Go to full page →

புயலுக்கு ஆயத்தமாகுதல் CCh 709

தம்முடைய ஜனமானது எதிர்ப்பும் கொந்தளிப்புமாகிய பயலை எதிர்த்து நிற்க ஆயத்தமடையுமாறு முடிவு நாட்களிலே நடக்கப் போவதை தெய்வம் அறிவித்திருக்கின்றார். தங்கள் முன்பாக நடைபெறப் போகும் சம்பவங்களைக் குறித்து எச்சரிப்படைந்துள்ளவர்கள் தமக்கு உண்மையாக விருப்பவர்களை உபத்திரவம் தோன்றும் நாளிலே கர்த்தர் பாதுகாத்துக் கொள்ளுவாரென்று கூறித் தங்களை ஆறுதல் படுத்திக் கொண்டு, புயலை அமைதியுடனே எதிர்பார்த்துக் காத்திருப்பது கூடாது. கர்த்தரை எதிர் பார்த்துக் காத்திருந்து சோம்பலாகவிராமல், அசையாத விசுவாசத்துடனே ஊக்கமுள்ள கிரியையை நாம் நடப்பித்து வர வேண்டும். முக்கியமல்லாத வற்றினால் நம்முடைய மனம் பாரமடையுமாறு நாம் விட்டு விடக்கூடாது. மனிதராகிய நாம் இவ்வாறு நித்திரை செய்யும் பொமுது, கர்த்தருடைய ஜனம் இரக்கமும் நியாயமும் பெறாமலிருக்கத்தக்கதாக சாத்தான் சுறு சுறுப்பாகக் காரியங்களை ஏற்பாடு செய்து வருகின்றான். இருளின் நடுவே ஞாயிறு இயக்கமானது முன்னேறிச் செல்லுகின்றது. காரியத்தின் உண்மையைத் தலைவர்கள் மறைத்து வைத்திருப்பதால் அவ்வியக்கத்துடனே ஐக்கியப்படுகின்றவர்கள் தாங்கள் கொண்டுள்ள நிலை வேதாகமத்திற்கு சார்புடையது தானாவென்று அறியாதிருக்கின்றனர். அந்நிலை ஆட்டுக்குட்டியைப் போன்று சாதுத்தனமும் கிறிஸ்தவப்பெயரும் பெற்று விளங்குகின்றது. ஆயினும் அதன் பேச்சோ வலு சர்ப்பத்தின் ஆவியை வெளிப்படுத்துகின்றது. CCh 709.1

“மனுஷனுடைய கோபம் உமது மகிமையை விளங்கப்பண்ணும்; மிஞ்சுங் கோபத்தை நீர் அடக்குவீர் ” சங். 76:10. என்று சங்கீதக்காரன் கூறுகின்றான். அதின் மேல் சுமத்தப்படுகிற நிந்தையினாலாவது பரீட்சிக்கும் சத்தியமானது விவாதத்திற்கு கொண்டுவரப்பட்டு விவாதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட வேண்டுமென்று தெய்வம் விரும்புகின்றார். ஜனங்களின் மனமானது சத்தியத்தினாலே சலனமடைய வேண்டும். போராட்டம், நிந்தை, பழிதூற்றுதல் முதலிய யாவும் விழிப்பற்று நித்திரை மயக்கத்துடனிருக்கும் மனது விசாரித்தறிவதற்கு கடவுள் உபயோகிக்கும் வழிகளாக அமையும். 5T 452,453. CCh 710.1

கடவுள் நம்மிடத்திலே ஒப்புவித்திருக்கிற வேலையை ஒரு ஜனமாக நாம் நிறைவேற்றித் தீர்க்கவில்லை. ஞாயிறு சட்டம் அமல் நடத்தப் படும்பொமுது, நாம் எதிர் நிற்க வேண்டிய பிரச்சினையை சந்திப்பத்ற்கு நாம் ஆயத்தப்படாதிருக்கின்றோம். அபாயம் நெருங்கி வரும் அடையாளங்களை நாம் காணும் பொமுது, விழித்தெழும்பிக் கிரியை நடப்பிக்க வேண்டியது நம்முடைய கடமையாகவிருக்கினறது. தீர்க்கதரிசனம் நிறைவேறத் தக்கதாக இது நடைபெற வேண்டியதே என்று கூறித் தங்களைத் தேற்றி கர்த்தர் தம்முடையவர்களைப் பாதுகாப்பார் என்னும் நம்பிக்கையினாலே அமர்ந்து, தீமையை எதிர் நோக்கி ஒருவரும் காத்திருக்காதீர்கள். மனச்சாட்சிச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு நாம் ஒன்றுமே செய்யாமல் அமர்ந்திருந்தால் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றியவர்களாக மாட்டோம். இதுவரைக்கும் கைவிடப்பட்டிருந்த வேலையை நாம் நிறைவேற்றித் தீருமட்டாக இந்த உபத்திரவம் நிறுத்தி வைக்கப்படும் பொருட்டு ஊக்கமும் அனலுமுடைய ஜெபம் தெய்வத்தினிடமாக ஏறெடுக்கப்பட வேண்டும். சாத்தான் வெற்றி பெற்று, தவறுதலினாலும் பொய்ப் பிரசாரத்தினாலும் சத்தியம் அமிழ்த்தப்பட்டதாக நமக்குத் தோன்றும். அவர்களுடைய சத்துருக்களிடமிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கு தம்முடைய ஜனங்களிடத்தில் தெய்வம் நடப்பித்த அவருடைய கிரியைகளை நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டுமென்று தெய்வம் விரும்புகின்றார். சாத்தானுடைய கிரியைகளினின்று தப்புவதகு மார்க்கமே இல்லாதது போலத் தோன்றுகிற பொமுது, தம்முடைய வல்லமையை வெளிப்படுத்துவதற்கு அவர் அவர்களுடைய இக்கட்டுக் காலங்களையே தெரிந்து கொண்டுள்ளார். மனிதனுடைய தேவையைத் தெய்வம் தாம், அலுவல் நடப்பிப்பதற்கு ஏற்ற வேளையாக்குகின்றார். CCh 710.2

என் சகோதரரே, நாம் சந்திக்க வேண்டியதாக இருக்கின்ற பரீட்சையிலே வெற்றியுறுவதற்கு நாம் செய்யும் ஆயத்தத்தின் பேரிலே நமது இரட்சிப்பும் மற்றும் அனேக ஆத்துமாக்களுடைய இரட்சிப்பும் சார்ந்திருக்கின்றது. எதிர்ப்பு உங்களுக்கு நேராக வரும்பொழுது, நீங்கள் நிலை நிற்க கூடுமாறு உங்கள் வைராக்கியத்தின் ஆழமும், உங்களுடைய தேவதா பக்தியும், பிரதிஷ்டையும் அதற்கேற்றதாக இருக்கின்றதா? தெய்வம் என் மூலமாக உங்களிடத்திலே பேசியதுண்டானால், நீங்கள் ஆலோசனைச் சங்கங்களுக்கு முன்பாகக் கொண்டு போகப்பட்டு, நீங்கள் விசுவாசிக்கின்ற சத்தியங்களின் நிலை ஒவ்வொன்றும் மிக நுட்பமாக பிழை பார்த்தறியப்படும். இப்பொழுது அனேகர் வீணாகச் செலவிடும் நேரமானது நெருங்கி வரப்போகும் ஆபத்துக் காலத்திற்கு ஆயத்தமாகும் அலுவலுக்கென்று செலவிடப்பட வேண்டும் 5T 713-717. CCh 711.1