Go to full page →

அத்தியாயம்-58 CCh 674

சாத்தானின் வஞ்சக வேலை CCh 674

பொல்லாத தூதர்கள் ஆத்துமாக்களுக்காகப் போராடுவதையும், தேவதூதர்கள் அவர்களைத் தடுப்பதையும் நான் கண்டேன். போராட்டம் கடுமையாகவிருந்த்து. பொல்லாத தூதர்கள் விஷம் நிறைந்த தங்கள் செல்வாக்கினால் ஆகாயத்தைக் கெடுத்து, ஆத்துமாக்களின் பொறிகளை உணர்ச்சியற்றதாக்கும் விதம் அவர்களைச் சூழ நெருக்கினார்கள். சாத்தானின் படைகளை விரட்டியடிக்க பரிசுத்த தூதர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். மானிடரின் சித்தத்திற்கு மாறாக அவர்களின் மனதை கட்டுப்படுத்துவது நல்ல தூதர்களின் அலுவல் அல்ல. சாத்தானை எதிர்க்க முயற்சி செய்யாமல், அவனுக்கு இடங்கொடுத்தால், தேவதூதர் அவர்களுக்காகச் செய்யக் கூடியதெல்லாம் சாத்தானின் படைகளைத் தடுத்து நிறுத்தி, அவர்களை அழித்துப்போடாதபடி கவனித்து, அந்த அழிவில் நிற்கும் மக்களுக்கு அடுத்தபடியாக வெளிச்சம் கொடுக்கப்படும் வரை அவர்களைத் தட்டி எழுப்பி, உதவிக்காகப் பரலோகத்தை நோக்கிப் பார்க்கும் படியாகச் செய்வதே. தன்னில் தானே முயற்சி செய்யாத ஆத்துமாக்களுக்கு விடுதலையளிக்க இயேசு பரிசுத்த தூதர்களுக்குக் கட்டளையிடார். CCh 674.1

ஒரு ஆத்துமாவைத் தன் பிடியிலிருந்து நழுவவிடும் அபாயத்தைச் சாத்தான் பார்த்த மாத்திரத்தில் அவன் அந்த ஆத்துமாவைத் தன்னிடமே வைத்து கொள்ளத் தன் முழு சக்தியையும் பிரயோகிக்கிறான். அந்த ஆத்துமா தன் ஆபத்தைக் கண்டு, மனச் சஞ்சலத்தோடு ஊக்கமாக பெலனுக்காக இயேசுவை நோக்கிப்பார்க்கும் போது, சாத்தான் தனது அடிமையை இழக்கப் போகிறோமென்ற பயத்தால் அதிகப்படியாக தன் தூதர்களை அழைத்து, அந்த ஆத்துமா வைச் சூழ்ந்து கொண்டு, அவனைச் சுற்றிலும் இருண்டமதில் போல் அமைந்து, பரலோக ஒளி அவனிடம் வீசாதபடி தடுத்து விடுகிறான். ஆனால் அந்த ஆபத்திற்குட்பட்ட ஆத்துமா விடாமுயற்சியாக உதவியற்ற தனி நிலையில் கிறிஸ்துவின் இரத்த்த்தின் புண்ணியங்களில் சார்ந்து நின்றால், நமது இரட்சகர் அவ் விசுவாச மன்றாட்டினைக் கேட்டு அதிகப்படியாக பலத்த சவுரியவான்களான தமது தூதர்களை அனுப்பி, அவனை விடுவிக்கிறார். CCh 674.2

கிறிஸ்துவுக்கு அபயமிடுவதைப் பார்க்க சாத்தான் சகிக்கமாட்டான்; ஏனெனில் இயேசுவின் வல்லமைக்கும், மாட்சிமைக்கும் முன் அவன் பயந்து நடுங்கி விடுகிறான். ஊக்கமான ஜெபத்தின் தொனி கேட்க, சாத்தானின் சர்வ சேனை நடுங்குகிறது. தனது நோக்கத்தை நிறைவேற்ற அவன் லேகியோனான தனது பொல்லாத தூதர்களை அழைத்தவண்ணமிருக்கின்றான் பரம ஆயுத ஆடை அணிந்த சர்வ வல்ல தூதர்கள், களைப்புற்று, விரட்டப்படும் ஆத்துமாவுக்கு உதவி செய்ய விரைந்து வரும்போது, சாத்தானும் அவன் பரிவாரங்களும் தங்கள் போராட்டம் தோல்வியடையும் என்பது தெரிந்து பின் வாங்கி விடுகின்றனர். சாத்தானின் மக்கள், ஊக்கம், ஐக்கியம் உடையவராக் இருக்கின்றனர். அவர்கள் ஒருவரையொருவர் பகைக்கிறவர்களும், சண்டை பண்ணுகிறவர்களுமாயிருந்த போதிலும், அவர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி அவர்களது பொது நோக்கத்தை முன்னேற்றமடையச் செய்கின்றனர். பரலோகத்திற்கும், பூலோகத்திற்கும் பிரதமதளபதியாயிருக்கிறவர் சாத்தானின் வல்லமைக்கு எல்லை வைத்திருக்கிறார். 1T 345, 346. CCh 675.1