Go to full page →

தேயிலையும் காபியும் உடலுக்கு போஷணை அளிப்பதில்லை CCh 621

தேயிலை விசையூட்டுகின்றது. ஓரளவு போதையையும் உண்டுபண்ணுகிறது. பிரபலமாகவிருக்கும் வேறு பல பானங்களின் இயல்பும் இதுவே. அவற்றை உட்கொண்டவுடனே முதலில் உற்சாகம் தோன்றும். வயிற்றின் நரம்புகள் கிளர்ச்சியடைகின்றன. இவை மூளையை உறுத்துகின்றனர். மூளை இருதயம் வேகமாக வேலை செய்வதற்கு தூண்டுதல் அளிக்கின்றது. உடல் முழுவதிலும் சிறிது நேரமே உற்சாகம் தோன்றுகிறது, களைப்பு தோன்றுவதில்லை. பலம் அதிகரிப்பதுபோல் காணுகின்றது. மூளை உற்சாகமும் மனோராஜ்யம் தீவிரமுமடைகின்றது. CCh 621.1

இவ் விளைவுகளால் காபியும், தேயிலையும் தங்களுக்கு பலன் செய்வதாகப் பலர் எண்ணுகிறார்கள். ஆனால் இது தவறு. காபியும், தேயிலையும் உடலை வளர்ப்பதில்லை. ஜீரணமாகி, உடலில் தேயிலை சேரு முன்பு இவ்விளைவு ஏற்படுகின்றது. பலம் தோன்றியதாக கருதுவது நரம்புகாள் கிளர்ந்தெழுந்ததினாலேயே. தேயிலையின் விசை மடிந்த உடனேயே, அசாதாரணமான இவ்வலு குறைந்து, அந்த அளவிற்கு அசதியும் பலவீனமும் தோன்றும். தொடர்ந்து இத்தகைய நரம்பிற்கு விசையூட்டும் பொருட்களை உபயோகிப்பதால் தலைவலி, தூக்கமின்மை, அஜீரணம், நடுக்கம் மற்ற வேறு தீங்குகளும் உண்டாகின்றன. ஏனெனில் இவ்விசைப் பொருட்கள் ஜீவசக்திகளை களைத்துப் போகச் செய்கின்றன. களைத்துப் CCh 621.2

போன நரம்புகள் அதிகப்படியான வேலை செய்வதற்கும் விசையூட்டப்படுவதற்கும் பதிலாக அமைதியும் ஓய்வும் பெற வேண்டும். MH 326, 327. CCh 622.1

சிலர் பின்வாங்கிப் போய், காபி தேயிலையுடனே தவறான தொடர்பு பூண்டிருக்கிறார்கள். ஆரோக்கிய பிரமாணங்களை மீறுகிறவர்கள் குருடராகி, கடவுளுடைய பிரமாணத்தையும் மீறுகிறார்கள். 5T 80. CCh 622.2