Go to full page →

அத்தியாயம்-48 CCh 571

சுத்தத்தின் முக்கியத்துவம் CCh 571

நல்லாரோக்கியமுடையவர்களாக நாம் விளங்குவதற்கு நம்முடைய இரத்தம் நல்லதாகவிருக்க வேண்டும். ஏனெனில் இரத்தமே, ஜீவசாரம், பழுதாகியதை அது செவ்வைப் படுத்தி, உடலைக் காப்பாற்றுகின்றது. சரியான உணவுப் பொருட்களை அடைந்து, சுத்தமான காற்றினுடனே தொடர்புடையதாகவிருப்பதால், சுத்தமும் பலமுமடையும் பொழுது உடல் முழுவதிற்கும் ஜீவனையும் உற்சாகத்தையும் அது அளிக்கின்றது. இரத்த வோட்டம் எத்தனை நிறைவுடையதோ அத்தனை நன்றாக இவ் வேலை நடைபெறும். MH 271. CCh 571.1

தண்ணீரை உடலுக்கு வெளிப்புறமாக உபயோகிப்பது இரத்தவோட்டத்தை ஒழுங்கு படுத்துவதற்கு கையாள வேண்டிய சுலவமும் மிகுந்த திருப்தியளிப்பதுமாகிய முறையாகும். குளிர்ந்த ஸ்நானம் ஆரோக்கியம் விருத்தியடைவதற்கேற்ற நல்ல ஒளஷதமாகும். வெந்நீர் ஸ்நானம் ரோமத் துவாரங்களைத் திறந்து வைத்து, அழுக்கானது அகற்றப்படுவதற்கு துணையாகின்றது. வெந்நீர் ஸ்நானமும் இளஞ் சூடான நீரில் செய்யும் ஸ்நானமும் நரம்புகளைச் சாந்தப்படுத்தி இரத்த வோட்டத்தை சமன்படுத்துகின்றது. CCh 571.2

தேகாப்பியாசம் இரத்த வோட்டத்தை துரிதப்படுத்தி, சமனடையச் செய்கின்றது. சோம்பலாகவிருக்கும்பொழுது இரத்த ஓட்டம் மந்தமடைவதுமன்றி, ஜீவனுக்கு ஆரோக்கிய வாழ்விற்கும் அத்தியாவசியமான மாறுதல்கள் அதிலே தோன்றுவதில்லை. தோலும் நாளடைவில் செயலற்றுப் போகின்றது. இரத்த வோட்டம் துரிதமடைந்து, உடலினின்று அழுக்கும் அசுத்தமும் அகற்றப்பெற்று, நுரையீரல் கள் சுத்தமான புதிய ஆகாயத்தினால் நிரம்பி, போஷணை அடைந்து, சருமம் ஆரோக்கிய நிலையில் இருந்து வருவதற்குத் தேகாப்பியாசம் இன்றியமையாதது. MH 237, 238. CCh 571.3

நுரையீரல்களுக்குப் போதிய சுதந்திரமளிப்பது அவசியம். சுயாதீனமான இயக்கத்தினால் அவற்றின் சக்தி அதிகரிக்கின்றது. அவற்றின் இயக்கத்தைத் தடை செய்து இறுக்கமடையச் செய்தால் அவற்றின் திறன் குன்றுகிறது. எனவே முதுகை வளைத்து உட்கார்ந்து அலுவலகங்களில் வேலை செய்வோருடைய பழக்கத்தினால் அவர்களுடைய உடலில் சாதாரணமாக இத் தீய பலன் தோன்றுகிறது. முதுகை வளைத்து உட்கார்ந்த நிலையில் தாராளமாக சுவாசிப்பது கூடாத காரியம். மேலெழுந்தவாரியாக சுவாசிப்பது ஒரு பழக்கமாகி விடுகின்றது. விரிவடையும் சக்தியை நுரையீரல்கள் இழந்து விடுகின்றன. CCh 572.1

இவ்வாறு பிராண வாயு குறைவான அளவில் உட்கொள்ளப் பெறுகின்றது. இரத்த வோட்டம் மந்த கதி யடைகின்றது. நுரையீரல்களில் வெளியே தள்ளப்பட வேண்டிய கழிவாகிய நச்சுப் பொருள் தங்கி, இரத்தம் அசுத்தமாகின்றது. நுறையீரல்களேயன்றி வயிறு, கல்லீரல், மூளை யாவும் பாதிக்கப்படுகின்றன. தோல் மங்கின் பழுப்பு நிறமடைந்து ஜீரணம் தடைபட்டு, இருதயம் சோர்வடைகின்றது. மூளை தெளிவு இன்றி எண்ணங்கள் குழப்பமடைகின்றன. தெம்பின்றி மனம் அந்தகாரமடைகின்றது. உடல் அனைத்தும் சோர்வடைந்து செயலற்று, நோய் தொற்றுவதற்கு வழிபிறக்கின்றது. CCh 572.2

