Go to full page →

பரலோகப் பாதுகாப்பினின்று விலகுவது அபாயம். CCh 675

கடமையின் வழியில் செல்லும் தேவனுடைய மக்களைத் தூதர்கள் பாதுகாக்கின்றனர். ஆனால், சாத்தானின் சோதனைக்குள் துணிகரமாய்ப் பிரவேசிக்கிறவர்களுக்குப் பரலோக் பாதுகாப்பின் வாக்குறுதி கிடையாது. பெரிய மோசக்காரனின் பிரதிநிதியானவன் தன் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக எதையும் பேசிச் செய்யக் கூடும். அவன் தன்னை ஆவேச மார்க்கத்தான், அல்லது மின்சாரவைத்தியன், அல்லது மாய பரிகாரி என எப்படிப்பேரிட்டு அழைத்தாலும் சரி, அவன் இவ்வகையான பிரத்தியேக வஞ்சகத்தினால் சாவதானமாக இருப்பவரின் நம்பிக்கையைக் கவர்ந்து விடுகிறான். தன்னைத் தேடி வருகிறவர்களின் ஜீவிய வரலாற்றையும், அதன் கஷ்டம், துன்பங்களையும் வாசிக்கமுடியுமென பாவனை செய்கிறான். ஒளியின் தூதனாகத் தன்னை மறைத்து வைத்து, தன் ஆலோசனையைத் தேடி வரும் பெண்களிடம் பெரிய ஆர்வம் காண்பிக்கிறான். அவர்களுடைய கஷ்டங்களுக்கெல்லாம் காரணம் அவர்களது விவாகப் பொருத்த மின்மை என்று சொல்லி விடுகிறான். அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் அந்தப் படியான ஆலோசனைக்காரன் அவர்கள் நிலையை மேம்பாடடையச் செய்வதில்லை. அவர்களிடம் அன்பு, அனுதாபம் தேவை படுகிறது என்று கூறுகிறான். அவர்களுடைய வாழ்வில் அக்கரை காட்டி, சர்ப்பம் பறவையை வசீகரித்து அவர்களை வசப்படுத்துகிறான். நாளடைவில் அவர்கள் பூரணமாகக் அவன் அதிகாரத்திற்குட்பட்டு விடுகின்றனர். பாவம், அவமானம், சீரழிவே அவர்களின் பயங்கர முடிவு. CCh 675.2

இவ்வித அக்கிரமத்தின் ஊழியர்கள் சிலர் மட்டுமல்ல. அவர்களின் பாதை சீரழிந்த குடும்பங்களாலும், சிதைந்த செல்வாக்குகளாலும், உடைந்த உள்ளஙகளாலும் கறைபட்டுக் கிடக்கின்றது. ஆனால் இவைகளை உலகம் அறியாது; அவர்கள் தொடர்ந்து புதியவைகளைப் பிடித்துக் கொள்ளுகின்றனர். தான் கொண்டுவரும் இந்த அழிவு நிலை கண்டு சாத்தான் பெருமையடைகின்றான். 5T 198. CCh 676.1

“அகசியா சமாரியாவிலிருக்கிற தன் மேல் வீட்டிலிருந்து கிராதியின் வழியாய் விழுந்து, வியாதிப்பட்டு: இந்த வியாதி நீங்கிப் பிழைப்பேனோ என்று எக்ரோனின் தேவனாகிய பாகால் சேபூபிடத்திற்குப் போய் விசாரியுங்களென்று ஆட்களை அனுப்பினான். கர்த்தருடைய தூதன் திஸ்பியனாகிய எலியாவை நோக்கி: நீ எழுந்து, சமாரியாவுடைய இராஜாவின் ஆட்களுக்கு எதிர்ப்படபோய்: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீங்கள் எக்ரோனின் தேவனாகிய பாகால் சேபூபிடத்தில் விசாரிக்கப் போகிறீர்கள்? இதினிமித்தம் நீ ஏறின கட்டிலிருந்து இறங்காமல், சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை அவர்களோடே சொல் என்றான்; அப்படியே எலியா போய்ச் சொன்னான்.” 2 இராஜா. 1: 2-4. CCh 677.1

அகசியா ராஜாவின் சரித்திரத்தில் அவன் செய்த பாவம், அதற்கான தண்டனை நமக்கு ஒரு பாடமாகவும் எச்சரிப்பாகவும் இருக்கிறது; அதை ஒருவராவது அலட்சியமாக தீங்கற்றதென எண்ணலாகாது. அஞ்ஞான தெய்வங்களை நாம் வழிபடாவிடினும், இஸ்ரவேலின் ராஜாவைப் போன்று ஆயிரக்கணக்கானோர் சாத்தானின் பீடத்தண்டை ஆராதனை செய்கிறார்கள். விக்கிரகாரதனையின் ஆவி இன்று பிரபலமாயிருக்கின்றது. கல்வி விஞ்ஞானத்தின் செல்வாக்கினால் அது மிக கவர்ச்சிகரமான மெருகு பெற்ற உரு பெற்றிருக்கிறது’ தீர்க்கதரிசன வார்த்தையில் விசுவாசம் குறைந்து, மூட நம்பிக்கையும் சாத்தானின் மாய வித்தையும் மனிதனின் மனதை ஆட்கொள்ளுவதைக் காட்டும் துக்க்கரமான அத்தாட்சி தினமும் அதிகரிக்கிறது. வேதவாக்கியங்களை ஊக்கமாக ஆராயாதவர்களனைவரும், ஜீவியத்தின் வாஞ்சைகளையும், நோக்கங்களையும், தவறாத பரீட்சைக்கு ஒப்புக்கொடாதவர்களும், தேவ சித்தத்தை அறிவதற்காகத் தேவனை ஜெபத்தின் வாயிலாகத் தேடாதவர்களும், நேரான வழியை விட்டு அலைந்து திரிந்து, சாத்தானின் தந்திரத்தில் விழுவார்கள். CCh 677.2

எபிரேயர் மட்டும் மெய்த் தெய்வத்தைப் பற்றிய அறிவைப்பெறும் சிலாக்கியம் பெற்றிருந்தனர். இஸ்ரவேலின் அரசன் அந்நிய தேவனிடம் சன்னதம் கேட்கப்போனது, வானத்தையும் பூமியையும் உண்டுபண்ணின சிருஷ்டிகரான, இஸ்ரவேலின் தேவனைக் காட்டிலும், விக்கிரகங்களின் பேரில் அவனுக்கு அதிக நம்பிக்கை உண்டு என்று விளம்பரப்படுத்துவதாயிருந்தது. அதே போன்று தேவனுடைய வசனத்தின் அறிவையுடையவரெனக் காட்டும் ஜனம், பெலனுக்கும், ஞானத்திற்கும், ஊற்றான அவரிடம் கேட்காமல், அந்தகார வல்லமைகளிடம் உதவி அல்லது ஆலோசனை கேட்டுப் போகிறார்கள். துன்மார்க்க, விக்கிரக ஆராதனைக்கார அரசன் பேரில் தேவ கோபம் மூண்டதானால், அவருடைய ஊழியக்காரர்கள் அப்படிபட்ட ஒரு போக்கில் சென்றால், அவர்களை அவர் எப்படிக் கருதுவார்? 5T 191, 192, 196. CCh 678.1