Go to full page →

புகைய்லையின் உபயோகம் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தீங்கு விளைவிப்பதாகும் CCh 620

புகையிலைப் குழாயினாலும், சுருட்டினாலும், புகையிலை உபயோகிப்பவர் விட்ட சுவாசத்தினாலும் உண்டான நஞ்சாகிய காற்றை உட்கொள்ளுவதினால், பெண்களும் குழந்தைகளும் துன்பமடைகின்றனர். இத்தகைய சூழ் நிலையில் வாழ்கின்றவர் நோயுடையவர்களாகவே இருப்பார். 5T 440. CCh 620.2

புகையிலை உபயோகிப் போர்ன் நுரையீரல்களிலும் சருமத்தின் துவாரங்களிலுமிருந்து வெளிப்படுகின்ற நச்சுக்காற்றைச் சுவாசிப்பதால், கைக் குழந்தையின் உடல் நஞ்சினால் நிரம்புகின்றது. சில குழந்தைகள் உடலில் நஞ்சு மெதுவாக பரவி, மூளையும் இருதயத்தையும் கல்லீரலையும் நுரையீரலையும் பாதிக்கிறது. குழந்தைகள் மெலிவடைந்து, படிப்படியாக வதங்கிப் போகின்றனர். வேறு சில குழந்தைகளில் உடலிலோ இழுப்பு, வலிப்பு, திமிர்வாதத்தையும் உண்டுபண்ணி, சடுதி மரணம் சம்பவிக்கவும் செய்கிறது. புகையிலைப் பழக்கத்திற்கு அடிமைப்பட்ட ஒருவன் விடும் மூச்சு அவனைச் சுற்றியிருக்கிற காற்றை நஞ்சாக்குகிறது. Te 58, 59. CCh 620.3

இக்காலத்தில் வாழும் குழந்தைகளையும் இளைஞரையும் கடந்த தலைமுறையின் ஆரோக்கியமற்ற பழக்கங்கள் பாதிக் கின்றன. மனோதிடன் குறைவு, உடல் பலவீனம், நரம்புகளின் இயக்கத்தில் ஒழுங்கின்மை, இயற்கைக்குப் பொருந்தாத நாட்டங்கள் பரம்பரைச் சொத்தாகப் பிள்ளைகளுக்கு பெற்றோரிடமிருந்து கிடைக்கிறது. பிள்ளைகளும் அதே பழக்கங்களில் தொடர்ந்து பழகி, தீங்கை அதிகரிக்கச் செய்து அதை நிலை நாட்டுகின்றனர். MH 328. CCh 620.4