நுரையீரல்கள் அழுக்கை அகற்றிக் கொண்டேயிருக்கின்றன. இடைவிடாது அவற்றிக்குப் புதிய காற்று அளிக்கப்பட வேண்டும். அழுக்கடைந்த காற்றைச் சுவாசிக்கும் பொழுது, போதிய பிராண வாயு கிடைப்பதில்லை. மூளைக்கும் பிற உறுப்புகளுக்கும் பாயும் அழுக்கடைந்த இரத்தத்தினால் அவை புத்துயிரடைவதில்லை. எனவே தான் நல்ல இரத்த வோட்டம் ஏற்படுவதற்கு நல்ல கற்றோட்டம் அவசியமாகின்றது. காற்று கெட்டு, அதின் சத்து நீங்கிப் போயிருக்கும் காற்றோட்டமில்லாத அறைகளிலே வாழுவது உடல் பெலன் முழுவதையும் குன்றச் செய்கிறது. குறிப்பாக, அத்தகைய உடலில் சளிக் கிருமிகளின் தொற்றுதல் சடுதியில் ஏற்படுகின்றது. சிறிது நேரத்தில் அக் கிருமிகளின் தாக்குதல் வெற்றியடைகின்றது. பெண்மணிகளில் அனேகர் வெளுத்த முகமும் பெலன் குன்றியும் இருப்பதற்குக் காரணம் அவர்கள் வீட்டை விட்டு வெளியே சென்று திறந்த வெளிகளில் உலவாதிருப்பதே. மீண்டும் மீண்டும் அழுக்கடைந்த காற்றையே இவர்கள் சுவாசிக்கின்றனர். நுரையீரல்களிலிருந்தும் சருமத்துவாரங்களினின்றும் வெளியேறிய அழுக்கினால் அவ்வாகாயம் நிறைந்து, திரும்பவும் அவ்வழுக்கு இரத்தத்தில் கலந்து விடுகின்றது. MH 272-274. CCh 572.3

தங்கள் அறைகளில் இரவில் காற்றோட்டமில்லாமற் செய்வதால் அனேகர் நோயடைந்துள்ளனர். தாராளமான, சுத்தம் மிகுந்த காற்றோட்டம் நாம் அனுபவிப்பதற்காக அளிக்கப்பட்டிருக்கும் திரண்ட ஐசுவரியங்களில் ஒன்றாகும்.2T 528. CCh 573.1

சரீர ஆரோக்கியத்திற்கும் மனவாரோக்கியத்திற்கும் மிகவும் சுத்தமாயிருப்பது அத்தியாவசியமானது. சருமத்தின் வழியாக இடைவிடாது அழுக்கு அகன்று கொண்டே வருகின்றது. அடிக்கடி ஸ்நானம் செய்தாலன்றி, கோடிக் கணக்கான சருமத் துவாரங்கள் அழுக்கேறி அடைத்துக்கொள்ளும். சருமத்தின் வழியாக வெளியேற வேண்டிய அழுக்கை அகற்றுவது கழிவை அப்புறப்படுத்துகின்ற பிற உறுப்புகளின் மேல் சுமந்த அதிகப்படியான பாரமாகி விடுகின்றது. CCh 573.2

ஒவ்வொரு நாளும் காலை மாலை குளிர்ந்த அல்லது வெது வெதுப்பான நீரில் ஸ்நானஞ் செய்வது அனேகருக்கு நற் பயனைத் தரும். சரியான முறையில் செய்யப்பௌம் ஸ்நானம் சளி பிடிப்பதற்குரிய வாய்ப்பைப் பெருக்காமல் இரத்த வோட்டத்தை விருத்தி செய்வதால் சளி பிடிக்காது தடுக்கின்றது. இரத்த வோட்டம் சருமத்தின் மேற் பரப்பிற்கு வந்தெட்டுகின்றது. இரத்த வோட்டம் இலகுவும் கிரமமுமடைகின்றது. சரீரமும் மனதும் ஒன்று போலவே புத்துயிரடைகின்றன. தசைகளின் இயக்கம் இலகுவடைந்து, புத்தி பிரகாசமடைகின்றது. ஸ்நானம் செயது நரம்புகளைச் சாந்தப்படுத்தும். ஸ்நானஞ் செய்வது மலம் வெளியேறுவதற்கு துணையாகின்றது. வயிறு கல்லீரல் ஆகியவற்றின் இயக்கத்திற்கும் ஆரோக்கியமும் உற்சாகமுமளித்து ஜீரணத்தை எளிதாக்குகின்றது. CCh 573.3

