Go to full page →

உறுதியாய் நிற்பதற்கான ஒரு விண்ணப்பம் CCh 602

ஏழாம் நாள் வருகையினர் மிகப் பொறுப்பான சத்தியங்களைக் கையாளுகின்றனர். நாற்பது ஆண்டுகளுக்கு முன் (1863-ல்) ஆரோக்கிய சீர்திருத்தத்தைப்பற்றி கர்த்தர் நமக்கு விசேஷித்தி வெளிச்சத்தைக் கொடுத்தார். ஆனால் தேவனுடைய ஆலோசனைகளுக்கிசைந்து ஜீவிக்க மறுப்பவர்கள் எத்தனை பேர்! ஒரு ஜனமாக நாம் பெற்றுக்கொண்ட வெளிச்சத்துக்கு தக்க அளவு முன்னேற்றமடைய வேண்டும்; ஆரோக்கிய சீர்திருத்தத்தின் விதிகளை மதித்து, கிரகித்துக் கொள்வது நமது கடமையாயிருக்கின்றது. மதுவிலக்கு விஷயத்தில் மற்றவர்களை விட நாம் முன்னேறினவர்களாயிருக்க வேண்டும். ஆயினும், நன்கு உபதேசிக்கப்பட்ட சபை அங்கத்தவர்களிலு, சுவிசேஷ ஊழியரிலும் கூட, அனேகர் இப்பொருளின் பேரில் தேவன் தந்தருளிய வெளிச்சத்தை நன்கு மதிக்கிறதில்லை. தங்கள் விருப்பம் போல் புசித்து, தங்கள் இஷ்டம் போல் வேலை செய்கின்றனர். CCh 602.1

நம் ஊழியத்தில் ஈடுபட்டிருக்கும் தலைவர்களும், உபாத்திமார்களும் ஆரோக்கிய சீர்திருத்தத்தில், வேதாகம அஸ்திவாரத்தில் ஸ்திரமாக நின்று, இந்த உலக சரித்திரத்தின் கடைசி நாட்களிலிருக்கிறோம் என்று விசுவாசிக்கிறவர்களுக்கு நேரடியாய்ச் சாட்சி கொடுபார்களாக. தேவனுக்கு ஊழியம் செய்கிறவர்களுக்கும் தங்களுக்கு ஊழியஞ் செய்கிறவர்களுக்குமுள்ள வித்தியாசம் வகையறுக்கப்பட வேண்டும். தூதின் ஆரம்ப காலத்தில் கொடுக்கப்பட்ட திட்டங் கள் முக்கியமாக மதிக்கப்பட்டது போல் இப்பொழுதும் மனச்சாட்சியோடு கவனிக்கப்பட வேண்டுமென்று எனக்குக் காட்டப்பட்டது. ஆகார விஷயமாய்க் கொடுக்கப்பட்ட வெளிச்சத்தை ஒருபோதுமே பின்பற்றாத சிலர் இருக்கின்றனர். மரக்காலுக்கடியில் இருக்கும் விளக்கை எடுத்து, பிரகாசமான கதிர்களாக பிரகாசிக்க செய்ய வேண்டிய காலம் இதுவே. CCh 602.2

தனித் தனிமையாகவும் ஒரு ஜனமாகவும் ஆரோக்கிய திட்டங்களின்படி வாழ்வது நமக்கு ஓர் அர்த்த புஷ்டியுள்ள பெரிய காரியம். ஆரோக்கிய சீர்திருத்த தூது முதல் தடவையாக எனக்கு வந்தபோது, நான் பலவீனமும் தளர்ச்சியுமடைந்து, அடிக்கடி மயக்கங்களுக்கும் உட்பட்டேன். உதவிக்காக தேவனிடம் மன்றாடினேன். அவர் எனக்குமுன் ஆரோக்கிய சீர்திருத்தமாகிய பெரிய பொருளை திறந்து வைத்தார். அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்கள் தம்முடைய பரிசுத்த சம்பந்தத்துக்குள் கொண்டு வரப்படவேண்டுமென்றும், புசிப்பிலும் குடிப்பிலும் மிதமாயிருத்தல் மூலம், அவர்கள் மனதையும் சரீரத்தையும் மிகுந்த நல்ல முறையில் சேவை செய்யும்படி பாதுகாக்க வேண்டுமென்றும் அவர் எனக்குப் போதித்தார். இவ்வெளிச்சம் எனக்கு ஒரு பெரிய ஆசீர்வாதமாக இருந்தது. கர்த்தர் என்னைப் பலப்படுத்துவாரென அறிந்து, ஒரு சீர்திருத்தவாதியாக ஸ்திரமாய் நின்றேன். நான் வயதுள்ளவளாயிருந்து, எனது பாலிய நாட்களை விட இப்பொழுது எனக்கு நல்ல் ஆரோக்கியமுண்டு. CCh 603.1

நான் எழுத்து மூலமாய் பிரசாரஞ்செய்தது போல், ஆரோக்கிய சீர்திருத்த விதிகளை நான் பின்பற்றாவில்லையென சிலர் பறைசாற்றினர். ஆனால், நான் ஒரு உண்மையுள்ள ஆரோக்கிய சீர்திருத்தவாதி என நிச்சயமாய் சொல்லக்கூடும். இது உண்மையென என் குடும்பத்தினரும் அறிவர். CCh 603.2