Go to full page →

கிறிஸ்தவ கல்வியில் வேதாகமம் CCh 547

மனோதிறனைப் பயிற்றுவிப்பது வேதாகமம். வேறெந்த நூலையும், அன்றி நூல்கள் அனைத்தையும் விடவும் அது அதிக பிரயோஜனமுள்ளதாக இருக்கிறது. அதில் அடங்கிய பொருட்களின் பெருமையும், அவை கூறப்படும் அலங்காரமும், எளிமையான விதமும், அது திருஷ்டாந்தப்படுத்தி விளக்கும் அழகும் வேறு எதுவும் செய்யக்கூடாத பிரகாரமாக நினைவுகளை உயிரும் உயர்வும் அடையச் செய்கின்றது. வெளிப்படுத்தப்பட்டுள்ள மகா முக்கியமான சத்தியங்களைக் கிரகித்தறிவதற்கு செய்யப்படும் ஆராய்ச்சி போன்று வேறெந்த ஆராய்ச்சியும் மனதுக்கு அத்தனை சத்துவம் அளிக்காது. நித்தியர் ஆகிய தெய்வத்தைப் பற்றிய நினைவுகளால் மனதானது விரிவும் பெலனும் அடையாமல் இருப்பது கூடாத காரியம். CCh 547.3

ஆவிக்குரிய தன்மையை அபிவிருத்தி செய்வதில் வேதாகமம் இதைப்பார்க்கிலும் வல்லமையுடையதாயிருக்கிறது. தெய்வத்துடனே தோழமை கொள்ளுமாறு சிருஷ்டிக்கப்பட்ட மனிதன அத்தகைய தோழமையிலே தன்னுடைய உண்மையான ஜீவனையும் அபிவிருத்தியையும் காணமுடியும். தன்னுடைய மிகுதியான ஆனந்தத்தை தெய்வத்தினிடமாக அடையும்படி சிருஷ்டிக்கப்பட்ட மனிதன் இருதயத்தின் அபிலாஷைகளையும் ஆத்துமாவின் பசியையும் தாகத்தையும் தணித்துத் திருப்தியை அளிக்கும் பொருளை வேறெதினாலும் பெறமுடியாது. மெய்யாகவே கற்றுக்கொள்ளும் ஆவியுடனே திருவசனத்தைப் படிக்கிற ஒருவன் அதிலுள்ள சத்தியங்களை அறிந்து கொள்ள நாடுகிற பொழுது, திருவசன நூலில் கர்த்தாவுடனே தனது தொடர்பை அடையப் பெறுவான். அவன்தானாகவே தன்னுடைய அபிவிருத்தி போதும் என்று தீர்மானித்துக் கொண்டாலன்றி, அவன் அபிவிருத்தி அடைவதற்கு அளிக்கப்படும் வாய்ப்புகளுக்கு எல்லை இல்லை. Ed 124, 125. CCh 548.1

பாடத்துடனே சம்பந்தப்பட்ட முக்கியமான வேதாகம பகுதிகளை மனனம் செய்வதை ஒரு ஜோலியாக அன்றி, ஒரு சிலாக்கியமாக எண்ணி மனப் பாடம் செய்யுங்கள். முதலாவதாக ஞாபக சக்தி குறைபாடுடையதாக இருந்தாலும் அப்பியாசமைடயும் பொழுது, பலம் பெற்று, சிலநாட்களுக்குப்புறமாக இவ்வாறு சத்திய வசனங்களைப் பொக்கிஷமாக மனதிலே சேர்த்து வைப்பதில் நீங்கள் பூரிப்பை அடைவீர்கள். ஆவிக்குரிய வளர்ச்சியில் இந்தப் பழக்கம் மிகவும் பிரயோஜனமாக அமையும். CT 137, 138. CCh 548.2