உடுத்தும் வஸ்திரங்கள் சுத்தமாகவிருப்பதும் முக்கியமானது. உடுக்கும் வஸ்திரங்கள் சருமத் துவாரங்களின் வழியாக வெளியேறுகின்ற கழிவை உறிஞ்சுகின்றன. அடிக்கடி அவற்றை மாற்றிச் சுத்தம் செய்யாவிட்டல் இக் கழிவுகள் மீண்டும் உடலில் சேருகின்றன. CCh 574.1

எவ்வகையான சுத்தம் குறைவும் நோயை உண்டு பண்ணும். இருண்டு சுத்தம் செய்யப்படாமல் இருக்கும் மூலைகளிலும் அகற்றப்படாமல் குவித்து வைக்கப்பட்டு அழுகும் மலத்திலும் குப்பையிலும் மரணத்தை விளைவிக்கின்ற கிருமிகள் மிகுதியாகவிருக்கின்றன. உதவாத காய் கறிகளும் விழுது உலர்ந்த இலைகளும் சருகுகளும் வீடுகளின் அருகே குவிந்து அழுகி காற்றை நஞ்சாக்குவதற்கு இடமளிக்காமல் அவற்றை அகற்ற வேண்டும். வீட்டின் எல்லையில் அசுத்தமானதும் அழுகியதுமான பொருள்கள் இருப்பதைச் சகிக்கக் கூடாது. CCh 574.2

பூரண சுத்தமும், மிகுதியான சூரிய வெளிச்சமும், இல் வாழ்வில் சுத்தத்திற்கடுத்த எல்லா அம்சங்களிலும் ஜாக்கிரதை காண்பிப்பதும் நோய் நீங்கி மனச் சந்துஷ்யுடனும் நல்லாரோக்கியத்துடனும் வீட்டார் அனைவரும் வாழுவதற்கு அத்தியாவசியம். MH 276. CCh 574.3

அசுத்த உடலுடையவர்களாகவிருப்பதுடனே அசுத்தமும் கிழிந்ததுமான ஆடைகளை அணிவது தெய்வத்திற்குப் பிரீதியை அளிக்காதென்று சிறு பிள்ளைகளுக்குக் கற்பியுங்கள். ஆடையைச் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்துக் கொள்ளுவது நினைவுகளைத் தூய்மையும் இனிமையுமுடையதாக வைப்பதற்கு அடிகோலும் ஒரு வழியாகும். குறிப்பாக சருமத்துடனே தொடர்புடையதாகவிருக்கும் பொருட்கள் யாவும் சுத்தமாக வைக்கப்பட வேண்டும். CCh 574.4

சத்தியம் அசுத்தம் அழுக்குமுடைய பாதையிலே தனது மென்மையான பாதங்களை ஒரு பொழுதும் வைப்பதில்லை. இஸ்ரவேலர் தங்களுடைய வாசஸ்தலங்களிலே சுத்தமான பழக்கங்களையுடையவர்களாயிருக்க வேண்டும் என்று விரும்பிய தெய்வம் இன்று தமது ஜனங்களின் இல்லங்களில் எத்தகைய அசுத்தமும் இருப்பதற்கு சம்மதமுடையவர் ஆகார். எவ்வகையான அசுத்தத்தையுமே அவர் அருவருக்கின்றார். CCh 575.1

வீடுகளிலே அசுத்தமும் அசட்டை செய்யப்பட்டதுமான மூலை முடங்குகள் இருப்பது ஆன்மாவிலும் அசுத்தமும் அசட்டை பண்ணப்பட்டதுமான மூலை முடங்குகளைச் சிருஷ்டிக்கும். CCh 575.2

பரலோகம் பரிசுத்தமும் தூய்மையுமானது. தேவனுடைய நகரத்தின் வாசல்கள் வழியாக உள்ளே பிரவேசிக்கின்ற அனைவரும் அகமும் புறமும் தூய்மையுடையவர்களாக இருக்க வேண்டும். MLT 129. CCh 575.3