Go to full page →

தாய் மொழியைக் கற்க வேண்டும் CCh 554

கல்விப் பயிற்சியின் ஒவ்வொரு பிரிவிலும் கைத்தொழில் பயிற்சியினால் அடைவதைப் பார்க்கிலும் முக்கியமான நோக்கங்களை நிறைவேற்ற வேண்டும். உதாரணமாக மொழிப் பயிற்சியை எடுத்துக்கொள்ளுங்கள். உயிருள்ள அல்லது இறந்தொழிந்த அன்னிய மொழிகளைப் பயிலுவதை விடத் தனது தாய் மொழியைச் சுலபமாகவும், பிழையின்றியும் எழுதுவதிலும் பேசுவதிலும் திறமையடைவது அதிக முக்கியமானது. இலக்கன விதிகளின் படியே அடைந்த அறிவு பயிற்சியை விடவும், உயர்ந்த கருத்துடனே மொழுயைப் பயிலுதல் அதிக முக்கியமானது. பெருமளவில் இந்தப் பயிற்சியிலே வாழ்வின் நலம் பொலம் அடங்கியிருக்கிறது. Ed 234. CCh 554.2