Go to full page →

ஓய்வுநாள் முடிவான பிரச்சினையாக மாறும் CCh 707

உலகம் முழுவதும் பங்கு கொள்ளும் முடிவான பெரும் போராட்டத்தில் ஓய்வுநாள் பிரச்சினை முடிவானதாகும். பரத்தின் ஆட்சியை ஆண்டு நடத்தும் இலட்சியங்களையே கனம் பண்ணி வருகின்றனர். தன்னுடைய அதிகாரத்திற்கு அடையாளமாக சாத்தான் கொண்டாடும் கள்ள ஓய்வுநாளை ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். என்ற போதிலும் கடவுளுடைய ராஜரீகப் பிரமாணத்தின் பேரில் அவருடைய முத்திரை விளங்குகின்றது. CCh 707.1

கட்டளையிடப் பெற்ற ஒவ்வொரு ஓய்வுநாளும் அதின் சிருஷ்டி கர்த்தருடைய நாமத்தையும் அதிகாரத்தையும் பெற்றிருக்கின்றது. இரண்டிலும் அழிக்க முடியாத அடையாளங்கள் பதிந்துள்ளன. ஜனங்கள் இதை அறிந்துணருமாறு செய்வது நம்முடைய அலுவல். கடவுளுடைய இராஜ்யத்தின் அடையாளத்தையோ அன்றி கலகக்காரரின் இராஜ்யத்தின் அடையாளத்தையோ தரித்தவர்களாயிருப்பது மகா முக்கியமான விளைவைக்கொண்டு வருமென்று அவர்களுக்கு நாம் விளக்க வேண்டும். கால்களின் கீழே தள்ளப்பட்டு மிதிக்கப்படுகின்ற தம்முடைய ஓய்வுநாளின் நிலையை உயர்த்துமாறு நம்மைத் தெய்வம் கேட்டுக்கொள்ளுகின்றார். 6T 325. CCh 707.2

கடந்த யுகங்களிலே தங்கள் விசுவாசத்திற்கு உண்மை யாகவிருந்தவர்களுக்கு விரோதமாகச் சதி செய்து வந்த்தும், தந்திரங்களில் தேர்ந்ததுமான பிசாசு, தெய்வதிற்குப் பயந்து, அவருடைய பிரமாணத்திற்கு கீழ்ப்படிகிறவர்களை இவ்வுலகை விட்டு அகற்றுவதற்குப் பிரயத்தனங்கள் செய்து வருகின்றது. மனசாட்சியின் உணர்வினால் பிரபல்யமாக விளங்கும் வழக்கங்களையும் சம்பிரதாயங்களையும் பின்பற்றுவதற்கு மறுக்கின்ற தாழ்மையுடைய சிறு பான்மையோருக்கு எதிராகக் கோபத்தையும் வெறுப்பையும் சாத்தான் எழுப்புவான். தேவனுடைய ஜனத்திற்கு விரோதமாக உயர் பதவியும் கீர்த்தியுமுடையோர் பிரமாணத்தை மீறுகிறவர்களுடனே கலந்தாலோசிப்பர். அவர்கள் மீது நிந்தை சுமரும்படியாக ஐசுவரியமும் விசேஷித்த மூளைத் திறனும், கல்வியுமுடையோர் ஒன்றுபடுவர். சபையைத் துன்பப்படுத்துகின்ற அதிபதிகளும் போதகர்களும் சபை அங்கத்தினரும் அவர்களுக்கு விரோதமாகச் சதி செய்வார்கள். மேடையிலிருந்தும் பேனாமுனையிலிருந்தும் மேன்மை பாராட்டுதலினாலும். பயமுறுத்தலினாலும் பழிப்பினாலும் அவர்களுடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப் போடுவதற்கு முயற்சிப்பார்கள். அவர்கள் செய்வதற்கும் பேசுவதற்கும் பொய்யான பல விளக்கங்கள் அளித்து, கோபாவேசத்துடனே வேண்டுதல்கள் செய்து, ஜனங்களுடைய கோபதாபங்களை எழுப்புவார்கள். வேதாகம ஓய்வு நாளை வலியுறுத்தும் கூட்ட்த்தாருக்கு விரோதமாக “வேதவாக்கியங்களில் உரைக்கப்பட்டபடியே” என்று கூறி விளக்கம் கொடுக்க ஆதாரம் இல்லாததால், அக்குறைவைப் போக்குவதற்கு அடக்கு முறை செய்ய வழி வகை தேடுவர். பிரபலமாகவிருப்பதற்கும் ஆதரவு நாடியும் சட்டசபை அங்கத்தினர்கள் ஞாயிறு சட்டம் இயற்றுவதற்கு சம்மதப்படுவார்கள். பத்துக் கற்பனைகளுள் ஒன்றை மீறும் சட்டத்தைத் தெய்வ பயமுடையோர் அங்கீகரிக்கமாட்டார்கள். மொர்தெகாயின் நாட்களில் நாட்களில் நடந்தது போலவே, தம்முடைய ஜனத்தின் நியாயத்தையும் சத்தியத்தையும் எடுத்துக் காட்டுமாறு கர்த்தர் எழும்புவார். 5T 450,451. CCh 708.1