Go to full page →

சபை நிர்வாகம் சம்பந்தப்பட்ட தலைவர்களைப்பற்றி குறை கூறுவதின் பலன்கள் CCh 475

வம்புப் பேச்சுகளும் கோள் குத்தும் ஆவியும் சண்டையையும் பூசலையும், விதைத்து, நண்பர்களைப் பிரித்து, நமது நம்பிக்கைக் குரிய நிலைகளில் இருக்கும் பலருடைய விசுவாசத்தை அரித்துப் போடும். சகோதர சகோதரிகள் பிறரில் காணப்படும் தப்பு தவறுகளைப்பற்றி, விசேஷமாக தேவனால் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட எச்சரிப்பு, கண்டிப்பு அடங்கிய தூதுகளை மிகவும் தைரியமாக சொல்லி வந்தவர்களைக் குறித்து பேச எப்போதும் ஆயத்தமாயிருக்கிறார்கள். CCh 475.2

இப்படிக் குறை கூறுகிறவர்களுடைய பிள்ளைகள் இப்படிப்பட்ட அதிருப்திகரமான நச்சுப் பேச்சுகளை திறந்த செவிகளோட்ய் கவனிக்கிறார்கள். குழந்தைகளுடைய இருதயத்தைத் தொடக்கூடிய பொறிகளை இவ்விதமாகப் பெற்றோர்கள் குருட்டுத்தனமாய் அடைத்துப் போடுகிறார்கள். இதன் மூலம் தேவன் கனவீனம் பண்ணப்படு கிறார்; இவர்களைப்பற்றி இயேசு; மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்கிறார். மத். 25:40. ஆகவே, அவருடைய ஊழியக்காரரை அவதூறு செய்கிறவர்களால் கிறிஸ்து நிந்திக்கப்பட்டு, தூஷிக்கப்படுகிறார். CCh 475.3

தேவ ஊழியர்களைத் தாங்கி நடத்த வேண்டிய கடமையுள்ள சிலரால் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் நாமங்கள் அவமரியாதையாகவும், சிலர் சம்பந்தப்பட்ட வரையில் மிக அருவருப்பாகவும் கையாளப்படுகிறது. தேவ ஊழியர்கள் கொடுத்த பக்தி வினயமான கண்டிப்பு எச்சரிப்புகளைப் பெற்றோர்கள் மிக அவமரியாதையுடன் பேசியதைப் பிள்ளைகள் கவனிக்கத் தவறவில்லை. கேலியும் சக்கந்தமுமான பேச்சுகளை அவர்கள் அடிக்கடி கேட்டபடியினால், பரிசுத்தமும் நித்தியமுமான நலன்களையும் அவர்கள் தங்கள் மனதில் உலகக் காரியங்களின் சம நிலைக்குத் தாழ்த்தி விடுகிறார்கள். இளம் பிராயத்திலேயே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இல்லைவாதிகளாக்கும் நாச வேலையில் முனைந்து விடுகிறார்கள்; இப்படியாக பக்தியற்ற விதமாய் நடந்து, பரலோகம் பாவத்தைக் குறித்து கண்டிக்கும் போது புரட்சி செய்யவும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்கிறார்கள். CCh 476.1

இப்படிப்பட்ட தீமை காணப்படும் இடத்தில் ஆன்மீக க்ஷீணமே நிலவும். இதே தாய் தகப்பன்மார் சத்துருவினால் குருடாக்கப்பட்டு ஏன் தங்கள் பிள்ளைகள் வேத சத்தியத்தைச் சந்தேகித்து, அவிசுவாசிகளாய் மாறிவிட்டார்களென அதிசயப்படுகிறார்கள். சன்மார்க்கமும் மதச் சார்பான செல்வாக்குகளினாலும் ஏன் அவர்களைச் சரிப்படுத்த சிரமமாயிருக்கிறதென ஆச்சரியப்படுகிறார்கள். அவர்களுக்கு ஆவிக்குரிய பார்வை சரியாகவிருந்தால் தங்கள் சொந்த வீட்டுச் செல்வாக்கும், தங்களில் காணப்பட்ட பொறாமையும் அவநம்பிக்கையுமே இப்படிப்பட்ட பரிதாபமான நிலைக்குக் காரணமென உடனே கண்டு கொள்வர். இப்படியாக கிறிஸ்தவர்களென தங்களைப் பாராட்டிக்கொள்ளும் குடும்பங்களிலே பல இல்லைவாதிகள் தோன்றுவதற்கு ஏதுவாகிறது. CCh 476.2

தேவனுடைய ஊழியத்தில் மிக பொறுப்பான நிலையிலிருப்பவர்களைப்பற்றி உண்மையோ எப்படியாயினும் சரி, சிலர் அவர்களுடைய குறைகளைப் பற்ரி பேசுவதில் விசேஷித்த மகிழ்ச்சியடைகிறார்கள். செய்யப்பட்ட நன்மைகளையும், ஊழியத்தில் மிக சிரமப்பட்டு பக்தியோடு உழைத்ததின் பயனாக வந்துள்ள பலன்களையும், கண் ஜாடையாக விட்டு விட்டு, வெளிப்படையாக காணப்பட்ட ஒரு தவறையும் அதனால் நேர்ந்த பலனையும் கண்டு இதை விட சிறந்த முறையில் செய்திருக்கலாம் என்று கதை கட்டி விட ஆரம்பிக்கிறார்கள்; ஆனால் இவர்கள் அக்காரியத்தைச் செய்யும்படி விட்டிருந்தால், காணப்படும் அதைரிய மூட்டும் சூழ்நிலைகளிடையே முன்னேற மறுத்திருப்பார்கள். அல்லது அதை தெய்வாதீன வாய்ப்புக்கிணங்கச் செய்தவர்களைப் பார்க்கிலும் அதிகக் கேடான முறையில் செய்திருப்பார்கள். CCh 477.1

