு வழி திருப்புகிறது. மூடத்தனமான பாட்டுகளும், உலகப் பிரசித்தியான சங்கீதங்களுமே அவர்களுக்குச் சுவை யூட்டுகின்றன. ஜெபத்திற்கு செலவிடப்பட வேண்டிய வேளை சங்கீதக் கருவிகளில் செலவிடப்படுகின்றன. துர்பிரயோகஞ் செய்யப்படாவிடில் சங்கீதம் ஆசீர்வாதமாகும்; தப்பான உபயோகஞ் செய்தால் பயங்கர சாபமாகும். அது கிளர்ச்சி யூட்டும். ஆனால் பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும், கிருபாசனத்தண்டை தன் தேவைகளைத் தாழ்மையுடன் சொல்லி, தீங்கனுடைய வல்லமையான சோதனைகளை எதிர்க்க கிறிஸ்தவன் அடைய வேண்டிய பலத்தையும் தைரியத்தையும் அது தருவதில்லை. சாத்தான் தனது இளங் கைதிகளை நடத்துகிறான். அவனுடைய வசீகர சக்தியை தகர்த்து அவர்கள் வெளி வர நான் என்ன சொல்லக்கூடும்! அவன் அழிவுக்கு நேராக வழி நடத்த சக்தி படைத்த ஒரு திறமை வாய்ந்த மந்திர வித்தைக்காரன். 1T.496, 497. CCh 467.1