Go to full page →

சாத்தானின் அதிக அழிவுக்குரிய சூழ்ச்சி CCh 614

மனுக் குலத்திற்குப் பெரிய தீங்கை விளைவிக்கத்தக்க சில வழிவகைகளைக் கண்டு பிடிக்க சாத்தான் விழுந்து போன தூதர்களை ஒருமிக்கக் கூட்டினான். சாத்தான் தானே ஒரு இறுதியான திட்டத்தை யோசிக்கும் வரை, பல அபிப்பிராயம் ஒன்றன் பின் ஒன்றாகக் கூறப்பட்டது, தேவன் உணவாகக் கொடுத்திருந்த திராட்சைப்பழம், கோதுமை, முதலிய பொருட்களை சாத்தான் எடுத்து, மனிதனுடைய சரீர, மானத, சன்மார்க்க வல்லமைகளை அழிக்கச் செய்யும் நச்சுப் பொருளாக அவைகளை மாற்றி, தான் பூரண ஆதிக்கமுடையவனாயிருக்கும்படி புலன்களை ஜெபித்து விடுகிறான். குடிவெறியின் வல்லமையினால் மனித எல்லாவிதமான பழி பாதகங்களையும் செய்ய நடத்தப்படுவர். மாறுபாடான போஜனப் பிரியத்தினால் உலகம் சீர்கெட்டுப்போகும். சாராயத்தைக் குடிக்க மனிதரை வழி நடத்துவதின் மூலம் சாத்தான் அவர்கள் படிப்படியாக கீழ் நிலை அடையும்படி செய்வான். Te 12. CCh 614.2

மதுசாரம், புகையிலை, காபி, தேயிலை முதலியவை உபயோகிப்பதின் மூலம் சாத்தான் உலகத்தை சிறைப்படுத்து கிறான். சுத்தமாய் வைத்துக்கொள்ளப்படவேண்டிய தேவன் அருளிய மனத், மயக்கம் தரும் பொருட்களின் உபயோகத்தினால் மாறுபடுகிறது. மூளையானது எதையும் சரிவர வேறுபடுத்தி அறிவதற்கு கூடுவதில்லை. சத்துரு அதை ஆட்கொண்டான். மனிதன் தன் பகுத்தரிவைத் தன்னைப் பயித்தியக்காரனுக்குகிறவனுக்கு விற்றுப் போட்டான். எது சரி என்பது பற்றிய புத்தி அவனுக்கில்லை. Ev. 529. CCh 614.3

நமது சிருஷ்டி கர்த்தா தாராள கரத்தோடு தமது சம்பூரணத்தை மனிதன் மேல் பொழிந்தருளினார். இந்த எல்லா தேவ ஈவுகளும் ஞானமாகவும் மிதமாகவும் உபயோகிக்கப் படுமாகில், தரித்திரம், வியாதி, மனச்சஞ்சலம் முதலியவை பூமியிலிருந்து கிட்டத்தட்ட அகற்றப்பட்டுப்போம். ஆனால் ஐயோ, தேவனுடைய ஆசீர்வாதங்கள் மனிதருடைய துன்மார்க்கத்தினால் சாபமாக மாற்றப்படுவதை நாம் எப்பக்கத்திலும் காண்கிறோம். CCh 615.1

நிலத்தின் விளைவு பொருட்களை வெறியூட்டும் மதுபானங்களாக உற்பத்தி செய்ய உபயோகிப்பவர்களை விட, தேவனுடைா விலையேறப் பெற்ற ஈவுகளைக் கெடுக்கும் மாபெரும் மாறுபாடான குற்றவாளி வகுப்பினர் வேறு ஒருவருமில்லை. போஷணைச் சத்துள்ள தானியங்கள், ஆரோக்கியமுள்ள, உருசியுள்ள பழங்கள், மூளையை வெறிக்கச் செய்து, புத்தியை மாறுபாடாக்கும் பாணங்களாகச் செய்யப்படுகின்றன. இந்நச்சுக்களை உபயோகிப்பதின் மூலமாக ஆயிரக் கணக்கான இல்லங்களில் சுகவாழ்வும் அன்றாட அப்பமும் கூட பறி போய் விடுகின்றது. பலாத்காரச் செயல்களும் பன்மடங்கு அதிகரித்து நோயும், மரணமும் சேர்ந்துகொள்ளவே பல இலட்சக் கணக்கானவர்கள் ஒரு குடிகாரனின் மரணத்தை அடைகின்றனர். CCh 615.2