Go to full page →

புகையிலை மெதுவாக ஏறும் விஷம் CCh 618

புகையிலையானது மெதுவாகவும் மறை முகமாகவும் உடலில் ஏறினாலும், அதுவும் கொடிய நஞ்சேயாகும். எந்த ரூபத்தில் அதை உபயோகித்தாலும் அது உடலைப் பாதிக்கும். அதன் விளைவுகள் மெதுவாகவும், கண்டுகொள்ளக் கூடாத விதமாகவும் இருப்பதால், அதின் உபயோகம் மிகவும் ஆபத்தானது. அது நரம்புகளைக் கிளர்ச்சியூட்டி, திமிரடையச் செய்கிறது. வெறியூட்டும் மதுவைக் காட்டிலும் மிகுந்த வல்லமை உடையதாக அது அதிக சூட்சமுடையது. பல சந்தர்ப்பங்களில் நரம்புகளை, மதுவைப் பார்க்கிலும் அதிகமாகத் தாக்குகிறது. இதின் விளைவை அகற்றுவது மிகவும் சிரமமானது. புகையிலை உபயோகிப்பதனால் உடலில் ஏற்படும் தீங்கு உடலிலிருந்து அகல்வது கடினமானது. புகையிலையின் உபயோகம் வெறியூட்டும் மதுவின் பேரில் தாகம் தோன்றச் செய்கிறது. புகையிலைப் பழக்கம் குடிப் பழக்கத்திற்கு அடி கோலியதாக பலருடைய அனுபவங்களிலிருந்து அறிகிறோம். புகையிலையின் உபயோகம் அசெளகரியமும், செலவும் உண்டுபண்ணுகின்ற அசுத்தமான பழக்கமாக இருப்பதால், உபயோகிக்கின்றவரை தீட்டுப்படுத்தி, பிறருக்கு அருவருப்பை உண்டுபண்ணுகிறது. CCh 618.2

புகையிலையின் உபயோகத்தால் சிறுவர், இளவயதினரின் உடலில் சொல்லொணா தீங்கு விளைகிறது. பையன்கள் மிகுந்த இளம் பிராயத்திலேயே புகையிலையை உபயோகிக்க ஆரம்பிக்கின்றனர். இவ்வாறு உடலிலும், மனதிலும் அதின் விளைவுகள் பதியக் கூடியதாயிருக்கும் பொழுது, பழக்கம் ஏற்பட்டு, உடல் பலம் கெட்டு, சரீரம் குன்றி, மனமயக்கமுண்டாகி, சன்மார்க்கம் கெடுகின்றது. MH 327-329. CCh 619.1

வாரிசுபடியே இதில் பிரியம் தோன்றினாலொழிய, புகை இலையின் மீது இயற்கையான பிரியம் தோன்ற வழியில்லை. CCh 619.2

தேயிலையும் காப்பியும் உபயோகிப்பதால் புகையிலைப் பிரியமும் உருவாகின்றது. CCh 619.3

காரப் பொருட்களும், லவங்கம் முதலிய வாசனைச் சரக்குகளும் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வயிற்றில் கிளர்ச்சியை உண்டுபண்ணி, ரத்தம் கெட்டு, மேலும் பல மான கிளர்ச்சியை யூட்டும் பானங்களை நாட வழிதிறக்கின்றது. TE 56, 57. CCh 619.4

தங்கள் பிள்ளைகளுக்கு நன்றாக தாளிதம் பண்ணின இறைச்சி உணவையும், காபியையும், தேயிலையும் அளிக்கும் அன்னைமார் புகையிலை போன்ற விசைப் பொருட்களின் மீது அவர்களுக்கு நாட்டம் ஏற்பட் வழி திறக்கிறார்கள். புகையிலை உபயோகிக்கும் போது, மது உபயோகிக்க நாட்டம் ஏற்பட வழி திறக்கின்றது. 3T 488, 489. CCh 620.1