Go to full page →

அத்தியாயம-52 CCh 613

மனிதனோடு கடவுளின் தொடர்பு தடைப்படாது இருக்கட்டும் CCh 613

முழு உடலுக்குச் செய்தியனுப்பும் மூளை நரம்புகள் மூலமாய் மாத்திரம் பரலோகம் மனிதனோடு சம்பாஷித்து, அவனுடைய அந்தரங்க வாழ்க்கையைப் பாதிக்கக் கூடும். நரம்பு மண்டலத்தில் ஓடுகின்ற மின்சார அலைகளைத் தடைசெய்கிறதெதுவும் ஜீவாதார வல்லமைகளைப் பலம் குன்றச் செய்து, மனதின் உணர்ச்சிகள் மந்தமடையக் காரணமாகின்றது 2T 347. CCh 613.1

எவ்வித இச்சையடக்க மின்மையும் உணர்ச்சிக் கருவிகளை மந்தப்படுத்த, அப்படியே நித்திய காரியங்கள் நன்கு மதிக்கப்படாதபடி மூளை நரம்பின் சக்தியை பலவீனப்படுத்தி, சாதாரணமானவைகளோடு அவை சம நிலையில் வைக்கப்படுகின்றன. மேன்மையான நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட மனதின் உன்னத சக்திகள் கீழ்த்தரமான ஆசைகளின் அடிமைத்தனத்திற்கு கொண்டுவரப்படுகின்றன. நமது சரீர பழக்கங்கள் சரியாயிராவிடில், நமது மானத, சன்மார்க்க வல்லமைகளும் பலமாயிருக்க முடியாது; ஏனென்றால், உடலுக்கும் சன்மார்க்க நெறிக்கும் ஒரு பெரிய தொடர்பு இருக்கிறது. 3T 50, 51. CCh 613.2

மனிதர்கள் தங்களை ஆழ ஆழமாக துன்பத்துக்குள்ளும் துயரத்ஹ்டுக்குள்ளும் ஆழ்த்துவதைக் காண சாத்தான் மனக்களிப்படைகிறான். தவறான பழக்கங்களும் சுகவீனமான சரீரங்களையுமுடையவர்கள், நல்ல சுகமுள்ளவர்களைப் போல், ஊக்கமாகவும், விடா முயற்சியாகவும் கடவுளுக்குப் பணியாற்ற முடியாது என அவனுக்குத் தெரியும். நோய்ப்பட்ட ஒரு சரீரம் மூளையைப் பாதிக்கிறது. மனதினால் நாம் கர்த்த ருக்குப் பணிவிடை செய்கிறோம். உடலுக்குத் சிரசே பிரதானம். தங்களையும் மற்றவர்களையும் கெடுக்கத்தக்க பழக்கங்களைப் பேணும்படி, சாத்தான் மனுக்குலத்தை வழி நடத்துவதினால் தான் நடப்பிக்கிற கேடான கிரியையில் ஆர்ப்பரிக்கிறான்; இவ்விதமாய் அவன் கடவுளுக்குச் செலுத்த வேண்டிய மணிவிடையைக் களவாடுகிறான். CCh 613.3

சாத்தான் மனுக்குலத்தைத் தன் ஆளுகைக்குள் முழுவதுமாய்க்கொண்டு வர எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறான். போஜனப் பிரியத்தின் மூலம் மனிதர் மேல் தன் பலமான பிடியை வைத்திருக்கிறான். இதைக் கூடுமான ஒவ்வொரு வகையிலும் தூண்ட அவன் வகை தேடுகிறான். TE 13, 14. CCh 614.1