Go to full page →

மிக இளமையிலே பள்ளிக்கு அனுப்புவதின் ஆபத்துக்கள் CCh 549

ஏதேனில் வாழ்ந்தவர்கள் இயற்கை ஏடுகளிலிருந்து கற்றதுபோலவும், அரபிய சமவெளிகள் மலைகளின் மீது கடவுளுடைய எழுத்தை மோசேயும், நாசரேத்தின் குன்றுகளிலே குழந்தை இயேசும் கண்டறிந்தது போலவும், இந்நாளில் வாழும் பிள்ளைகளும் அவரைப்பற்றி அறியலாம். காணப்படாதவர் காணப்படுகிறவைகளின் மூலமாக அறியப்படுகிறார். CCh 549.1

கூடுமான வரைக்கும் தனது சின்னஞ்சிறி பிராயத்திலே குழந்தையானவன் இந்த அதிசயமான பாட புஸ்தகம் அவனுக்கு முன்பாக திறக்கப்பட்டிருக்கும் இடங்களில் வளர்ந்து வருவானாக. Ed 100, 101. CCh 549.2

உங்களுடைய இளம் பிள்ளைகளைச் சின்னஞ்சிறு பிராயத்திலே தொலைவில் உள்ள பள்ளிக்கு அனுப்பாததீர்கள். குழந்தையின் மனதை உருவாக்கும் பொறுப்பைப் பிறரை நம்பி ஒப்புவிப்பதிலே அன்னையானவள் ஜாக்கிரதை காண்பிக்க வேண்டும். பிள்ளைகள் எட்டு முதல் பத்து பிராயம் ஆகும் வரைக்கும் பெற்றோரே அவர்களுடைய சிறந்த ஆசிரியராக இருக்க வேண்டும். மலர்கள், பறவைகள் நடுவிலே அமர்ந்து, இயற்கைப் பொக்கிஷங்களாகிய பாட புஸ்தகத்தை கற்கும் திறந்த வெளியே அவர்களுடைய வகுப்பறையாக அமைய வேண்டும். அவர்களுடைய மனது கிரகித்தறியக் கூடிய அளவிலே இயற்கை என்னும் கடவுளின் பெரும் நூலை பெற்றோர் அவர்களுக்கு முன்பாக திறந்து வைக்கவேண்டும். அத்தகைய சுற்றுப்புறங்களின் நடுவிலே கற்கப்படும் இப் பாடல்கள் எப்பொழுதும் பசுமையாகவே மனதில் விளங்கும். CCh 549.3

மிக இளமையிலே பள்ளிக்கு அனுப்புவதினாலே பிள்ளைகளின் சரீர, மானத ஆரோக்கியம் ஆபத்திற்குட்படுவது மல் லாமல், சன்மார்க்க உட்கருத்தின்படியே பார்க்கும் பொழுது இக் குழந்தைகளுக்கு நஷ்டம் விளைந்திருக்கிறது. தங்கள் நடத்தையிலே பண்பாடு அடையாத பிற குழந்தைகளுடனே அறிமுகமாவதற்கு அவர்களுக்கு சந்தர்ப்பங்களை அளித்தீர்கள். அவர்கள் பண்படாத, முரட்டுத்தனமுடைய, பொய் சொல்லுகிற, ஆணையிடுகின்ற, ஏமாற்றுகின்ற தன்மையும், பாவம் செய்வதைக் குறித்துத் தாங்கள் அடைந்திருக்கும் அறிவை தங்களிலும் சிறியோர்களாக இருப்போருக்கு அளிப்பதிலே ஆனந்தமடையும் தன்மையுடைய பிள்ளைகளின் நடுவே தள்ளப்பட்டார்கள். இளம் பிள்ளைகள் தனித்துவிடப்பட்டால் நன்மையைப் பார்க்கிலும் தீமையையே விரைவில் கற்பர். சுபாவ இருதயத்துடனே கெட்ட பழக்கங்கள் விரைவில் இசைந்துவிடுகின்றன. குழந்தைப் பிராயத்திலும், இளவயதாயிருக்கும் பொழுதும் அவர்கள் காண்கிறதும் கேட்கிறதுமாகிய காரியங்கள் அவர்கள் மனதிலே ஆழ்ந்து பதிகின்றன. அவர்களுடைய இளநெஞ்சிலே ஊன்றப்பட்ட பொல்லாத வித்தானது வேர் கொண்டு, அவர்களுடைய பெற்றோரின் இருதயங்களில் காயப்படுத்தும் முட்களாக மாறும். CG 302. CCh 549.4