Go to full page →

தன் குறைகளை உணர்வதே சிறந்த மதிப்பு CCh 479

பிறருடைய குறைகளைப் பற்றி பேசுவதை விட, தங்களில் திருத்தப்பட வேண்டிய தீமைகள் என்ன காணப்படுகின்றன என்று தங்கள் நுட்ப ஆராய்ச்சி சக்திகளைக் கிறிஸ்தவர்கள் உபயோகிப்பார்களேயாகில் இன்று சபையில் அதிக ஆரோக்கிய நிலை காணப்படும். கர்த்தர் தன் ரத்தினங்களைக் கூட்டிச் சேர்க்கும் போது உண்மையும், உத்தமமும், ஒளிவு மறைவுமில்லாதவர்களை மிக மகிழ்ச்சியுடன் உற்று நோக்குவார். இப்படிப்பட்டவர்களுக்கு கிரீடங்கள் செய்யப்படும் போது, தேவ சிம்மாசனத்திலிருந்து வரும் ஒளியால் இந்த ரத்தினங்கள் பதிந்த கிரீடங்கள் மமிகையோடு பிரகாசிக்கும். CCh 479.2

கர்த்தர் தமது ஜனத்தைப் பரீட்சித்து புடமிடுகிறார். நீங்கள் உங்கள் குறைவுள்ள குணத்தைப்பற்றி எவ்வளவு கடினமாகவும் கண்டிக்கிறவர்களாகவுமிருக்கலாம்; ஆனால் பிறர் விஷயத்தில் பட்சமும், அனுதாபமும், மரியாதையுமாயிருங்கள். தினமும் நீங்கள் நான் என் இருதயத்தில் ஆரோக்கியமாயிருக்கிறேனா? அல்லது பொய் இருதயமுடையவனாயிரு க்கிறேனா என்று கேட்டுக்கொள்ளுங்கள். இவ்விஷயத்தில் சகல ஏமாற்றுகளிலிருந்தும் காக்கும்படி கர்த்தரை வேண்டிக் கொள்ளுங்கள். நித்திய வாழ்வுக்கானவைகள் இவைகளில் அடங்கியுள்ளன. அனேகர் கண்யத்திற்காகவும் லாபத்திற்காகவும் நாடித் திரியும்போது, என் பிரிய சகோதரனே. நீ தேவ அன்பின் நிச்சயத்தை நாடி, என் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உறுதியாக்கும் வழியை யார் எனக்கு காண்பிப்பார் என்று கதறுவாயாக. CCh 479.3

சரீரக் கூறுபாடுகளினால் மனிதனின் பாவங்களை கண்டு பிடித்து, பின்பு சாத்தான் அவர்களை வசீகரித்து, கண்ணிக்குட்படுத்த வேலை செய்கிறான். சோதனைகள் நெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஆனால் கர்த்தருடைய யுத்தத்தைப் புருஷராகவிருந்து நடத்தினால் வெற்றி காத்திருக்கிறது. யாவருக்கும் ஆபத்து உண்டு. ஆனால் தாழ்மையோடும் ஜெபத்தோடும் நடந்தால் புடமிடுதலிலிருந்து ஓப்பீரின் தங்கத்தை விட அதிக சிறந்த தன்மையோடு வெளி வருவீர்கள். கவனமின்றி, ஜெபமின்ற் நடந்தால் சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பீர்கள். ST. 96-98. CCh 480.1