கற்பாறையில் கரடு முரடான பாகங்களில் ஒட்டிக் கொள்ளும் பாசிகளைப் போல் இவர்கள் ஊழியத்தின் அதிருப்திகரமான அம்சங்களோடேயே இந்த வம்பு பேச்சாளர்கள் ஓட்டிக்கொள்வார்கள். பிறருடைய தவறுகளையும் குறைகளையும் தொடர்ந்து பேசுவதால் இவர்கள் ஆவிக்குரிய வளர்ச்சியில் குன்றிப்போகிறார்கள். இவர்கள் நன்மையும் மேன்மையுமான செய்கைகளையும், சுயநல மற்ற முயற்சிகளையும், மெய் வீரத்தையும், தர்தியாகத்தையும் பகுத்துணர்ந்து கொள்ளக்கூடாதபடி போகிறார்கள். இவர்கள் தங்கள் ஜீவியத்திலும் நம்பிக்கையிலும் மேன்மையும் விசாலமுமடையாமலும், தங்கள் சிந்தைகளிலும் திட்டங்களிலும் உதாரத்துவமும் விரிவுடையாமலுமிருக்கிறார்கள். கிறிஸ்தவ ஜீவியத்தை அலங்கரிக்கும் கிறிஸ்தவ அன்பை இவர்கள் அப்பியாசிப்பதில்லை. தினமும் இவர்கள் சக்தி கெட்டு தங்கள் கெட்ட எண்ணங்களாலும் மன நோக்குகளாலும் குன்றிப் போகிறார்கள். அற்பத்தனமே அவர்கள் குணம்; சமாதான சந்தோஷத்திற்கு நஞ்சான சூழ்நிலை அவர்களைச் சூழ்ந்திருக்கிறது. 4T. 195, 196. CCh 477.2

ஒவ்வொரு ஸ்தாபனமும் சிக்கல்களோடு போரிட வேண்டியதாகும். தேவனுடைய ஜனங்களின் இருதயங்கள் பரீட்சிக்க துன்பங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்த்தருடைய ஏதுக்களில் ஒன்றுக்கு உபத்திரவம் வந்தால், தேவனிடத்திலும் அவருடைய ஊழியத்திலும் எவ்வளவு மெய் விசுவாசம் நமக்குண்டு என்பது வெளிப்படுத்தப்படும். அப்படிப்பட்ட சமயங்களில் எவரும் எக்காரியத்தைப் பற்றியும் தீக்காட்சி காணாமலும் சந்தோஷத்தையும் அவிசுவாசத்தையும் பேசாமலுமிருப்பானாக. பொறுப்பான பாரங்களைச் சுமப்பவர்களைக் குறை கூறாதே. உங்கள் வீடுகளில் தேவ ஊழியர்களை குறை கூறும் நச்சுக் கலந்த சம்பாஷணை காணப்படாதிருப்பதாக. தங்கள் பிள்ளைகளுக்கு முன்பாக குற்றங் கண்டு பிடிக்கும் ஆவியைக் காட்டும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுகு முன் இரட்சிப்புக் கேற்ற ஞானவான்களாக்குபவைகளை வைப்பதில்லை. தங்கள் பிள்ளைகளின் விசுவாசத்தையும் நம்பிக்கையுமட்டுமல்ல, பெரிய வயதுடையோரையும் அவர்கள் வார்த்தைகள் நிலைகுலையச் செய்கிறது. 7T. 183. CCh 478.1

நம் ஸ்தாபனத் தலைவர்களுக்கு ஒழுங்கைப் பேணவும், தங்கள் கைவசமுள்ள வாலிபர்களை ஞானத்தோடு நடத்தவும் சிரமமான வேலையிருக்கிறது. சபையார் இவர்களுடைய கைகளைத் தாங்கும்படி அதிகம் செய்யக்கூடும். ஸ்தாபன சிட்சைக்கு அடங்கி நடக்க வாலிபர்கள் மனமில்லாதபோதும் அல்லது பெரியாரோடு முரண்பட்டு தங்கள் சொந்த வழியில் நடக்க் முற்படும் போதும் பெற்றோர்கள் குருட்டுத்தனமாய்த் தங்கள் பிள்ளைகளுக்கு ஆதரவும் அனுதாபமும் கொடுக்கலாகாது. CCh 478.2

சத்தியத்திற்கு பக்தி காட்டும் அடி அஸ்திபாரமான இலட்சியங்களையும், பிறரையும், கடவுளையும் மிக ஏளனமாக மதிக்க கற்பிக்கப்படுவதைப் பார்க்கிலும் சிறந்தது உங்கள் பிள்ளைகள் கஷ்டப்படுவதும், ஆம், கல்லறைகளில் இளைப்பாறுவது நேரிட்டாலும் பரவாயில்லை. 7T. 185, 186. CCh 479.1