Go to full page →

வெறி தரும் மது CCh 615

வெறி தரும் மதுவை உபயொகிப்பதற்கு வேதாகமம் ஓரிடத்திலும் அனுமதி அளித்ததில்லை. கானா வூரில் நடந்த கலியாணத்தின் போது தண்ணீரை இயேசுவானவர் திராட்சரசமாக்கின பொழுது, அது பழக்கத்திலிருந்து பிழிந்த புது திராட்சரசமாகவே இருந்தது. ஒரு திராட்சக் குலையில் இரசம் காணப்படும் போது அதை அழிக்காதே. அதிலே ஆசீர்வாதம் உண்டு என்று வேதாகமம் கூறுகிற பிரகாரமாக இது ஆசீர்வாதமுடைய புதிய திராட்சரசமாயிருந்தது. ஏசா. 65:8. CCh 615.3

திராட்ச ரசம் பரியாசஞ்செய்யும். மதுபானம் அமளி பண்ணும்; அதினாலே மயங்குகிற ஒருவனும் ஞானவானமல்ல; ஐயோ யாருக்கு வேதனை? யாருக்கு துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தம் கலங்கின கண்கள். CCh 616.1

மதுபானம் இருக்கும் இடத்தில் தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந் தானே. CCh 616.2

மதுபானம் இரத்த வருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும் போது, நீ அதைப் பாராதே. அது மெதுவாய் இறங்கும். முடிவிலே அது பாம்பைப் போல் கடிக்கும், விரியனைப் போல் தீண்டும். நீதி. 20:1, 23:29-32. CCh 616.3

வெறி தரும் மதுவிற்கு அடிமையாகிவிட்ட ஒருவனின் இழிவை இதை விட அதிகமாக விவரிக்கும் சித்திரம் ஒருபொழுதும் வெளியாகியதில்லை. சிறைப்படுத்தி, ஈனமடையச்செய்து, தன்னுடைய நிர்ப்பந்தத்தைப் பற்றிய உணர்வு தோன்றும் காலையில் கூட கண்ணியினின்று விடுபடுவதற்கு அவன் சக்தியற்றவனாகி, அதைத் தொடர்ந்து தேடுகின்றான். நீதி. 23:35. CCh 616.4

புளிப்பேறிய திராட்ச ரசமும், பீர், மற்றும் இலந்தைப் பழரசபானமும் மிகுந்த போதையுடையவை. மதுபோன்ற வெறியைத் தருகின்றன. இவற்றைக் குடித்து பழக்கஞ் செய்யும் போது, இவற்றிலும் அதிகமாக போதையுடைய மது வகைகளின் மீது நாட்டம் உண்டாகின்றது. மிதக்குடிப்பள்ளிய்ல் மிஞ்சிக் குடிப்பதற்குப் பயிற்சி பெறுகின்றனர். லாகிரி வஸ்துக்களை உபயோகிப்பதினால் குடிகாரருடைய உடலில் தீங்கு விளைகிறதா என்று விவாதிக்க அவசியம் இல்லை. மாறிப்போன தோற்றமும் மயங்கின மனதும் உடையவர்கள், சக்தியற்றவர்களான மனிதர்கள்; யாருக்காக கிறிஸ்துவானவர் மரித்தாரோ, யாருக்காக தேவ தூதர்கள் புலம்புகின்றனரோ அந்த ஆத்துமாக்களை நாம் எவ்விடத்திலும் காணக்கூடும். தாங்கள் நாகரீகம் அடைந்தவர்களென்று மேன்மை பாராட்டுகிறவர்கள். அந்நாகரீகத்திற்கே கறையாக இருக்கின்றனர். அந்நாட்டின் வெட்கமாகவும், சாபமாகவும் அபாயமாகவும் இவர்கள் விளங்குகின்றனர். MH 302-333. CCh 616.5