Go to full page →

அவிசுவாசிகளுடைய கிரியைகளுக்கு கடவுள் தடை விதிக்கின்றார். CCh 555

பொய்யான இலட்சியங்களும், பொய்யான நியாயங்களும் சாத்தானின் தர்க்க வாதங்களும் நம்முடைய இள வயதினர் குழந்தைகளின் மனதிலே வைக்கப்பட வேண்டும்மென்பது கடவுளின் நோக்கமா? தெளிவில்லாத, ஞானற்ற கருத்துகளும் நாஸ்திகருடைய கருத்துக்களும் நமது மாணவரின் அறிவின் பெருக்கத்துடனே மதிப்புடையன வாகக் கருதப்பட்டுச் சேர்த்துகொள்ளப்பட வேண்டுமா? மிகுந்த மூளைத்திறனுடைய ஐயவாதி அல்லது இல்லை வாதியினால் எழுதப்பட்ட புஸ்தகங்கள் சத்துருவின் சேவைக்காகத் துர்ப்பிரயோகம் பண்ணப்பட்ட மனதின் வெளிப்பாடுகள் ஆகும். சீர்திருத்தவாதிகள் என்று பெயர் பெற்றவர்கள், இளவயதினரையும் குழந்தைகளையும் சரியான வழியிலே நடத்தும்படியாக நாடுகின்றவர்கள் கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் நடப்பதற்கென்று செவ்வையாக்கப்பட்ட பாதையிலே இளவயதினருக்குக் கடவுளுடைய குணத்தைத் தப்பர்த்தப்படுத்துவதான, அவர் பற்றிய பொய்யான கருத்தை அவர்கள் கற்கும்படியாக அவர்கள் முன் வைப்பதற்குச் சம்மதப்ப்டுவாரோ? இல்லை. CT 25, 26. CCh 555.1