Go to full page →

ஞாயிறு ஆசரிப்புச் சட்டம் CCh 670

பரலோகத்தோடு இணைப்புள்ளதாகக் காட்டும் ஆட்டைப் போன்ற மார்க்க வல்லமை தனது கிரியைகள் மூலம் தான் பிசாசினால் ஏவப்பட்டு கையாளப்படும்-வலு சர்ப்பத்தின் இருதயமுடையதாகக் காண்பிக்கும். தேவனுடைய ஜனங்கள் ஏழாம் நாளைப் பரிசுத்தமாய் ஆசரிப்பதினால் உபத்திரவத்தின் கரம் தங்கள் மேல் நீட்டப்பட்டிருப்பதை உணரும் காலம் வருகிறது. தேவனுடைய ஒழுங்குத் திட்டத்தை தோல்வியுறச் செய்யும் நோக்கமாகச் சாத்தான் ஓய்வு நாள் மாறுதலை உண்டு பண்ணினான். உலகில் மானிட சட்டங்களுக்கு தேவ கற்பனைகள் கீழ்ப்பட்டவையென்று ஆக்கிவிட அவன் வகை பார்க்கிறான். காலங்களையும் பிரமாணங் களையும் மாற்ற எண்ணி, தேவனுடைய ஜனங்களை ஒடுக்கின பாவ மனுஷன் வாரத்தின் முதல் நாளே ஆசரிக்கும்படியான கட்டளையை அமல் நடத்துவான். ஆனால் தேவனுடைய ஜனம் அவருக்காக உறுதியுடன் நிற்க வேண்டும். தேவர்களுக்கும் மேலான தேவன் என தம்மைக் காண்பிக்கும்படி க்ர்த்தர் அவர்களுக்காகக் கிரியை செய்வார். CCh 670.2

மருள விழுந்த கிறிஸ்தவ உலகம் வாரத்தின் முதல் நாள் ஆசரிப்புக்கான சட்டத்தைப் பிறப்பிக்கும். ஞாயிறு பாப்பு மார்க்கத்தின் ஏற்பாடேனக் கிறிஸ்தவ உலகம் அதை தேவனுடைய பரிசுத்த இளைப்பாறும் நாளுக்கு மேலாக உயர்த்திக் காட்டும். அதற்கு தேவனுடைய ஜனம் வணக்கம் செலுத்தவே கூடாது. அதை அஞ்சாமையுடன் எதிர்த்துக் கொள்ளும் பொழுது தேவ சித்தத்தைச் செய்வதாக விராமல் கசப்பான குரோதத்தை உண்டுபண்ணி விடுகிறார்கள். எதிர்ப்பை விட்டு நீங்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார் என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்று ஆசிக்கிறேன். எழுப்பப்பட்ட கசப்பான குரோதத்தின் காரணமாக சத்தியத்தை பிரசித்தப்படுத்துவது கூடாத காரியமாகி விடுகிறது. ஞாயிறு ஆசரிப்பை எதிர்த்து அந்த நாளில் அச் சட்டத்தை அவமதிக்க வேண்டாம். ஓரிடத்தில் இவ்விதம் செய்து நீங்கள் அவமானப்படுத்தப்பட்டால் அடுத்த இடத்திலும் அங்ஙனமே செய்வார்கள். கிறிஸ்துவுக்குச் சாதகமானவைகளைச் செய்ய ஞாயிற்றுக்கிழமையை பயன்படுத்தலாம். நாம் செய்யக் கூடியவைகளை சாந்தத்துடனும், எல்லாப் பணிவுடன் செய்ய வேண்டும். CCh 671.1

ஞாயிற்றுக் கிழமையைச் சுவிசேஷ வேலைக்கென செலவிடும் போது, அதைக் கையாள வைராக்கியம் கொண்டுள்ளவர்களின் கரத்திலிருந்து சவுக்கு எடுத்தப் போடப்படும். ஏழாம் நாள் அட்வென்டிஸ்தரை கேவலப்படுத்துவதே அவர்களது வாஞ்சை. ஞாயிறு தினத்தில் ஜனங்களைச் சந்திக்கவும், வேத பாடம் கொடுக்கவும் செய்வதை அவர்கள் அறிந்து, நமக்கு விரோதமாக வேலையைத் தடைசெய்யும் நோக்கமுடன் ஞாயிறு ஆசரிப்புக்கான சட்டம் பிறப்பிப்பது பயனற்றதென அறிந்து கொள்ளுவார்கள். CCh 671.2

கர்த்தருக்கென சாதிக்கும் அனேக வகை அலுவல்களை ஞாயிறன்று நடத்தலாம். அந்த நாளில் வெளிப் பிரசங்கம் செய்யலாம். வீடு வீடாகச் சென்று சுவிசேஷ வேலை செய்யலாம், ஜெபக் கூட்டம் நடத்தலாம். அந்த நாளில் நல்ல கட்டுரைகள் எழுதலாம். கூடுமான பொழுதெல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில் மார்க்க சம்பந்தமான ஆராதனைகள் நடத்தலாம். இக்கூட்டங்களை அதிக விரும்பப்படத்தக்கவை ஆக்குங்கள். எழுப்புதல் ஊட்டும் பாடல்களைப்பாடி, இரட்சகரின் அன்பில் நம்பிக்கை யூட்டும் விதமாக வல்லமையோடு பேசுங்கள். மெய்க் கிறிஸ்துவ அனுபவங்கள், மதுவிலக்கு இவைகளைப் பற்றிப் பேசுங்கள். இவ்விதம் ஊழியம் எப்படி செய்யலாமென கற்றுக்கொள்ளலாம். அனேக ஆத்துமாக்களையும் ஆதாயம் செய்யலாம். CCh 672.1

நமது பாடசாலையிலுள்ள ஆசிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை மிஷனெரி வேலை செய்வார்களாக. இவ்விதம் அவர்கள் செய்யும்போது சத்துருவின் நோக்கங்களை தோல்வியுறச் செய்யலாமென்று எனக்குச் சொல்லப்பட்ட்து. சத்தியம் அறியாதவர்களிடம் மாணவரை அழைத்துச் சென்று, ஆசிரியர்கள் கூட்டங்கள் நடத்தலாம். வேறு வழியில் செய்யக்கூடாத அளவுக்கு இவ்வழியில் அவர்கள் அதிகம் செய்து முடிக்கலாம். CCh 672.2

தெளிவான சத்தியங்களை நேர்மையுடன் ஜனங்களுக்குக் கொடுங்கள். ஆனால் இச்சத்தியங்களைக் கிறிஸ்துவின் ஆவியுடன் எடுத்துக் காட்ட வேண்டும். ஓனாய்களிடம் உள்ள ஆடுகளைப் போன்று நாம் இருக்க வேண்டும். சாந்தம், தன்னடக்கம் இவைகளை அப்பியாசிக்காதவர்கள் கிறிஸ்துவினிமித்தம் இந்த எச்சரிப்புகளைக் கவனித்துச் செய்யாவிடில், எஜமானுக்காக வேலை செய்யக் கூடிய அரிய சந்தர்ப்பங்களை இழந்து விடுவார்கள். தேவ கற்பனைகள் மீறி நடக்கிறவர்களுக்கு எதிராக வசை பேசும் வேலையை தம் மக்களுக்குக் கர்த்தர் கொடுக்கவில்லை. மற்றச் சபைகளை எக்காரணங்களைக் கொண்டும் தாக்கக்கூடாது. CCh 672.3

வேத ஓய்வு நாளுக்கு எதிராகவும், நமது வேலைக்கு விரோதமாகவும் இருக்கிறவர்களின் மனதினின்று துவேஷங்களை நீக்குவதற்கு நாம் செய்யக்கூடிய யாவையும் செய்ய வேண்டும். CCh 673.1

வேத ஓய்வு நாளுக்கு எதிராகவும், நமது வேலைக்கு விரோதமாகவும் இருக்கிறவர்களின் மனதினின்று துவேஷங்களை நீக்குவதற்கு நாம் செய்யக்கூடிய யாவையும் செய்ய வேண்டும். 9T 229-238. CCh 673.2